ஒரு பனிக்கால இரவில்...
நீ ஊரில் இல்லாமல்
வாழ்க்கை ஒன்றும் நின்று விடவில்லை!
அலுவலகமும் நானும் கடமையாய்
இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றோம்!
நண்பர்களும் நானும் நட்பாய்
அளவளாவிக் கொண்டே தான் இருக்கின்றோம்!
இரயில்த்தோழிகளும் நானும் ‘நலமா?’
விசாரித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!
பிள்ளையும் நானும் ருசியாய்
சமைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!
நானும் நானும் அன்பாய்
சுவாசித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!
நானும் நானும் காதலாய்
வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றோம்!
ஒரு பனிக்கால இரவில்
பேருந்து நிலையத்தில் உன் முகம் பார்க்கும் வரை!
என் மூச்சுக்குழல்களின் சிரமங்கள் சீரான வரை!
என் கண்களின் காட்சிகளில் நீ நிறையும் வரை!
என் தூக்கத்தின் நிம்மதியாய் நீ வந்த வரை!
நானும் நானுமாய் என்னை உணர்ந்த வரை!
நீ ஊருக்கு வந்தபின் தான்
வாழ்க்கை, மேற்கொண்டு நகரத் தொடங்குகிறது.
------------------------------------------------------------------------------------------------
நந்து, நந்துன்னு ஒரு நல்லவர் இருக்கார். ‘நிலா’-வ ரொம்ப நல்லாப் படம் பிடிப்பார். அவரோட இந்தப் பதிவுல
http://nandhu1.blogspot.com/2008/07/july-photo-condest-night-light-pit.html
பின்னூட்டம் படிச்சீங்கன்னா, அதுதான், படத்தின் பெயரை தொடர்புப் படுத்தும் வசனம்.முடிஞ்சாப் படிச்சுட்டு வாங்க.:-)
இப்படியெல்லாம் உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணமாப் போச்சு.என்னமோ, டீச்சர் சொல்ற மாதிரி, ஒரு ‘இருத்தலின் அடையாளமாய்’ இந்த மாதமும் PIT- காரவுகளை இம்சிக்கத் தயாராயிட்டேன் :)
படம் சில நாட்களுக்கு முன்பு எடுத்தது.புதிதாய் முயற்சித்தது, எதுவும் தோதாய் அமையவில்லை. அதனால், படம் பழசு, கவிதை புதுசு. :)
உசுப்பேற்றிய நந்துவுக்கும், ராமலட்சுமிக்கும் , தனி மடலில் அக்கறையாய், ‘இன்னும் இரண்டு நாள் இருக்கு’ என்று உற்சாகப்படுத்திய ராமலட்சுமிக்கும் (அவங்களே தாங்க இவங்களும்) என் வெரி டச்சி டாங்ஸூ! டாங்ஸூ! டாங்ஸூ!
வணக்கம்.
டிஸ்கி.:இந்தக் கவிதையாலும் படத்தாலும் யாருக்கும் யாதேனும் (எதிர்மறையான) பாதிப்பு ஏற்பட்டால், ‘ந’ , ‘ர’ என்ற இரு நல்லவர்கள், முழுப்பொறுப்பையும் ஏற்பார்கள். :D :D.
25 Comments:
\\தூக்கத்தின் நிம்மதியாய் நீ//
அருமை..
அட நல்லா இருக்குங்க படம்.படத்துல இருப்பது யாரு?
அப்புறம் அந்த கவிதை அருமை.
ஒரே படத்தோட நிப்பாட்டிடீங்களே
படமும் அருமை. பாடலும் அருமை. அந்த ஒரே படமும் நமக்காக என்பதால் விட்டு விடலாமே நந்து!
இன்னும் இது போன்ற பாடல்கள் பலவற்றை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம் newbee!
//இந்தக் கவிதையாலும் படத்தாலும் யாருக்கும் யாதேனும் (எதிர்மறையான) பாதிப்பு ஏற்பட்டால், ‘ந’ , ‘ர’ என்ற இரு நல்லவர்கள், முழுப்பொறுப்பையும் ஏற்பார்கள்.//
பாதிப்பு ஏற்பட்டால் "ந(ர)றந(ர)ற" எனப் பற்களைக் கடித்துக் கொள்ளவும் வழி சொல்லிக் கொடுக்கிறீர்களா newbee:))? அழகான லைட்டிங்கில அருமையான படமும், பாராட்டும் படி பாட்டும் இருக்கையில் 'நறநற'க்கு வேலையில்லை! வாழ்த்துக்கள்!
