குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Friday, July 25, 2008

வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?' : முதல் கதை :)

வண்டு - சிண்டுவின் முதல்க் கதை :-).

வண்டு - சிண்டு 'இது என்ன கலாட்டா?'

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:



அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:



-------------------------------------------------------------------------------------------------
இதைப் பார்த்தவுடன் என் பிள்ளையின் கேள்விகள்:

பிள்ளை: Mom! Can i see it again?
நான் : சரி. பாரு.

பார்த்தபின்

பிள்ளை: Mom! I always tidy up. Am i a good boy?
நான் : ஆமா. டைடியப் பண்ணின நீ குட் பாய் தான்.

பிள்ளை: Did you clean up the kitchen?
நான் : Nope. I forgot.

பிள்ளை: If you tidy up, i will say u r a good girl. Can u do it now?
நான் : :-) சரி! இப்பவே செய்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------------

தங்கள் கருத்துகளையும் தங்கள் குழந்தைகளின் கருத்துகள், கேள்விகளையும் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைவேன். அடுத்த கதை இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 9-ஆம் தேதி. ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஒரு புதிய கதை.

அதுவரை, இந்தக் கதையைக் குழந்தைகள், எத்தனை முறை வேண்டுமானாலும், இங்கே வந்து வந்து பார்க்கலாம்.

நன்றி.

நான் வேலைக்குப் போகலாமா?????

அண்மையில் படித்த இரண்டு பதிவுகளின் பாதிப்பே இந்தப் பதிவு.

ஒன்று இந்த வார நட்சத்திரப் பதிவர், சந்தனமுல்லை அவர்களின் ‘நாங்களும் இந்திராநூயிக்களும்’.இன்னொன்று நானானி அம்மாவின் ‘அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள் காரில்'.

இருவேறுபட்ட இடங்களில் நடக்கும் இருவேறு சம்பவங்கள். ஒன்று (சந்தனமுல்லை), குழந்தைகளுக்காக அன்பைப் பொழியும், தன் நேரத்தை வேலைக்கும் வீட்டிற்கும் (சில நேரங்களில் தன் சக்தியையும் மீறிப்) பங்கிடும் பெற்றோரின் பதிவு. இது உண்மைச் சம்பவம் என்பதுற்குச் சான்று தேவையில்லை.

இன்னொன்று குமுதம் இதழில் வெளிவந்து உண்மையில் சென்னையில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவம்.நான் ஒரு குழந்தைக்குத் தாய், என்னும் வகையிலும் என் மனதைக் கலங்கடிக்கும் விஷயம். ஆனால் இது எவ்வளுவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இது நானானி அம்மாவின் பதிவைப் பற்றியது அல்ல. அவர்கள் நெஞ்சம் பதைபதைத்து, சற்றுக் கவனமாய் இருங்கள் என்ற பாசத்தில் எழுதிய பதிவே என்பது, அவரின் பதிவுகளைத் தொடர்ந்து படித்துவரும் எனக்குத் தெளிவாய்த் தெரிகிறது. நான் குமுதம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எனவே இந்தக் கட்டுரை, நானானி அம்மாவின் பதிவின் வாயிலாய் என் கண்ணில் பட்டது. அவ்வளவு தொடர்பே என்னுடைய இந்தப் பதிவிற்கும் அவர்களின் பதிவிற்கும் என்று சொல்லிவிட்டு, மேலே தொடர்கிறேன்.

இப்பொழுது குமுதத்தின் கட்டுரைக்கு வருவோம் (நான் இன்னும் இந்தக் கட்டுரையை நேரடியாய்ப் படிக்கவில்லை.). (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இந்தக் கட்டுரை(உண்மையாய் இருக்கும் பட்சத்தில்) எதைப்பற்றியது? வேலை மும்முரத்தில் குழந்தையைக் கவனிக்கத் தவறிய ஒருவரின் பொறுப்பற்றத் தன்மையைச் சொல்வதா?

பாராட்டி சீராட்டி வளர்த்த பிள்ளையை, வேலைப் பளுவிற்குப் பறிகொடுத்த சம்பவம் ஒன்று நடந்திருக்கின்றது, மக்களே சற்றுக் கவனியுங்கள் என்று இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து மக்களை நிதர்சனத்திற்குக் கொண்டு வரும் ஒன்றா?

