குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Tuesday, November 4, 2008

வண்டு - சிண்டுவின் 'பாடலாம் வாங்க' கதை 8

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாய்க் கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அம்மா செய்த பலகாரங்களும், அப்பாவுடன் வெடித்த வெடிகளும் புத்தாடகளும் மனம் முழுவதும் நிரம்பியிருக்கா? :)

அதே மகிழ்ச்சியுடன்.......

இன்றைய கதை.....'பாடலாம் வாங்க ::)'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா?

யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'பாடலாம் வாங்க ::)' :

அகலப்பட்டை - 512 kb:
அகலப்பட்டை 150 kb:
==================================================================
என் பிள்ளை, இதில் பங்குகொண்டுவிட்டு, மீண்டும் பிஸியாகிவிட்டான் :-). இன்னும் பார்க்கவில்லை. பார்த்தபின் அவன் கருத்துகளைக் கூறுகிறேன்.

படம் ஒளிப்பதிவு செய்யும் போது அவன் சொன்னது:

Mom! i like it very , very , very , very , very , very much. Its nice.

நான்: :D
=================================================================

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

21 Comments:

ராமலக்ஷ்மி said...

'சுட்டிகளுக்கு பாடலுடன் ஆடலைப் பார்த்து ரசிப்பதுதான் சுகம் சுகம் சுகம்'
எனப் புரிந்து அருமையாய எடுத்திருக்கீங்க. குழந்தை நட்சித்திரம் நாதனுக்கு என் வாழ்த்துக்கள். ஏன் வண்டு, அவன் முக பாவங்களுடனே காட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே.

ஒளிப்பதிவில் மிக நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

உங்கள் டீமுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்:)!

VIKNESHWARAN said...

அருமையாக இருக்கிறது...

வாழ்த்துக்கள்..

உங்கள் பணி தொடரட்டும்...

cheena (சீனா) said...

புது வண்டே ! புது முயற்சி

வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள்

நாதன் தூள் கிளப்புகிறான் - நாதன் அம்மாவின் குரல் இனிமை மயக்குகிறது. ரங்க்ஸின் கேமிரா கைவண்ணம் மிளிர்கிறது.

நல்ல பதிவு

செல்விஷங்கர் said...

ஏ புது வண்டே !

தோச சாப்ட்டு பலூன் வில மறந்து போச்சோ ? பத்து காசுக்கு யாருங்க பலூன் தராங்க ? பாட்டு கருத்து படம் நடிப்பு நன்று

நல்ல முயற்சி ! வாழ்த்துகள் மேன்மேலும் உயர ! வெற்றி பெற !

வால்பையன் said...

அலுவலகத்தில் இருக்கிறேன்.
கண்டிப்பாக என் மகளிடம் காட்டுகிறேன்.

ஆயில்யன் said...

நினைவுகளை மீட்டி சென்றது தோசை பாடல்! அருமையான குரலில்,அழகாய் நடித்து காண்பித்த நாதன்! (முகபாவனைகளையும் காணும் ஆர்வம் கொண்டேன்.வாய்ப்பிருக்கும் பட்சத்தில் வலையேற்றி காமியுங்கள்!)

NewBee said...

// ராமலக்ஷ்மி said... //

வாங்க ராமலக்ஷ்மி :)

நலமா?

//குழந்தை நட்சித்திரம் நாதனுக்கு என் வாழ்த்துக்கள். //

மிக்க மிகிழ்ச்சி. அவனிடம் சொல்கிறேன். 'வெரி ஹாப்பி' ஆகிவிடுவான் :)

//ஏன் வண்டு, அவன் முக பாவங்களுடனே காட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே.//

:-). முகம் காட்ட, நான் இன்னும் யோசிக்கிறேன் ராமலக்ஷ்மி. ஏன்னு தெரியல.

//உங்கள் டீமுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்:)!//

ஹி..ஹி..மிக்க நன்றி. இரங்கமணி கிட்டக் கண்டிப்பா சொல்லிறேன்.

வருகைக்கும் வாழ்த்திற்கும், மிக்க மகிழ்ச்சி :)

NewBee said...

//VIKNESHWARAN said... //

வாங்க விக்னேஷ்வரன்.

நலமா? :)

//அருமையாக இருக்கிறது...

வாழ்த்துக்கள்..

உங்கள் பணி தொடரட்டும்...
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)

NewBee said...

//cheena (சீனா) said... //

வாங்க வாங்க சீனா ஸார் :)

நலமா?

//வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள்

நாதன் தூள் கிளப்புகிறான் - நாதன் அம்மாவின் குரல் இனிமை மயக்குகிறது. ரங்க்ஸின் கேமிரா கைவண்ணம் மிளிர்கிறது.

நல்ல பதிவு
//

மனம் மகிழ்கிறது சீனா ஸார். உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.

உங்கள் வாழ்த்துகள் தொடர்ந்து தேவை. :)

இந்த முறை, செல்வி அம்மாவையும் அழைத்து வந்ததுக்கு, உங்களுக்கு ஒரு 'எக்ஸ்ட்ரா', தோசை மற்றும் பலூன் :P

NewBee said...

//செல்விஷங்கர் said... //

செல்வி அம்மா, வாங்க வாங்க.

