குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, June 23, 2008

நான் இப்பத் தான், வெள்ளை மயில் பார்த்தேன்














நான் பார்த்த வெள்ளை மயில் இது தான்.:D :D.படம் மேல் அழுத்திப் பெரிதாகப் பாருங்க!.நல்லாத் தான் இருந்தது.

சென்ற சனிக்கிழமை, வீட்டிலிருந்து, 1 மணி நேரக் கார் பயணத்தில், இருக்கும் 'Leeds Castle' என்ற காசிலுக்குச் சென்றோம்.சின்னக் கோட்டை தான், நண்பர்களுடன் ஒரு நாள் சுற்றி வருவதற்கு ஏற்ற இடம். காசிலைப் பார்த்ததை விட நன்றாக அரட்டைக் கச்சேரி நடந்தது. குழந்தைகள், நம்மைக் கண்டுகொள்ளாமல், நண்பர்களுடன் விளையாடும் பாக்கியம் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்கள் இவை.:)

இங்கு நிறைய மயில்கள் இருந்தன.கூடவே ஒரே ஒரு வெள்ளை மயிலும். காற்றிலும் குளிருலும் இந்தத் தோகை எப்படி, எப்பவுமே உஜாலாவிலேயே இருக்கிறது. இருந்தாலும் ரொம்ப உஜாலா......

மற்ற மயில்கள் எல்லாம் வண்ணமயமாகவே இருந்தன.மயிலின் கழுத்து, வீட்டில் வாங்கிய மயில் கழுத்துக்கலர், புடவை கலரிலேயே இருந்தது!!!!!!! :-0

அப்புறம், அப்படியே நடந்து நடந்து, ராணியின் படுக்கை அறைக்குக்குள் போயிட்டோம்.அங்கு ராணி இல்லை, ஆனால் ஒரு கைடு இருந்தார்.என்ன ஏது என்று கேட்காமல் படம் அடுத்துக் கொண்டு வந்து விட்டோம்.














வேணும்னா,(படம் மேல் அழுத்தி) இதையும் பெரிதாகப் பாருங்கள்,ராணி தான் இல்லையே!

பிறகு, Queens bathroom, Yellow drawing room என்று சின்னச் சின்ன அறைகள்.1278, கட்டப் பட்டது என்றாலும், இப்பொழுது நாம் பார்த்தது, பல கைகள் மாறி, 19-ஆன்,20-ஆம் நூற்றாண்டின் ஆர்க்கிடெக்சரில் இருக்கும் கோட்டை தான்.அதனால், எல்லாமே கொஞ்சம் மாடர்ன்னாகத் தான் தெரிகிறது.

டாராயிங்க் ரூமை விட்டு வெளியே வரும் பாதையில், ஒரு ரோஜாச் செடி.என்னவோ, வித்தியாசமாய் இருக்கே என்று பார்த்தால்.எல்லா ரோஜாக்களும் வானவில் வண்ணத்தில் இருந்தன.ஒரே ரோஜா மல்டி கலரில்.சரி, செயற்கைப் பூக்கள் என்று நினைத்தால், இல்லையாம்.இயற்கைப் பூக்கள் தானாம்.வேரில் 'டை', சாயம் ஊற்றி வண்ணங்கள் கொண்டு வருகிறார்களாம்.
















கத்தரிப்பூ நிறத்திலும் ஒரு ரோஜாச் செடி இருந்தது.

இன்னும் கொஞ்சம் நடந்து போனால் வெளியே வந்து விட்டோம்!!!! சரி, என்று சாப்பாட்டு வேலையை முடித்து விட்டு, 'Bird Show', நடக்கும் இடத்திற்குச் சென்றோம். 25 நிமிடங்கள் , ஒரே ஒரு நிகழ்ச்சியாளர், மூன்று பறவைகள். பறவைகளின், பிறப்பிடம், உணவு முறை, வாழ்க்கை முறை, பறக்கும் முறை எல்லாம் குழந்தைகளுக்குப் புரியும் படி சொல்கிறார்கள்.

