குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, June 23, 2008

நான் இப்பத் தான், வெள்ளை மயில் பார்த்தேன்














நான் பார்த்த வெள்ளை மயில் இது தான்.:D :D.படம் மேல் அழுத்திப் பெரிதாகப் பாருங்க!.நல்லாத் தான் இருந்தது.

சென்ற சனிக்கிழமை, வீட்டிலிருந்து, 1 மணி நேரக் கார் பயணத்தில், இருக்கும் 'Leeds Castle' என்ற காசிலுக்குச் சென்றோம்.சின்னக் கோட்டை தான், நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றி வருவதற்கு ஏற்ற இடம். காசிலைப் பார்த்ததை விட நன்றாக அரட்டைக் கச்சேரி நடந்தது. குழந்தைகள், நம்மைக் கண்டுகொள்ளாமல், நண்பர்களுடன் விளையாடும் பாக்கியம் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் இவை.:)

இங்கு நிறைய மயில்கள் இருந்தன.கூடவே ஒரே ஒரு வெள்ளை மயிலும். காற்றிலும் குளிருலும் இந்தத் தோகை எப்படி, எப்பவுமே உஜாலாவிலேயே இருக்கிறது. இருந்தாலும் ரொம்ப உஜாலா......

மற்ற மயில்கள் எல்லாம் வண்ணமயமாகவே இருந்தன.மயிலின் கழுத்து, வீட்டில் வாங்கிய மயில் கழுத்துக்கலர், புடவை கலரிலேயே இருந்தது!!!!!!! :-0

அப்புறம், அப்படியே நடந்து நடந்து, ராணியின் படுக்கை அறைக்குக்குள் போயிட்டோம்.அங்கு ராணி இல்லை, ஆனால் ஒரு கைடு இருந்தார்.என்ன ஏது என்று கேட்காமல் படம் அடுத்துக் கொண்டு வந்து விட்டோம்.














வேணும்னா,(படம் மேல் அழுத்தி) இதையும் பெரிதாகப் பாருங்கள்,ராணி தான் இல்லையே!

பிறகு, Queens bathroom, Yellow drawing room என்று சின்னச் சின்ன அறைகள்.1278, கட்டப் பட்டது என்றாலும், இப்பொழுது நாம் பார்த்தது, பல கைகள் மாறி, 19-ஆன்,20-ஆம் நூற்றாண்டின் ஆர்க்கிடெக்சரில் இருக்கும் கோட்டை தான்.அதனால், எல்லாமே கொஞ்சம் மாடர்ன்னாகத் தான் தெரிகிறது.

டாராயிங்க் ரூமை விட்டு வெளியே வரும் பாதையில், ஒரு ரோஜாச் செடி.என்னவோ, வித்தியாசமாய் இருக்கே என்று பார்த்தால்.எல்லா ரோஜாக்களும் வானவில் வண்ணத்தில் இருந்தன.ஒரே ரோஜா மல்டி கலரில்.சரி, செயற்கைப் பூக்கள் என்று நினைத்தால், இல்லையாம்.இயற்கைப் பூக்கள் தானாம்.வேரில் 'டை', சாயம் ஊற்றி வண்ணங்கள் கொண்டு வருகிறார்களாம்.
















கத்தரிப்பூ நிறத்திலும் ஒரு ரோஜாச் செடி இருந்தது.

இன்னும் கொஞ்சம் நடந்து போனால் வெளியே வந்து விட்டோம்!!!! சரி, என்று சாப்பாட்டு வேலையை முடித்து விட்டு, 'Bird Show', நடக்கும் இடத்திற்குச் சென்றோம். 25 நிமிடங்கள் , ஒரே ஒரு நிகழ்ச்சியாளர், மூன்று பறவைகள். பறவைகளின், பிறப்பிடம், உணவு முறை, வாழ்க்கை முறை, பறக்கும் முறை எல்லாம் குழந்தைகளுக்குப் புரியும் படி சொல்கிறார்கள்.

மேலே இருகும் விடியோ, உலகின் மிக வேகமாக ஓடக் கூடியப் பறவையாம்.அதனால் அதை ஓட விடாமல், அது 6 அடி முதல் 10 அடி வரை எம்பிக் குதிக்கும் என்பதைக் காண்பித்தார்கள்.இதில் என்ன இருக்கு என்று, யோசித்தேன். இந்தப் பறவை பறக்காதாம்.நடக்கும், ஓடும், எம்புமாம்.அப்பச் சரி 10 அடி இஸ் வெரி குட்.

