குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, December 6, 2010

பனியும் பனி சார்ந்த இடங்களும்...

பனியும் பனி சார்ந்த இடங்களும்...

பச்சை மரங்கள் வெண்ணிறமாய்
நடந்த பாதை குளிர்பனியாய்
விரிந்த வானம் கார்புகையாய்
விரையும் ஊர்தி வெகுமெதுவாய்!
காணும் முகங்கள் புகைப்படமாய்
அசையும் கரங்கள் சில்லறையாய்
ஓடும் சிறியார் ஓவியமாய்
பாடும் குயில்கள் பெண்மயிலாய்!கூடும் கூட்டம் ஆழ்கடலாய்
பள்ளிக் கூடம் இறைவிடமாய்
அலுவல் எல்லாம் உறைபனியாய்
ஈசன் கூடத் தனிமரமாய்!
இயற்கை செய்த வெண்புரட்சி
எதிர்ப்பு இல்லாக் காந்திவழி!
எனக்கும் இந்த வரம் கிடைத்தால்
என் பேனா மாற்றும் என்னுலகை!

என் கனவுகள் எல்லாம் காவியமாய்!
என் நினைவுகள் எல்லாம் ஓவியமாய்!
என் வார்த்தைகள் எல்லாம் வாழ்வியலாய்!
நானே நானே இவ்வுலகாய்!

நான்கு நாளாய் வீட்டிலிருந்தேன்!
நன்றாய் உறக்கம் வந்ததம்மா!
திங்கள் இன்று கண்விழித்தேன்!
அய்யோ! நானும் என் சொல்வேன்!!!

Saturday, December 4, 2010

21 செ. மீ. பனி..பனி வளருதுங்கோ....வளருது..

டிசெம்பர் 2 - மணி காலை 10. முதல் நாள் 10 செ.மீ., நேற்று 17 செ.மீ, இன்று 21 செ.மீ. விடாமல் பெய்யும் பனி.

போக்குவரத்து இல்லை, வீட்டிலிருந்தே அலுவல் , பள்ளிகள் விடுமுறை.

வீட்டின் பின் தோட்டம்: http://www.youtube.com/watch?v=GPtJM4DsU5s

வீட்டின் முன் தோட்டம்: http://www.youtube.com/watch?v=d_QUwNMohO4பி.கு.: வல்லுநர் நாதன், பனிமனிதன் செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறார். கடந்த வருடம் செதுக்கிய 'கொவ் பாய்'- பனிமனிதர் உருகிவிட்டார். இவ்வருடம் அவர், என்ன அவதாரம் எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம் :)

Thursday, December 2, 2010

17 செ. மீ. பனி...லண்டன் படப்பதிவு..தொடர்கிறது...

டிசெம்பர் 1 - மணி பகல் 12

முன்பு பெய்த பனி,
பத்தாய் , பதினேழாய் வளர்ந்து நிற்கிறது. பள்ளிகள் விடுமுறை. வெளியே செல்லாமல், வீட்டிலிருந்து, ஜன்னல் வழியே ரசித்த பனி :)

17 செ. மீ. பனி - வீட்டின் பின் தோட்டம்:

http://www.youtube.com/watch?v=ZLcOUN6KICwவீட்டின் முன் தோட்டம்:

http://www.youtube.com/watch?v=08sDb-sP_Ykபி.கு.: டிசெம்பர் 2 - பதினேழு , இருபத்தியொன்றாய் வளர்ந்த கதை விரைவில் :)

இதன் முதல் பாகம் இங்கே: http://naanpudhuvandu.blogspot.com/2010/11/10.html

Tuesday, November 30, 2010

10 செ. மீ. பனி...லண்டன் படப்பதிவு

நவம்பர் 30 - மதியம் மணி 1:30 - லண்டன்

என் வீட்டுத்தோட்டத்தில்....

http://www.youtube.com/watch?v=49swQKBXLSIநவம்பர் 30 - பிற்பகல் மணி 3:00

என் வீட்டுப்பின் தோட்டத்தில்....

http://www.youtube.com/watch?v=8AkDGW1pCbwபி.கு.: இது ஒரு உள்ளேன் அய்யாப் பதிவு :). இறுதியில் ,பனியில், அளவுகோல் வைத்துப் பார்த்ததில் , வல்லுனர் நாதன் அளித்த தீர்ப்பு 10 செ. மீ.

மீண்டும் சந்திப்போம்.

Sunday, November 29, 2009

சீனா ஸார் செல்வி அம்மாவுக்கு அன்பு வாழ்த்துகள்

எங்கள் அருமை அய்யய்யாவுக்கும் , அன்பு அம்மம்மாவுக்கும்
அய்யயய்யாவின் 59-ஆம் பிறந்தநாளிலே........

அன்பு அம்மம்மா! ஆசை அய்யய்யா!
அச்சுவெல்லம் நாதன்! அருமைப் பொண்ணு நீனா!
அள்ளித்தரும் அன்பளிப்பே இந்தப்
பாசமிகுப் பாடல்!

அன்பை அறிவை அள்ளித்தந்தீர்!
ஆசையாய்ப் பாசமாய் அரவணைத்தீர்!
அன்புப் பிள்ளைகள் இருவரையும்
கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்தீர்!

எல்லைகள் இல்லாக் கோடுகள் அமைத்தே!
பிள்ளைகள் இரண்டுடன் சேர்ந்தே நடந்தீர்!
மனமும் மகிழும் புன்னகை தந்தே!
மாறா முகத்துடன் வாழ்ந்து காட்டினீர்!

அம்மா அப்பா எங்களையும்
சுஜா சேது அனைவரையும்
என்றும் கைபிடித்து வழிநடத்த
ஆண்டுகள் கோடி வாழ்கவே!

இன்னும் இன்னும் கதை சொல்ல!
இனித்து இனித்து சோறூட்ட!

பண்பாய் பலமாய் உயர்ந்துவர!
பாரினில் வெற்றிகள் பலகுவிக்க!

எங்கள் இருவரின் கைபிடித்தும்!
ஷாலு நந்துவின் உடன் சேர்ந்தும்!

அம்மம்மா அய்யய்யா இருவருமே!
என்றும் துள்ளியே தாவிவருவீர்!

அருமைச் செல்வங்கள் கைபிடித்தே!
ஆண்டுகள் நூறே வாழ்ந்து மகிழ்வீர்!

- என்றும் அன்புடன்
நாதன், நீனா,
ஷாலு, நந்து

blogger templates 3 columns | Make Money Online