//அக்கறையாய், ‘இன்னும் இரண்டு நாள் இருக்கு’ என்று உற்சாகப்படுத்திய //
இந்த முறை தலைப்பைப் பார்த்து நழுவ இருந்த என்னை இது போல கேள்வி கேட்டு உற்சாகப் படுத்தினார் நானானி! [முந்தைய தலைமுறையிடமிருந்து நாம் கற்க வேண்டியது எத்தனை இருக்கிறது..இல்லையா newbee?]கடைசிப் படம் தவிர்த்து என் பதிவில் எல்லாமே முன்னரே எடுத்ததில் தேடிப் போட்டதுதான்.
நந்து, ராமலக்ஷ்மி - இருவருக்கும் நன்றி - உசுப்பேத்தி, ஊக்கப்படுத்தி, புது வண்டினை படம் போட வைத்தமைக்கு நன்றி.
சூரியனை எதிர் பார்த்துப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக நிற்கும் இரவுப்படம் அருமை. அதை விட அருமை அழகுக் கவிதை.
தொடர்க தொடர்க புது வண்டே !!
புகைப்படமும் கவிதையுமாக !
நல்வாழ்த்துகள்
// கயல்விழி முத்துலெட்சுமி said...
வாங்க கயலக்கா,
நலமா? :)
\\தூக்கத்தின் நிம்மதியாய் நீ//
அருமை..
//
நன்றி. இரண்டு தினங்களுக்கு முன் நானானி அம்மாவின் ஒரு பின்னூட்டத்தில் 'நிம்மதியான் தூக்கம்' என்று படித்தேன்.அது மனதில் ஒட்டிக்கொண்டு, என்னையும் அறியாமல் இந்தக் கவிதையாய் வந்திருக்க வேண்டும். :)
வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி கயலக்கா.:)
:))
kavithai super...
//அட நல்லா இருக்குங்க படம்.//
ஹி..ஹி..நீங்க நல்லவருன்னு அப்பவே சொன்னேனே :)
//படத்துல இருப்பது யாரு?//
நமக்குத் தெரிஞ்கவுங்க தான்.
//அப்புறம் அந்த கவிதை அருமை.//
நன்றி.
//ஒரே படத்தோட நிப்பாட்டிடீங்களே//
வச்சுகிட்டா வஞ்சனை பண்றேன்...:(
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நந்து.
வாங்க ராமலக்ஷ்மி,
நலமா? :)
//படமும் அருமை. பாடலும் அருமை.//
நன்னி.:)
// அந்த ஒரே படமும் நமக்காக என்பதால் விட்டு விடலாமே நந்து!//
ரொம்ப நன்னி:)
//இன்னும் இது போன்ற பாடல்கள் பலவற்றை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம் newbee!
//
உங்களெல்லாம் மாதிரி நாலு பொறுமைசாலிகள் இருப்பதால் தான் நாலு மழை எக்ஸாடாராவாப் பெய்யுதோ? :)
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ராமலட்சுமி. :)
பி.கு.: நானானி அம்மாக்கு ஒரு எக்ஸ்ட்ரா 'ஓ' 'ஓ'
//தொடர்க தொடர்க புது வண்டே !!
புகைப்படமும் கவிதையுமாக !
நல்வாழ்த்துகள்
//
செல்வி அம்மா,
நலமா? :)
வாழ்த்துகளுக்கு, என் பணிவான வணக்கங்கள். நிரம்ப மகிழ்ச்சி அம்மா. :)
//ஜி said...
:))
//
ஜி! வாங்க வாங்க :)
வருகைகும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ஜி.
//kavithai super...//
ஆஹாஆஆஆஆ! சரி 'ரொம்ப' நல்லவங்க லிஸ்ட்ல உங்களையும் சேர்த்துர்ரேன். :D :D. நன்றி.
கவிதை சூப்பர். படம் கலக்கல். ஏன் வண்ணப் படமாகவே போட்டிருக்கலாமே.
படம் ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்!
வாங்க ரசிகன்,
நலமா? :).
// ரசிகன் said...
கவிதை சூப்பர். படம் கலக்கல்.
//
நன்னி. நன்னி. நன்னி. :)
//ஏன் வண்ணப் படமாகவே போட்டிருக்கலாமே.//
அப்படிங்கறீங்க?. க/வெ பெட்டரா இருக்குன்னு வீட்ல எல்லாரும் சூடம் ஏத்தாதக் குறையா சத்தியம் பண்ணாங்க ரசிகன். நம்புங்க...
//நிலாக்காலம் said...
படம் ரொம்ப நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துகள்!
//
வாங்க நிலாக்காலம்,
:) நலமா?
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க. உங்கப் படம் நேத்துத் தான் என்ட்ரி கொடுத்துருக்குன்னு நினைக்குறேன். இந்தா வாரேன்.
ராமலக்ஷ்மி,
பின்னூட்ட மட்டுறுத்தலைத் தூக்கிவிட்டேன்.