மேலே இருகும் விடியோ, உலகின் மிக வேகமாக ஓடக் கூடியப் பறவையாம்.அதனால் அதை ஓட விடாமல், அது 6 அடி முதல் 10 அடி வரை எம்பிக் குதிக்கும் என்பதைக் காண்பித்தார்கள்.இதில் என்ன இருக்கு என்று, யோசித்தேன். இந்தப் பறவை பறக்காதாம்.நடக்கும், ஓடும், எம்புமாம்.அப்பச் சரி 10 அடி இஸ் வெரி குட்.

ஜோராக கை தட்டி விட்டு அங்கிருந்தி கிளம்பி, ஆளில்லாத ஒரு புல் வெளியில்................எல்லாரும் games விளையாடி விட்டு வீட்டுக் கிளம்பினோம்.

பின்ன 25 பேர் சத்தம் போடாமல் விளையாட முடியுமா?.அதான் யாருக்கும் தொந்திரவு இல்லாமல் ஒதுங்கியாகிவிட்டது.:))

அப்புறமா நிறைய ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......:)).

28 Comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தில்லி மிருகக்காட்சி சாலையிலும் வெள்ளை மயில் இருக்கு ...:)
வானவில் ரோஜா ரொம்ப அழகு...

Noddykanna said...

Dear RNV,

parandhaa thaan paravai-nnu yaaraavadhu pinoottam poettura poeraanga!

raani araiyila, azhagu saadanai petti, yethaam perusu!
avangalukku yenna thookuradhukku aal irukkum!

vaanavil roja azhagu! yaennoe, seyarkayaai theriyudhu! idharkku mun ipadi ondru paarkadhadhinaaloe?

Anbudan,
Noddykanna

நானானி said...

மயிலுக்கு யார் ப்ளீச் போட்டு சொட்டு நீலம் விட்டு வெள்ளை வெளேரென்று ஆக்கினார்கள்? இறைவனா?
இறைவா உனக்குத்தான் எத்துணை கற்பனைத்திறம்!!!!
இது இப்படியென்றால் சாதரண ஒற்றை வண்ண ரோஜாக்களுக்கு வண்ணவண்ண சாயம் பூசி வானவில் வண்ணங்களை கொண்டுவந்தது யாரோட கைவண்ணம்? மனிதனா?
மனிதா உன் கற்பனை கடவுளோடும் போட்டி போடுகிறதே!!!
வெள்ளை மயில் சென்னை zoo ஊருக்குள் இருந்த போது பார்த்திருக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

கயல்விழி நானானி போல நானும் வெள்ளை மயில் பார்த்திருக்கிறேன்.
பெங்களூர் பனர்கட்டாவில்.

ஆனால் மல்டி கலர் ரோஜா, கத்திரிப்பூ கலர் ரோஜா...ஹூம்...பாத்ததில்லே. லால்பாக் ஃப்ளவர் ஷோவில் பாக்கிற சான்ஸ் உண்டா தெரிஞ்சவங்க சொல்லுங்க.

NewBee said...

வாங்க கயலக்கா,

நலமா? :)

/தில்லி மிருகக்காட்சி சாலையிலும் வெள்ளை மயில் இருக்கு ...:)
/

அங்கேயே 2 1/2 வருடம் குப்பை கொட்டினேனே எட்டிப் பார்க்காமல் போய்விட்டேன்...பரவாயில்லை.இப்பப் பார்த்துட்டேன்.

:))...வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி அக்கா!!:))

NewBee said...

வாங்க நாடி,

கேஸே ஹேன் ஆப்?

//idharkku mun ipadi ondru paarkadhadhinaaloe?
//

க்கும்...இதுக்கு (இரண்டு நாள்) முன்னே நீங்க பாக்கவே இல்லைல...:))))

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி நாடி..:))))

NewBee said...

வாங்க நானானி அம்மா!