ஜோராக கை தட்டி விட்டு அங்கிருந்தி கிளம்பி, ஆளில்லாத ஒரு புல் வெளியில்................எல்லாரும் games விளையாடி விட்டு வீட்டுக் கிளம்பினோம்.

பின்ன 25 பேர் சத்தம் போடாமல் விளையாட முடியுமா?.அதான் யாருக்கும் தொந்திரவு இல்லாமல் ஒதுங்கியாகிவிட்டது.:))

அப்புறமா நிறைய ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......:)).

Wednesday, June 18, 2008

ஜி! – ன்னா ஜிலேபி! ‘சி’-ன்னா சிவாஜி!....ஒண்ணு நானானி அம்மாவுக்கு, ஒண்ணு செல்வி அம்மாவுக்கு!

எழுத்தாளர் சுஜாதாவின் ‘ஜே.கே.’ என்ற நாவலில், ஒரு வரி வரும். ஜியோ என்ற ஜியோத்ஸனா என்ற கதாநாயகியைப் பற்றித் தான் :-).

‘கிடாரின் ‘ஜி’ கம்பியைத் தட்டிப் பாருங்கள் ஜியோ;
திராட்சைத் தோட்டத்தில், கொத்துக் கொத்தாய்த் தொங்கும் திராட்சைகளில், ஒரே ஒரு திராட்சையின் நுனியில் இருக்கும் பனித்துளியை நாவால் தொட்டுப் பாருங்கள் ஜியோ;’

நிற்க! இந்த ‘ஜி’ ஜிலேபியைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது நானானி மற்றும் செல்வி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால் ‘ஜி’யோவுக்குத் தடை :(

‘சி’ல்லென்று ஒரு காதல்... ... படம் நல்லா இருந்தது... ...சூர்யா சூப்பர்... ...சரி சரி! ‘ஜோ’வும் ‘பூ’வும் கூட ஓக்கே.அதிலும் மச்சக்காரி பாடலில் ‘பூ’... ...

நிற்க! இந்த ‘சி’ சிவாஜியைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது செல்வி மற்றும் நானானி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால் ‘பூ’க்குத் தடை :(

‘ஜி’வாஜி வாயிலே ஜிலேபி என்று ஒரு முன்மாதிரியான பின்நவீனத்துவத்தை முன் வைத்த நிஜமா நல்லவரின் பதிவில் தான் முதல் முறையாக, இந்த, சரித்திரப் புகழ் பெற்ற;சுனாமியை சுழற்றி அடித்த; வளைகுடாவை வளைத்துப் போட்ட; இமயமலையை இளக வைத்த ‘ஜி-வா-ஜி’ தொடரைப் பார்த்தேன்.படுச்சுட்டு ,அவர் பதிவில் பின்னுட்டம் போடாமல், விட்டு விட்டு, இப்ப உன் பதிவில் அதைப் பற்றிச் சொன்னால், நி.ந. பெருந்தன்மையாய் விட்டு விடுவார் என்று நினைப்பா என்று யார் யாரோ கேட்பது போல் இருப்பதால்... ...

நிற்க! இந்த ‘சி’ யும், ‘ஜி’யும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’யைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது நானானி மற்றும் செல்வி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால்... ...:(

இதுல பாருங்க, வல்லியம்மா சுத்துன ஜிலேபில தான், ‘புகைப்படம்’ சூப்பர். (அதாவது! ஜாங்கிரி... ...தென்னகத்துல நமக்கு இரண்டும் ஒண்ணுதாங்க!ஹி..ஹி..ஹி..)

பார்த்த உடனே கை நீட்டி, ஒண்ணு எடுத்து, சின்னதா விண்டு, ஜூசியா வாயில போட்டு, கண் மூடி ரசிச்சு, இனிப்ப நாக்குல சுவைச்சு, தொண்டைல எறங்க விட்டு, ஒரு பெருமூச்சு விட்டுக் கண் தொறக்கணும்... ...(எதுக்குப் பெறுமூச்சா? அப்புறம் எடை பார்க்கும் இயந்திரமும் ‘பெறு மூச்சிற்கு ‘ரிப்பீட்டு’ப் போடுமே)... ...:-0

இத ஒரு, கவிதையா எழுதுவோமா?

வல்லியம்மா சுத்துன ஜாங்கிரி!
பார்த்த உடனே கை நீட்டி!
எடுத்து ஒண்ணு கண்மூடி!
சின்னதா விண்டு வாயில் போட்டு!
ஜூசியா இருக்கே எனஉணர்ந்து!
ரசித்து ரசித்து ‘உச்’ கொட்டி!
தொண்டையில் இறக்கி களித்திடவே!
சுத்துவோம் நாமே ஜிலேபியே!