சாஃப்ட்டுவேர் வேலையில் இருக்கும் பெற்றோரே! இது உங்களால்த் தான் நடக்கிறது, நீங்கள் பிடுங்கும் ஆணிகளிலாலேயே உங்களை அறைந்து கொள்ளுங்கள் என்று சொல்வதா?

எந்தப் பத்திரைக்கையிலும் வராத ஒன்று, எப்படிக் குமுதத்திற்கு மட்டும் தெரிந்தது?. நானானி அம்மாவின் பதிவில் ஒரு அனானியும் இதையேக் கேட்டு இருக்கின்றார். (சிகாகோ சம்பவம் எல்லாச் செய்தித்தொடர்பு சாதனங்களிலும் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.)

முதல் கேள்வி: இது ‘சென்னையில் நடந்தது’ என்று பரபரப்பிற்காக எழுதப் பட்ட ஒரு கட்டுரையா? ( (இதன் தொடர்பான பின் குறிப்பைப் பதிவின் கடைசியில் படிக்கவும்).

இரண்டாவது கேள்வி: ஒரு பெண் வேலைக்குச் செல்வதால், குழந்தைதகள் கவனிக்கப்பட்டாமல், அரவணைப்பில்லாமல் அவதிப்படுகிறார்கள் என்ற நிலை வரும் எனில், இதற்கு வழிதான் என்ன?

1. பெண்ணைப் பொறுப்பற்றவள் என்று குற்றம் சொல்லலாம்.

2. பெண்கள் வேலைகுச் செல்லவில்லை என்று யார் அழுதார்கள் என்று கேட்டு, அவர்களை வீட்டில் இருக்கச் சொல்லலாம்.

3. பெண்ணை(தாயை)த் தவிர , பிள்ளைகளைக் குடும்பத்தில் வேறு யாராலும் பார்த்துக்கொள்ள இயலாது, அவள் தெய்வம் என்று சென்டிமெண்டாய் அடித்து, மேலே உள்ள இரண்டாவது பாயிண்டை, கடைசியில் உண்மை ஆக்கலாம்.

4. வேலைக்குச் செல்லும் பெற்றோர்களுக்குத் துணையாய், மற்ற குடும்ப உறுப்பினர்களும், க்ரீச், பேபி சிட்டர் போன்ற அமைப்புகளும் ஒரு வழியாய் இருக்கலாம்.

5. தாய் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் சூழ்நிலையில், சில வருடங்கள் அவள் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளட்டும், குழந்தை வளர்ந்த பின் (3-5 வயது வரை), அவள் வேலைக்குச் செல்ல விரும்பினால், அதற்கானச் சூழ்நிலைகளிலும், ஊக்குவிப்புகளிலும் ஏற்பாடுகளிலும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் பெரும் துணையாய் நிற்கலாம்.

6. ________________________________________ - இது உங்கள் கருத்து. நடைமுறைக்கு ஒத்துவருவதாய், நீங்கள் நடைமுறையில் வெற்றிகண்ட ஒன்றாய், அல்லது உங்கள் மனதில் நியாயம் எனப்படுவதாய் உள்ள கருத்துகள்.

மூன்றாவது கேள்வி: சாஃப்ட்டுவேர் மக்களின் மேல் அப்படி என்ன காண்டு? பெரும்பாலான எதிர்மறைச் சம்பவங்கள், சில காலங்களாக அவர்கள் தலையில் விழுவது ஏன்?(உதாரணம் தரவில்லை. சாஃப்ட்வேர்காரர்கள் என்று வந்து, நீங்கள் படித்த செய்திகளை நினைத்துக் கொள்ளுங்கள்) அவர்கள் மென்பொருளாளர்கள் என்பதினால் இச்சம்பவம் நடக்கின்றதா? அல்லது அவர்கள் வேறு வேலை பார்த்திருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காதா?