எப்படி இருக்கீங்க? :))
//இறைவனா?
இறைவா உனக்குத்தான் எத்துணை கற்பனைத்திறம்!!!!//
//மனிதா உன் கற்பனை கடவுளோடும் போட்டி போடுகிறதே!!!
//
பாருங்க! நீங்க இந்தப் பதிவ எழுதிநிருந்தா எவ்ளோ அழகா இருந்துருக்கும்....நான் போய் நல்லா ஸ்னாக்ஸ் சாப்பிட்டுட்டு வந்துட்டேன்...:)...ச்சும்மாஆஆஆஅ!

//வெள்ளை மயில் சென்னை zoo ஊருக்குள் இருந்த போது பார்த்திருக்கிறேன்.
//

அங்கேயும் இருந்தேனே (வளர்ந்தேனே) ரொம்ப வருஷமா?...நான் ரொம்பப் பொடிசா இருந்த போது அந்த zoo பாத்தேன்.அப்பயும்ம் ஸ்னாக்ஸ் தின்னுட்டுத் தான் வந்திருப்பேன்.:))

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி மா!

NewBee said...

வாங்க ராமலக்ஷ்மி,

நலமா? :))

//பெங்களூர் பனர்கட்டாவில்.//

ம்ம்ம்...நமக்கு (இந்தியா வந்தா) ரொம்பப் பக்கம் தான்.பார்த்துடுவோம்.லால்பாக் ஃப்ளவர் ஷோ பத்தி விசாரித்துவிடுகிறேன் உங்களுக்காக.கொஞ்சம் அவகாசம் கொடுங்க.இல்ல நம்ம (வலை) மக்கள் யாராவது ஒரு பதிவேப் போட்டுருப்பாங்க.தேடிருவோம்.:)

வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சிங்க!

செல்விஷங்கர் said...

புது வண்டே !!

அருமை அருமை - படங்களும் அருமை - கருத்துகளும் அருமை - மறு மொழிகளூம் அருமை - அதற்கு வண்டின் பதில் மொழியோ அருமை அருமை. டில்லியாகட்டும், சென்னையாகட்டும், பெங்களூருஆகட்டும் - எதைச் சொன்னாலும் - அங்கும் இருந்து மயிலைப் பார்க்காத வருத்தம் பதில் மொழியில் தொனிக்கிறதே. அடுத்த தடவை இந்தியா வரும் பொழுது இங்கு உள்ள வெள்ளை மயில்கள் எல்லாம் காண நல் வாழ்த்துகள்.

( ஆள் வச்சாவது எல்லாத்தையும் உஜாலாவுக்கு பெய்ண்டு அடிச்சி மாத்திடுவோம்ல)

சீனா - செல்வி ஷங்கர்

Bharani said...

We have been to Leeds too. We've seen the white ones first in Leeds. We did not drive.. took a bus. I can not forget that cold day when we were waiting for the bus. (the bus did not come for 3 hrs). Leeds castle is definetly a worthful place.
Thanks for sharing..

நந்து f/o நிலா said...

எனக்கு வெள்ளை மயில் பாக்க ரொம்ப நாள் ஆசை. ஆச்சி சொன்ன மாதிரி இங்கே பெயிண்ட் அடிச்சுத்தான் மாத்தனும் போல :).

போட்டோ அருமையா வந்திருக்கு. படத்துக்கு படம் முன்னேற்றம் தெரியுதே

NewBee said...

வாங்க பரணி,

நலமா?

முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! :)

நீங்கள் சொல்வது சரி! குளிர் காலங்களில், வீட்டிலேயே அடைந்துவிட்டு, அல்லது, மூயுசியம் போன்ற closed environment சென்று விட்டு ,வெயில் காலங்களில் ஊர் சுற்றுவது தான் எளிமை.

சின்னக் காசில் என்றாலும் one day trip-க்குச் சரியாகப் பொருந்துதே.:))

NewBee said...

வாங்க வாங்க நந்து. நிலாக் குட்டியையும் கூட்டிட்டு வந்ததுல மிக்க மகிழ்ச்சி.

நான் வலைப்பூ தொடங்கிய போது, முதலில் முழுதாகப் பார்த்த, ரசித்த வலைப்பூ, நிலாக் குட்டியோடது தான்.:))).மனதிற்கு மகிழ்ச்சியாய் இருக்கு.