இது எப்படி இருக்கு? என்னது கேவலமா இருக்கா! நோ!நோ! செல்லம்! நீ அப்படி எல்லாம் சொல்லக் கூடாது செல்லம்.சிவாஜி கண்ணக் குதிடுவாரு. எந்த சிவாஜி? மராட்டிய மன்னரா? நடிகர் திலகமாவா? யாரா இருந்தா நமக்கென்ன செல்லம்? கண்ணு நம்மளது! அதக் காப்பாத்திக்கணுமே? :-0

சரி! ‘ஜி’ பத்தி ஒரு கவிதை எழுதியாச்சு,அதனால ‘சி’ பத்தி ஒரு சில கேள்வி பதில் சொல்லுவோமா?

கேள்வி 1:16 வயதில் புதுவண்டு என்ன செய்தது?
வேற என்ன பிறந்த நாள் தான் கொண்டாடுச்சு :D

செய்தி:நம்ம மராட்டிய மன்னர், 16 வயதில் ஒரு படையை நடத்தி, பிஜப்பூரின், டோர்னோ கோட்டையைப் பிடித்தாராம்.அதுதான் அவர் முதல் போர்.

கேள்வி 2: 36 வயதில் நீங்கள் என்ன செய்தீர்கள்?
(நமக்கு இன்னும் அவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓ வயசு ஆகலீங்க :D)

செய்தி:1666, அவுரங்கசீப், சிவாஜியையும் அவர் 6 வயது மகன் சம்பாஜியையும், டெல்லியில் வீட்டுக் காவலில் (பிடித்து) வைத்து விட்டார். சிவாஜி தனக்கு உடல் நலமில்லை என்று (பொய்) சொல்லி, கடவுளுக்கு இனிப்புகள் நெய்வேத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்லி தினமும் கோவிலுக்கு இனிப்புகள் வழங்கச் செய்தாராம்.

பல நாள் இப்படிச் செய்து, ஒரு நாள் அந்தப் பெட்டிகளில், ஒவ்வொன்றிலும் இவரும் இவர் மகனும் ஒளிந்து கொண்டு, தப்பி விட்டனராம். இதில், உள்குத்து நிறைய இருக்கலாம் என்று வரலாறு சந்தேகித்துக் கொண்டே இருக்கிறது.

நிற்க! பதிவு ரொம்பப் பெருசாகுது.டா... டா...பை...பை...

பி.கு.: சிவாஜி பற்றிய செய்திகள் உபயம் கூகுள் ஆண்டவர். என்னையும் மதித்து, ‘சி-வா-ஜி’-க்கு அழைத்த நானானி அம்மாவிற்கும், செல்வி அம்மாவிற்கும் இரண்டு இரண்டு ஜிலேபி. பின்னூட்டம் போடுவோருக்கும் இரண்டு உண்டு.

:D :-) ;)

Sunday, June 8, 2008

ஜூன் PIT-க்கு

PIT ஜூன் மாதப் போட்டிக்காக முதல் படம்.

என் பிள்ளையின் வகுப்பாசிரியையும் உதவித்தலைமை ஆசிரியையும்.ஆசிரியைகளுக்கோ வேலையில் மும்முரம்.ஆனால் கீழே இருக்கும் இரண்டு வாண்டுகளுக்கோ? :)














லண்டன் மெட்ரோபாலிடன் காவலர்.No stopping at anytime :( என்று சொல்லி நாள் முழுவதும் அவருக்கு அங்கு தான் ஸ்டாப்பிங்.

















இவர்களும் லண்டன் மெட்ரோபாலிடன் காவலர்களே.வண்டி, வாண்டுகள் படத்தைத் தாண்டி இன்னும் நிறைய மக்கள் எல்லாரையும் கண்காணிக்க வேண்டும்.........














இவர்கள் வேலைக் கடினமா? அல்லது 10, 20 வாண்டுகளைச் சமாளிக்கும் ஆசிரியைகளின் வேலை கடினமா?

பி.கு.:அப்பாடா.......ரொம்ப நாள் கழிச்சு, ஒரு பதிவு போட்டாச்சு. :D :D.

வலையுலக நல்லுள்ளங்களே!
வாங்க!
வந்து கருத்தைச் சொல்லுங்க!
போட்டிப் படம் இந்த மாதத் தலைப்பிற்கு ஓகேவா????????

blogger templates 3 columns | Make Money Online