சாஃப்ட்வேர் எனப்படும் தொழிலில் பல பிரிவுகள் உள்ளனவே:

1. மென்பொருளாளர்கள்
2. ஹார்டுவேர் இஞ்னியர்ஸ் (தமிழ்ப் பதம் தெரியவில்லை.சொன்னால் கற்றுக் கொள்வேன் நன்றி :-) )
3. நெட்வோர்க் எஞ்னியர்ஸ்
4. மேனேஜர்ஸ்
5. குவாலிட்டி கண்ட்ரோல்
6. எச். ஆர்.
7. மார்க்கட்டிங் இஞ்னியர்ஸ்

என்று இன்னும் பல பிரிவுகள். 'சாஃப்டுவேர் ஆளுகள்' என்று சொல்லும் போது இந்தப் பிரிவுகளில் யார் குறிவைக்கப்படுகிறார்கள்? (இதில் ஆணிபிடுங்குவது என்பது பெரும்பாலும் முதல் பிரிவின் கீழ் வரும்). இவர்கள் எல்லாருமா அல்லது ஒரு பிரிவினர் மட்டுமா?

ஒரு பிரிவினர் மட்டும் என்றால் , சம்பவத்திற்குக் காரணம் அவர்கள் செய்யும் தொழிலா?

அவர்கள் இந்த சாஃப்ட்வேர் வேலை பார்க்காமல்,(சமூகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக அறியப்பட்ட) பத்திரிக்கையாளராகவோ, பிசினஸ் மாக்னெட்டாகவோ, சினிமாத்துறை வல்லுனர்களாகவோ, டாக்டராகவோ, விண்வெளியாராகவோ அல்லது இன்னும் (பல),வீட்டை விட, வேலைக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டிய வேலையில் இருந்திருந்தால், அவர்களின் மேல் உள்ள இந்தக் கோபம் குறைந்திருக்குமா? அதாவது, இந்தக் கோபங்கள் தொழில் சார்ந்தவையா?

பி.கு.: வெகு நாட்களாக படித்த பல செய்திகளின் தாக்கமே இந்தப் பதிவு. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத கேள்விகளாய்ப் பட்டால், அப்படி இருக்க வேண்டும் என்று இதை எழுதவில்லை.

மூன்று கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தன? கேட்டாயிற்று. தனித் தனியாயும் எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி.

பி.கு.: தேதி: 27 ஜூலை 2008 :-
குமுதம் பத்திரிக்கையில் வந்தக் கட்டுரையை நான் நேரடியாகப் படிக்கவில்லை. குழந்தைகளுக்கு ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது என்று வந்ததாக நான் புரிந்து கொண்டது, ஒரு தவறு. அப்படி எதுவும் குமுதத்தில் வரவில்லை, பிள்ளைகள் செக்யூரிட்டியின் பாதுகாப்பில் 'விளையாடித்தான்' கொண்டிருந்தார்கள் என்று தான் வந்திருக்கின்றது; குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று பின்னூட்டதில் எனக்குத் தெளிவுபடுத்தப் பட்டுவிட்டது. என்வே என் முதல் கேள்வி செல்லாதது ஆகிவிட்டது. என் தவறுகளிலேயே மகிழ்ச்சியான தவறு இது. குழந்தைகள் நலமே :).

Sunday, July 20, 2008

வாங்க! வாங்க! வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங்க :)

எல்லாருக்கும் வணக்கம்! :)

வருகை தந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி.

இது என்னுடைய சிறிய முதல் முயற்சி. என்னுடைய 4 1/2 வயது மகனுக்காக, சொல்ல நினைத்துத் துவங்கியது, இப்பொழுது உங்கள் முன்னால்.

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :



அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:



இரண்டு வாரத்திற்கு ஒரு கதை என்று, இப்பொழுது நீங்கள் பார்க்கும் இந்த வடிவிலேயே கதை சொல்லப்படும்.

தமிழில் கதை இருக்க வேண்டும், குழந்தைகள் தமிழில் 'டிஜிடல் ஸ்டோரி' கேட்க வேண்டும் என்பதன் முயற்சியே இது.

1-லிருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான, கதைக்கரு சொல்லப்படும். ஆர்வமுள்ள, வண்டு-சிண்டுவைப் பிடித்த மற்ற குழந்தைகளும், குழந்தயுள்ளம் கொண்ட எல்லாப் பெரியவர்களும், வந்து கேட்டால், மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்.

தங்களின், ஊக்குவிப்பை, பின்னூட்டமாய் இட்டுச் செல்ல வேண்டுகிறேன்.

நிறை, குறை, பிடித்தவை, மிகவும் பிடித்தவை, சற்றுக் குறைவாய்ப் பிடித்தவை :) மற்றும் உங்கள் எண்ணங்கள் என்னவோ அதையும், இந்தப் படக்கதை கேட்ட உங்கள் குழந்தைகளின் கேள்விகள் என்னவோ அதையும் எனக்குத் தெரிவியுங்கள். :).