அதனால், உரிமையோடு, இங்கே எடிட், செய்தி இருக்கிறேன். பரவாயில்லையா?.:)
//படத்தில் இருப்பது ஆரு. என் காதோடு ரகஸியமாய்.. சொல்ல மாட்டேன் ஆருக்கும்:))
//
இதுல ரகஸியத்துக்கு இடமே இல்லைங்க. நமக்குத் தெரிஞ்சவங்க தான். :).
Dear RNV,
padamum, paadalumaa? (yengayoe kaetta maadiri irukae!)
pudu kavithai nandru!
padam miga arumai!
vaazhthukkal!
Noddykanna
எனக்கெல்லாம் மாலைக்கண்ணுங்கண்ணா!கலர்ல படத்தப் போட்டாத்தான் கருத்து சொல்லத்தெரியும்.
கருப்பு வெள்ளை காலத்துல யாரு படத்தப் பார்த்தா?சிவாஜியும்,விஸ்வநாதனும்,கண்ணதாசனும்தான் கண்ணுல தெரிஞ்சாங்க.
அருமையான கவிதை
அழகான படம்.
ஒன்று என்றாலும் அது நன்றாய் இறுக்குங்க.சகோதரி ராமலட்சுமியின் தகவலின் பேரில் P I T போட்டியில் கலந்துள்ளேன்.
தி.விஜய்
please visit my blog.
http://pugaippezhai.blogspot.com
அண்ணே! நீங்க மனசு வைச்சா இந்த பெட்ரோல் விலையை குறைச்சுடலாம்.அண்ணே 30 மறுமொழிகள் | விஜய்
கடுப்படிக்கும் கச்சா எண்ணெய்! மர்ம-முடிச்சு அவிழ்கிறது... 38 மறுமொழிகள் | விஜய் | கச்சா எண்ணெய்
"என்னை வளர்த்த மனிதா, உன்னை அளிப்பேன் எளிதாய்" 22 மறுமொழிகள் | விஜய்
//க/வெ பெட்டரா இருக்குன்னு வீட்ல எல்லாரும் சூடம் ஏத்தாதக் குறையா சத்தியம் பண்ணாங்க ரசிகன். நம்புங்க...//
நான் நம்புறேன். இதயேதான் என் வீட்லயும் சொன்னாங்க. அதான் நிற்க இடமில்லாமல் என் திண்ணை (பதிவு) நிரம்பி வழிஞ்சிட்டு. க/வெ என்னைக்கும் தனி அழகுதான் போங்க. இல்லையா புதுவண்டு?
//Noddykanna said... //
அன்பு நாடிக்கண்ணா,
நலமா? :). வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நாடி.:)
//pudu kavithai nandru!
padam miga arumai!
vaazhthukkal!
//
மிக்க நன்றி!
//
padamum, paadalumaa? (yengayoe kaetta maadiri irukae!)
//
ஆமா! ஆமா! டி.டி.யில் காத்திருந்து பார்ப்போமே.கொசுவத்தி சுத்தவச்சுட்டியே நாடி! :)
//ராஜ நடராஜன் said... //
வாங்க நடராஜன்! நலமா?
//
எனக்கெல்லாம் மாலைக்கண்ணுங்கண்ணா!கலர்ல படத்தப் போட்டாத்தான் கருத்து சொல்லத்தெரியும்.
//
தம்ம்ம்ம்ம்ம்ம்பி! நீங்க இப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நாலு டார்ச் லைட் அடிச்சுப் பார்த்தாவது, கருத்துச் சொல்லியே ஆகணும். :)))). :P
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி நடராஜன்.
//விஜய் said...
அருமையான கவிதை
அழகான படம்.
ஒன்று என்றாலும் அது நன்றாய் இறுக்குங்க.சகோதரி ராமலட்சுமியின் தகவலின் பேரில் P I T போட்டியில் கலந்துள்ளேன்.
தி.விஜய்
//
வாங்க விஜய்,
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிங்க.
இந்தா வாரேன் உங்க வலைப்பூவிற்கு.:)
//நான் நம்புறேன். இதயேதான் என் வீட்லயும் சொன்னாங்க.//
சொல்லிட்டாங்களா?....
சேரி. :))).
மறுபடியும் மாலைக்கண்ணோட வந்தா டார்ச் அடிச்சாவது கருத்து சொல்லணும்கிறீங்க!சரி.இந்தப் படத்துக்கு டைரக்டர் சங்கர் கலர் அடிச்சா எப்படி இருக்கும்?
(இது எப்படி இருக்குது!:))
/
நந்து, நந்துன்னு ஒரு நல்லவர் இருக்கார். ‘நிலா’-வ ரொம்ப நல்லாப் படம் பிடிப்பார். அவரோட இந்தப் பதிவுல
/
அவரு வெறும் நந்துதானுங்க நந்து நந்து இல்லை.
:)))))
Post a Comment