குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Sunday, July 20, 2008

வாங்க! வாங்க! வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங்க :)

எல்லாருக்கும் வணக்கம்! :)

வருகை தந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி.

இது என்னுடைய சிறிய முதல் முயற்சி. என்னுடைய 4 1/2 வயது மகனுக்காக, சொல்ல நினைத்துத் துவங்கியது, இப்பொழுது உங்கள் முன்னால்.

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:இரண்டு வாரத்திற்கு ஒரு கதை என்று, இப்பொழுது நீங்கள் பார்க்கும் இந்த வடிவிலேயே கதை சொல்லப்படும்.

தமிழில் கதை இருக்க வேண்டும், குழந்தைகள் தமிழில் 'டிஜிடல் ஸ்டோரி' கேட்க வேண்டும் என்பதன் முயற்சியே இது.

1-லிருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான, கதைக்கரு சொல்லப்படும். ஆர்வமுள்ள, வண்டு-சிண்டுவைப் பிடித்த மற்ற குழந்தைகளும், குழந்தயுள்ளம் கொண்ட எல்லாப் பெரியவர்களும், வந்து கேட்டால், மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்.

தங்களின், ஊக்குவிப்பை, பின்னூட்டமாய் இட்டுச் செல்ல வேண்டுகிறேன்.

நிறை, குறை, பிடித்தவை, மிகவும் பிடித்தவை, சற்றுக் குறைவாய்ப் பிடித்தவை :) மற்றும் உங்கள் எண்ணங்கள் என்னவோ அதையும், இந்தப் படக்கதை கேட்ட உங்கள் குழந்தைகளின் கேள்விகள் என்னவோ அதையும் எனக்குத் தெரிவியுங்கள். :).

குழந்தைகளும் நீங்களும் எப்பொழுது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து இந்த வலைப்பூவில் கதை கேட்கலாம். :-)

நன்றி!

-இப்படிக்கு,
புதுவண்டு.

பி.கு.: என் மின்னஞ்சல் : pudhuVandu@gmail.com.

எல்லாக் கதைகளையும், இந்த வலைப்பூவின் வலதுபுறத்தில் உள்ள உரல்களின் மூலம் பார்க்கலாம்.

47 Comments:

மாயா said...

அருமையான முயற்சி தொடருங்கள்

வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

சிண்டுன்னதும் ஓடி வந்தேன்.

என்னோட சிண்டு ஞாபகம் வந்துருச்சு.


உங்க குரல் நல்லா இருக்குப்பா.

புது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.

விஜய் said...
This comment has been removed by the author.
விஜய் said...

வண்டு சிண்டு முன்னோட்டம்(ட்ரெய்லர்) மிக நல்லாயிருக்கு.
புது முயற்சி .புதுமைகள் பல படைக்க வாழ்த்துக்கள்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Ramya Ramani said...

அருமையான முயற்சி,
அருமையான குரல் :))

ராமலக்ஷ்மி said...

ஆகா ரொம்ப நல்ல முயற்சி புது வண்டு. கதையை நிதானமா கேட்டு விட்டு மறுபடி வந்து கருத்து சொல்றேன்.

[உங்க மே பிட் போட்டிப் பதிவில என்னன்னவோ திட்டம் போட்ட ஜோடிப் பொம்மைங்க புதுவண்டை விட்டுப் பிரிய மனமின்றி கூடவே தங்கிட்டாங்க போலிருக்கே:)))!]

cheena (சீனா) said...

புது வண்டே !!

நல்லாருக்கு - ரொம்ப நல்லாருக்கு - நாங்க ஆசையா கத கேக்க முன்னேற்பாடோடு உக்காந்தா 26ம் தேதின்னு சொல்லிப்புட்டீயே - ம்ம்ம்

காத்திருத்தல் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது

படம் கதை திரைக்கதை வசனம் குரல் அத்தனையும் அருமை அருமை

நல்வாழ்த்துகளுடன்

சீனா .... செல்வி ஷங்கர்

சதங்கா (Sathanga) said...

//உங்க குரல் நல்லா இருக்குப்பா.//

ரிப்பீட்டேய். நல்ல உச்சரிப்பும் கூட ... கதை கேக்க நாங்க ரெடி.

ராஜ நடராஜன் said...

வீட்டுக்குப் போய் படம் பார்க்கிறேன்.இப்போதைக்கு தமிழ் = வார்த்தைகளைக் கொஞ்சம் அதிகப் படுத்தறது.நானும் கற்றுக்கொள்வேனே.

NewBee said...

//
மாயா said...
//

வாங்க மாயா! வாங்க.முதல் வருகைக்கு மிக்க நன்றி.தொடர்ந்து வாங்க :)

//அருமையான முயற்சி தொடருங்கள்
வாழ்த்துக்கள்//

வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி :). பதிவு போட்ட உடனே, உங்க வாழ்த்துகள் வந்தது, மிகுந்த உற்சாகத்த கொடுத்திருக்கு மாயா. நன்றி! :)

NewBee said...