குழந்தைகளும் நீங்களும் எப்பொழுது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து இந்த வலைப்பூவில் கதை கேட்கலாம். :-)

நன்றி!

-இப்படிக்கு,
புதுவண்டு.

பி.கு.: என் மின்னஞ்சல் : pudhuVandu@gmail.com.

எல்லாக் கதைகளையும், இந்த வலைப்பூவின் வலதுபுறத்தில் உள்ள உரல்களின் மூலம் பார்க்கலாம்.

Monday, July 14, 2008

ஜூலை - PIT – PIT, நந்து மற்றும் ராமலட்சுமிக்காக... :)














ஒரு பனிக்கால இரவில்...

நீ ஊரில் இல்லாமல்
வாழ்க்கை ஒன்றும் நின்று விடவில்லை!

அலுவலகமும் நானும் கடமையாய்
இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றோம்!

நண்பர்களும் நானும் நட்பாய்
அளவளாவிக் கொண்டே தான் இருக்கின்றோம்!

இரயில்த்தோழிகளும் நானும் ‘நலமா?’
விசாரித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!

பிள்ளையும் நானும் ருசியாய்
சமைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!

நானும் நானும் அன்பாய்
சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!

நானும் நானும் காதலாய்
வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றோம்!

ஒரு பனிக்கால இரவில்
பேருந்து நிலையத்தில் உன் முகம் பார்க்கும் வரை!
என் மூச்சுக்குழல்களின் சிரமங்கள் சீரான வரை!
என் கண்களின் காட்சிகளில் நீ நிறையும் வரை!
என் தூக்கத்தின் நிம்மதியாய் நீ வந்த வரை!
நானும் நானுமாய் என்னை உணர்ந்த வரை!

நீ ஊருக்கு வந்தபின் தான்
வாழ்க்கை, மேற்கொண்டு நகரத் தொடங்குகிறது.

------------------------------------------------------------------------------------------------
சரி! படம் முடிந்தபின், படத்தின் பெயரைத் தொடர்புப்படுத்தி ஒரு வசனம் சொல்லி, வணக்கம் சொல்லவது, (நான் மேலே காட்டியிருக்கும்) ‘ஒரு நல்ல’ படத்திற்கு அழகு. :-O.

நந்து, நந்துன்னு ஒரு நல்லவர் இருக்கார். ‘நிலா’-வ ரொம்ப நல்லாப் படம் பிடிப்பார். அவரோட இந்தப் பதிவுல

http://nandhu1.blogspot.com/2008/07/july-photo-condest-night-light-pit.html

பின்னூட்டம் படிச்சீங்கன்னா, அதுதான், படத்தின் பெயரை தொடர்புப் படுத்தும் வசனம்.முடிஞ்சாப் படிச்சுட்டு வாங்க.:-)

இப்படியெல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணமாப் போச்சு.என்னமோ, டீச்சர் சொல்ற மாதிரி, ஒரு ‘இருத்தலின் அடையாளமாய்’ இந்த மாதமும் PIT- காரவுகளை இம்சிக்கத் தயாராயிட்டேன் :)

படம் சில நாட்களுக்கு முன்பு எடுத்தது.புதிதாய் முயற்சித்தது, எதுவும் தோதாய் அமையவில்லை. அதனால், படம் பழசு, கவிதை புதுசு. :)

உசுப்பேற்றிய நந்துவுக்கும், ராமலட்சுமிக்கும் , தனி மடலில் அக்கறையாய், ‘இன்னும் இரண்டு நாள் இருக்கு’ என்று உற்சாகப்படுத்திய ராமலட்சுமிக்கும் (அவங்களே தாங்க இவங்களும்) என் வெரி டச்சி டாங்ஸூ! டாங்ஸூ! டாங்ஸூ!

வணக்கம்.

டிஸ்கி.:இந்தக் கவிதையாலும் படத்தாலும் யாருக்கும் யாதேனும் (எதிர்மறையான) பாதிப்பு ஏற்பட்டால், ‘ந’ , ‘ர’ என்ற இரு நல்லவர்கள், முழுப்பொறுப்பையும் ஏற்பார்கள். :D :D.

blogger templates 3 columns | Make Money Online