டிசெம்பர் 2 - மணி காலை 10. முதல் நாள் 10 செ.மீ., நேற்று 17 செ.மீ, இன்று 21 செ.மீ. விடாமல் பெய்யும் பனி.
போக்குவரத்து இல்லை, வீட்டிலிருந்தே அலுவல் , பள்ளிகள் விடுமுறை.
வீட்டின் பின் தோட்டம்: http://www.youtube.com/watch?v=GPtJM4DsU5s
வீட்டின் முன் தோட்டம்: http://www.youtube.com/watch?v=d_QUwNMohO4
பி.கு.: வல்லுநர் நாதன், பனிமனிதன் செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த வருடம் செதுக்கிய 'கொவ் பாய்'- பனிமனிதர் உருகிவிட்டார். இவ்வருடம் அவர், என்ன அவதாரம் எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் :)
குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'
Saturday, December 4, 2010
21 செ. மீ. பனி..பனி வளருதுங்கோ....வளருது..
at 18:56 3 comments
Thursday, December 2, 2010
17 செ. மீ. பனி...லண்டன் படப்பதிவு..தொடர்கிறது...
டிசெம்பர் 1 - மணி பகல் 12
முன்பு பெய்த பனி,
பத்தாய் , பதினேழாய் வளர்ந்து நிற்கிறது. பள்ளிகள் விடுமுறை. வெளியே செல்லாமல், வீட்டிலிருந்து, ஜன்னல் வழியே ரசித்த பனி :)
17 செ. மீ. பனி - வீட்டின் பின் தோட்டம்:
http://www.youtube.com/watch?v=ZLcOUN6KICw
வீட்டின் முன் தோட்டம்:
http://www.youtube.com/watch?v=08sDb-sP_Yk
பி.கு.: டிசெம்பர் 2 - பதினேழு , இருபத்தியொன்றாய் வளர்ந்த கதை விரைவில் :)
இதன் முதல் பாகம் இங்கே: http://naanpudhuvandu.blogspot.com/2010/11/10.html
at 13:53 8 comments
Tuesday, November 30, 2010
10 செ. மீ. பனி...லண்டன் படப்பதிவு
நவம்பர் 30 - மதியம் மணி 1:30 - லண்டன்
என் வீட்டுத்தோட்டத்தில்....
http://www.youtube.com/watch?v=49swQKBXLSI
நவம்பர் 30 - பிற்பகல் மணி 3:00
என் வீட்டுப்பின் தோட்டத்தில்....
http://www.youtube.com/watch?v=8AkDGW1pCbw
பி.கு.: இது ஒரு உள்ளேன் அய்யாப் பதிவு :). இறுதியில் ,பனியில், அளவுகோல் வைத்துப் பார்த்ததில் , வல்லுனர் நாதன் அளித்த தீர்ப்பு 10 செ. மீ.
மீண்டும் சந்திப்போம்.
at 17:02 5 comments
Sunday, November 29, 2009
சீனா ஸார் செல்வி அம்மாவுக்கு அன்பு வாழ்த்துகள்
எங்கள் அருமை அய்யய்யாவுக்கும் , அன்பு அம்மம்மாவுக்கும்
அய்யயய்யாவின் 59-ஆம் பிறந்தநாளிலே........
அன்பு அம்மம்மா! ஆசை அய்யய்யா!
அச்சுவெல்லம் நாதன்! அருமைப் பொண்ணு நீனா!
அள்ளித்தரும் அன்பளிப்பே இந்தப்
பாசமிகுப் பாடல்!
அன்பை அறிவை அள்ளித்தந்தீர்!
ஆசையாய்ப் பாசமாய் அரவணைத்தீர்!
அன்புப் பிள்ளைகள் இருவரையும்
கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்தீர்!
எல்லைகள் இல்லாக் கோடுகள் அமைத்தே!
பிள்ளைகள் இரண்டுடன் சேர்ந்தே நடந்தீர்!
மனமும் மகிழும் புன்னகை தந்தே!
மாறா முகத்துடன் வாழ்ந்து காட்டினீர்!
அம்மா அப்பா எங்களையும்
சுஜா சேது அனைவரையும்
என்றும் கைபிடித்து வழிநடத்த
ஆண்டுகள் கோடி வாழ்கவே!
இன்னும் இன்னும் கதை சொல்ல!
இனித்து இனித்து சோறூட்ட!
பண்பாய் பலமாய் உயர்ந்துவர!
பாரினில் வெற்றிகள் பலகுவிக்க!
எங்கள் இருவரின் கைபிடித்தும்!
ஷாலு நந்துவின் உடன் சேர்ந்தும்!
அம்மம்மா அய்யய்யா இருவருமே!
என்றும் துள்ளியே தாவிவருவீர்!
அருமைச் செல்வங்கள் கைபிடித்தே!
ஆண்டுகள் நூறே வாழ்ந்து மகிழ்வீர்!
நாதன், நீனா,
ஷாலு, நந்து
at 07:06 10 comments
Labels: சீனா ஸார், செல்வி அம்மா, பிறந்தநாள் வாழ்த்து
Monday, February 2, 2009
நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி? :)
நாதனின் 'பனி மனிதன்' செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
1. தோட்டம் நிறைய நிறைய பனி(!!!!!!)
2. பாதியாய் வெட்டிய (இரு) கத்தரிக்காய்த் துண்டுகள்
3. ஒரு காரட்
4. இரு நீளக் குச்சிகள்
5. ஒரு 'கொவ் பாய்' தொப்பி
6. பனியை உருட்டுவதற்கு - நாதன் மற்றும் நாதன் அப்பா.
7. பனி மனிதனுக்கு வைக்க ஒரு பெயர் : Mr.Pickles.
செய்முறை - பின் வரும் ஒளிப்படத்தில் (ஆங்கிலத்தில்):
at 15:08 4 comments
Labels: செய்முறை விளக்கம், நாதன், பனிமனிதன்