நலமா? :)

//பத்து காசுக்கு யாருங்க பலூன் தராங்க ? //

ஹி..ஹி..பத்து ரூபாய் விலையிலேன்னு, பாடியிருக்கணுமோ.இனி, 'ரைம்ஸ்'-அ காலத்துக்கு ஏத்த மாதிரி மாத்திடுவோம் :P.

//நல்ல முயற்சி ! வாழ்த்துகள் மேன்மேலும் உயர ! வெற்றி பெற !
//

மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் வாழ்த்துகள், எனக்கும், நாதனுக்கும் தொடர்ந்து வேண்டும். :)

உங்களுக்கும் ஒரு 'ஸ்பெஷல்' தோசை மற்றும் பலூன் :P

NewBee said...

//வால்பையன் said... //

வாங்க வால்பையன் :).

நலமா?

//அலுவலகத்தில் இருக்கிறேன்.
கண்டிப்பாக என் மகளிடம் காட்டுகிறேன்.
//

கண்டிப்பாய்க் காட்டுங்கள். அருமை மகள் என்ன சொன்னாள், என்பதையும் எங்களுக்குச் சொல்லுங்கள். மிகவும் மகிழ்வோம் :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. மகளுடன், தொடர்ந்து வாருங்கள்.

NewBee said...

//ஆயில்யன் said... //

வாங்க ஆயில்யன்.

நலமா? :)

//நினைவுகளை மீட்டி சென்றது தோசை பாடல்! அருமையான குரலில்,அழகாய் நடித்து காண்பித்த நாதன்! //

மிக்க மகிழ்ச்சி. நாதனிடம் சொல்கிறேன்.மகிழ்ச்சியடைவான்.

//(முகபாவனைகளையும் காணும் ஆர்வம் கொண்டேன்.வாய்ப்பிருக்கும் பட்சத்தில் வலையேற்றி காமியுங்கள்!)
//

(ஏனென்று தெரியவில்லை) வலையில், பிள்ளை முகம் காட்ட, இன்னும் சற்று காலம் எடுப்பேன் என்று நினைக்கிறேன் :)

வருகைக்கும் ஆர்வத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ஆயில்யன். தொடர்ந்து வாங்க.

Jeeves said...

/'சுட்டிகளுக்கு பாடலுடன் ஆடலைப் பார்த்து ரசிப்பதுதான் சுகம் சுகம் சுகம்'
எனப் புரிந்து அருமையாய எடுத்திருக்கீங்க. குழந்தை நட்சித்திரம் நாதனுக்கு என் வாழ்த்துக்கள். ஏன் வண்டு, அவன் முக பாவங்களுடனே காட்டியிருந்தால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்குமே.

ஒளிப்பதிவில் மிக நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

உங்கள் டீமுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்:)!//


repeatay

தமிழ் பிரியன் said...

இந்த வாரம் வண்டு சிண்டு மட்டுமல்லாமல் நாதனின் பங்கும் நல்லா இருக்கு...:)

தமிழ் பிரியன் said...

அதென்ன அப்பா, அம்மா, வீட்டில் எல்லாருக்கும் தோசை சுட்டுட்டு, தாத்தா, பாட்டி, மாமா எல்லாரையும் விட்டுட்டீங்க... அடுத்த தடவை சுடும் போது எங்களுக்கும் வேணுமாக்கும்..;))

சுரேகா.. said...

ஆஹா...அழகு

கீதா சாம்பசிவம் said...

புது வண்டு உங்க பெண்ணா சீனா சார்??? நல்லா இருக்கு பதிவு. வாழ்த்துகள்

NewBee said...

// Jeeves said...
//
வாங்க ஜீவிஸ் :)

நலமா?

வருகைக்கும் ரிப்பீட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க ஜிவிஸ். நன்றி.

NewBee said...

// தமிழ் பிரியன் said... //

தம்பி வரணும்.

நலமா? :).வீட்டில் அனைவரும் நலமா?

//இந்த வாரம் வண்டு சிண்டு மட்டுமல்லாமல் நாதனின் பங்கும் நல்லா இருக்கு...:)
//

மிக்க மகிழ்ச்சி. நாதனிடம் சொல்கிறேன். மகிழ்ச்சியடைவான்.

//தாத்தா, பாட்டி, மாமா எல்லாரையும் விட்டுட்டீங்க... அடுத்த தடவை சுடும் போது எங்களுக்கும் வேணுமாக்கும்..;))
//

ஹா...ஹா..(பாடலில் இல்லாத) தாத்தா, பாட்டி, மாமா மற்றும் எல்லாருக்கும், பின்னூட்டத்தில், ஒரு ஒரு 'ஸ்பெஷல்' தோசையும் ஒரு 'எக்ஸ்ட்ரா' பலூனும் வழங்கப்படுகிறது தம்பி.

அதனால்,இந்தாங்க பிடிங்க...'யம்மி யம்மி தோசா அண்ட் எ கலர்ஃபுல் பலூன்' :D :D

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

NewBee said...

//சுரேகா.. said... //

வாங்க சுரேகா :).

நலமா?

//ஆஹா...அழகு
//

:) நன்றி. தொடர்ந்து வாங்க.

NewBee said...

//கீதா சாம்பசிவம் said... //

வாங்க கீதாம்மா,

நலமா? :)

//புது வண்டு உங்க பெண்ணா சீனா சார்??? நல்லா இருக்கு பதிவு. வாழ்த்துகள்
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)

blogger templates 3 columns | Make Money Online