//போட்டோ அருமையா வந்திருக்கு. படத்துக்கு படம் முன்னேற்றம் தெரியுதே
//

ஹி...ஹி...மயில் நான் எடுத்தது இல்லை.வீட்டுல சொல்லிறேன்.:))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நந்து/நிலா!

NewBee said...

//சீனா - செல்வி ஷங்கர்//

வாங்க வாங்க!நலமா?:) இருவரும் சோடியாய் என் கூட்டிற்கு வந்தது, மிக மிக மகிழ்ச்சியைத் தருகிறது.

//( ஆள் வச்சாவது எல்லாத்தையும் உஜாலாவுக்கு பெய்ண்டு அடிச்சி மாத்திடுவோம்ல)
//

உங்கப் பெருந்தன்மையப் பாக்கும் போது, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,கண் கலங்கி வார்த்தையே வரமாட்டேங்குது..

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி!:))

பி.கு.:அங்க வரும் போது,பாப்போம்ல, நீங்க பெயிண்ட் அடிக்குறீங்களா இல்லையானு ;)

ராமலக்ஷ்மி said...

//அப்பயும்ம் ஸ்னாக்ஸ் தின்னுட்டுத் தான் வந்திருப்பேன்.:))//
//அப்புறமா நிறைய ஸ்னாக்ஸ் சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......:)).//

ஸ்னாக்ஸ் ப்ரியரே, பின்னூட்டமிடும் போதும் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் உண்டா? காக்காய் ஸ்னாக்ஸை வேணா தூக்கும். பின்னூட்டத்தை..? வெள்ளை மயில் போல வெள்ளைக் காக்காய்(டெக்னிகல் ப்ராப்ளம்)தான் தூக்கியிருக்கணும்:).

என் மெகாமுதலைகள் பதிவில் விளக்கியிருக்கிறேன் உங்களுக்கான பதிலில்.

தாரணி பிரியா said...

வணக்கம் நீயூபீ. நலமா? எங்க கோயமுத்தூர் மிருககாட்சி சாலையில கூட ஒரு வெள்ளை மயில் இருந்தது. இப்ப இருக்கான்னு தெரியலை.

இப்ப டயலாக் சொல்லலாமா?

கவுன் போட்டுக்க‌லாமுன்னு ஆசையா ஒடி வ‌ந்தா க‌ல‌ர் போட்டுடுவாங்க‌ போல‌ இருக்கே

naan humtumforumla vara priyathan
en full name tharani priya.

NewBee said...

//ராமலக்ஷ்மி said...
என் மெகாமுதலைகள் பதிவில் விளக்கியிருக்கிறேன் உங்களுக்கான பதிலில்.
//

நலமா ரமாலக்ஷ்மி!

இப்பத் தாங்க பார்த்தேன்.உங்கள் பொறுமைக்கு வாழ்த்துகள். :)))

NewBee said...

/தாரணி பிரியா said...
கவுன் போட்டுக்க‌லாமுன்னு ஆசையா ஒடி வ‌ந்தா க‌ல‌ர் போட்டுடுவாங்க‌ போல‌ இருக்கே
//

ம்ம்ம்! சரி! மயிலுக்கும் வேணாம், நமக்கும் வேணாம்.கலர்ல ஒரு கவுன் வாங்கிப் போட்டுருவோம்.என்னா சொல்றீங்க தாரணி! truce???

//
naan humtumforumla vara priyathan
en full name tharani priya.
//
அவனா நீயீஈஈஈ?(அவுங்களா நீங்க?) :)))....அப்ப நம்மளப் பத்தி ரொம்பத் தெரியுமே???:(((.

நாம இங்கேயும் சந்திக்குறதுல மிக்க மகிழ்ச்சி ப்ரியா!

ராஜ நடராஜன் said...

நான் பார்த்ததெல்லாம் 16 வயதினிலே மயிலுதானுங்க.அப்புறம் அந்த வெள்ளை மயிலை கதவு போட்டு கண்ணாடி பீளைக்குளிட்டு சுவற்றில் மாட்டி விடுங்க.

NewBee said...

