குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Sunday, November 29, 2009

சீனா ஸார் செல்வி அம்மாவுக்கு அன்பு வாழ்த்துகள்

எங்கள் அருமை அய்யய்யாவுக்கும் , அன்பு அம்மம்மாவுக்கும்
அய்யயய்யாவின் 59-ஆம் பிறந்தநாளிலே........

அன்பு அம்மம்மா! ஆசை அய்யய்யா!
அச்சுவெல்லம் நாதன்! அருமைப் பொண்ணு நீனா!
அள்ளித்தரும் அன்பளிப்பே இந்தப்
பாசமிகுப் பாடல்!

அன்பை அறிவை அள்ளித்தந்தீர்!
ஆசையாய்ப் பாசமாய் அரவணைத்தீர்!
அன்புப் பிள்ளைகள் இருவரையும்
கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்தீர்!

எல்லைகள் இல்லாக் கோடுகள் அமைத்தே!
பிள்ளைகள் இரண்டுடன் சேர்ந்தே நடந்தீர்!
மனமும் மகிழும் புன்னகை தந்தே!
மாறா முகத்துடன் வாழ்ந்து காட்டினீர்!

அம்மா அப்பா எங்களையும்
சுஜா சேது அனைவரையும்
என்றும் கைபிடித்து வழிநடத்த
ஆண்டுகள் கோடி வாழ்கவே!

இன்னும் இன்னும் கதை சொல்ல!
இனித்து இனித்து சோறூட்ட!

பண்பாய் பலமாய் உயர்ந்துவர!
பாரினில் வெற்றிகள் பலகுவிக்க!

எங்கள் இருவரின் கைபிடித்தும்!
ஷாலு நந்துவின் உடன் சேர்ந்தும்!

அம்மம்மா அய்யய்யா இருவருமே!
என்றும் துள்ளியே தாவிவருவீர்!

அருமைச் செல்வங்கள் கைபிடித்தே!
ஆண்டுகள் நூறே வாழ்ந்து மகிழ்வீர்!

- என்றும் அன்புடன்
நாதன், நீனா,
ஷாலு, நந்து

Monday, February 2, 2009

நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி? :)

நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1. தோட்டம் நிறைய நிறைய பனி(!!!!!!)
2. பாதியாய் வெட்டிய (இரு) கத்தரிக்காய்த் துண்டுகள்
3. ஒரு காரட்
4. இரு நீளக் குச்சிகள்
5. ஒரு 'கொவ் பாய்' தொப்பி
6. பனியை உருட்டுவதற்கு - நாதன் மற்றும் நாதன் அப்பா.
7. பனி மனிதனுக்கு வைக்க ஒரு பெயர் : Mr.Pickles.

செய்முறை - பின் வரும் ஒளிப்படத்தில் (ஆங்கிலத்தில்):

blogger templates 3 columns | Make Money Online