//ராஜ நடராஜன் said//

வாங்க நடராஜன்! :)

முதலில் வேறு பெயரில் தங்களைப் பார்த்தேனோ? ப்ரொஃபைல் படம் காட்டிக் கொடுத்துவிட்டது.

//16 வயதினிலே மயில்//

அதானே :) பாருங்க இங்க யாருக்குமே தோணல.
'செந்தூரப்பூவே..செந்தூரப்பூவே..'..இருங்க யூடூயூப் போயிட்டு வரேன்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க!

ரசிகன் said...

வெள்ளை மயில் அருமை:)

NewBee said...

:) வாங்க ரசிகன், வாங்க.

நலமா?

ஒரு வாரம் முன்பு தான் உங்கள் வலைப்பூ செக் செய்தேன்.உங்களைக் காணோமே என்று நினைத்தேன்.வந்துட்டீங்க.:)))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரசிகன். ஏன் இப்பல்லாம் கவிதை எழுதல? அண்ணி, அவுங்களப் பத்தி எழுதக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களா? :D :D.

பி.கு:அப்பாடா! இன்னிக்குத் தூக்கம் நல்லாவே வரும் :))).
......................................................................................................................

சரி! சரி! ச்சும்ம்ம்ம்மாஆஆஆஅ தான் கேட்டேன்.ஆட்டோ அனுப்ப அட்ரஸ் எல்லாம் கேக்கக் கூடாது.:(

ராமலக்ஷ்மி said...

//லால்பாக் ஃப்ளவர் ஷோ பத்தி விசாரித்துவிடுகிறேன் உங்களுக்காக.கொஞ்சம் அவகாசம் கொடுங்க.//

Thank you so much newbee. நான் கேட்டதற்காக சிரமமேற்கொண்டு தேடி, பதிலையும் தேடி வந்து அளித்தமைக்கு. நிஜமாகவே நெகிழ்ந்து விட்டேன். நீங்கள் கொடுத்த url:
http://www.flickr.com/photos/vicky_photos/sets/72157604094054034 மூலம் flickr சென்று பார்த்தேன். வயலட் பூ ஒன்று இருந்தது. ஆனால் உங்கள் பதிவில் கண்ட ரோஜா வகை அல்ல அது. அபூர்வ வகையைத்தான் படமெடுத்து எங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறீர்கள். அதற்கு எல்லோர் சார்பிலும் நன்றி.

வேளராசி said...

வெள்ளை மயில் அருமை:)

நானானி said...

'மயிலே! உனக்கனந்த கோடி நமஸ்காரம்...புதுத்தேனீ ஊருக்குப் போகும் போது காட்டுக்குள் பறந்து போவாய்!!ம்மாட்டிக்கிட்டே...?
உன்னை தொவச்சு உஜாலாவில்
தோச்சு தொங்க விட்டுடுவாங்க!!!

நானானி said...

ஸ்னாக்ஸ் சாப்பிட்டே இப்டின்னா?
முழுச்சாப்பாடு ஒரு வெட்டு வெட்டினா
எப்படி எழுதியிருப்பாய்? தேனீ!

நானானி said...

மயிலே உனக்கனந்த கோடி நமஸ்காரம்! எங்காவது காட்டுக்குள் பறந்து ஒளிந்துகொள்!! சீனாவும்
செல்விசங்கரும் உன்னை ஆள் வச்சாவது வெள்ளயடிக்கப் போறாங்களாம்....பொங்கல் கூட
இன்னும் வல்லே!!

ராமலக்ஷ்மி said...

வெள்ளை மயிலுக்கும் இந்த மெயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை:))! ஆகையால் இது பிரசுரத்துக்கல்ல:))!

சூரியன் 9.15-க்கு தூங்கட்டும். வீட்டுக்குள் ஏதாவது ட்ரை பண்ணுங்கள். அல்லது போன முறை போல அசத்தல் படங்கள் வெளியில் சென்று எடுக்கப் பாருங்கள். PIT வாசல் மூட இன்னும் இரு தினங்கள் இருக்கிறதே newbee.

blogger templates 3 columns | Make Money Online