//துளசி கோபால் said... //

டீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :D :D. வாங்க, வாங்க நலமா? :)

//சிண்டுன்னதும் ஓடி வந்தேன்.
என்னோட சிண்டு ஞாபகம் வந்துருச்சு.//

நானானி அம்மாவின் பதிவுப்பின்னூட்டத்தில், ச்சிண்டு, தத்தி கதை படித்தேன் டீச்சர். இப்ப, ரெண்டும் பெரிய குருவிகள் ஆகி, சொந்த இரக்கையில பறந்துகிட்டு இருப்பாங்க. சரிதானே டீச்சர்?

//
உங்க குரல் நல்லா இருக்குப்பா.

புது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.
//

மிக்க நன்றி டீச்சர்.குரல், இயற்கையின் அருள்! :).

நீங்களும், உங்களுக்கு தெரிஞ்ச எல்லாக் குழந்தைகளையும் கூட்டிக்கிட்டு கதை கேக்க தொடர்ந்து வந்தா, மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

NewBee said...

// விஜய் said... //

வாங்க விஜய்! நலமா? :)

//வண்டு சிண்டு முன்னோட்டம்(ட்ரெய்லர்) மிக நல்லாயிருக்கு.
புது முயற்சி .புதுமைகள் பல படைக்க வாழ்த்துக்கள்
//

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி விஜய்.

ட்ரெய்லர் = முன்னோட்டம். மிக்க நன்றி விஜய். மனசுல குறிச்சுகிட்டேன். வலைப்பூவின் வாலிலும் சேர்த்துவிடுகிறேன்.

தொடர்ந்து வாங்க.... நன்றி!

NewBee said...

//Ramya Ramani said...
//

வாங்க ரம்யா ரமணி! நலமா? :)

//அருமையான முயற்சி,
அருமையான குரல் :))
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க! முடிஞ்சா, நேரம் கிடைக்கும் பொழுது குட்டிகளையும் கூட்டிகிட்டு. :)

NewBee said...

//ராமலக்ஷ்மி said...
ஆகா ரொம்ப நல்ல முயற்சி புது வண்டு.//

வாங்க வாங்க ராமலக்ஷ்மி! நலமா? :)

// கதையை நிதானமா கேட்டு விட்டு மறுபடி வந்து கருத்து சொல்றேன்.
//

நல்லா வாங்க, எப்பொழுது வேண்டுமானாலும் வந்து, எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்பதற்கான முயற்சியே இந்த 'டிஜிட்டல் ஸ்டோர்'. :)

//
[உங்க மே பிட் போட்டிப் பதிவில என்னன்னவோ திட்டம் போட்ட ஜோடிப் பொம்மைங்க புதுவண்டை விட்டுப் பிரிய மனமின்றி கூடவே தங்கிட்டாங்க போலிருக்கே:)))!]
//

உண்மை. அவர்கள் போட்ட திட்டம் தான், இந்த முயற்சிக்கான முதல் விதை.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. தொடர்ந்து வாங்க, அறிந்த தெரிந்த குழந்தைகளையும் கூட்டிகிட்டு. :)

NewBee said...

//cheena (சீனா) said...
புது வண்டே !!

நல்லாருக்கு - ரொம்ப நல்லாருக்கு - நாங்க ஆசையா கத கேக்க முன்னேற்பாடோடு உக்காந்தா 26ம் தேதின்னு சொல்லிப்புட்டீயே - ம்ம்ம்

காத்திருத்தல் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது

படம் கதை திரைக்கதை வசனம் குரல் அத்தனையும் அருமை அருமை

நல்வாழ்த்துகளுடன்

சீனா .... செல்வி ஷங்கர்
//

அன்பு சீனா ஸார்! செல்வி அம்மா,

வாங்க வாங்க. நலமா?:)

உங்கள் இருவரின் வாழ்த்து எனக்குப் பெரும் பலம். தொடர்ந்து வாங்க, கண்லபடுற அம்புட்டு குட்டிஸையும் கூப்பிட்டுகிடு :D :D.

படக்கதை கேட்டு, அந்தக் குழந்தைகள் கேட்கும் கேள்விகள, எனக்குக் கண்டிப்பா சொல்லுங்க. நானும் 'கொஞ்சம்' :-0 , 'அதிகம்' கத்துக்கிறேன். :).

NewBee said...

// சதங்கா (Sathanga) said... //

வாங்க சதங்கா! வாங்க!

நலமா? :)

//உங்க குரல் நல்லா இருக்குப்பா.//

இயற்கையின் அருள்.

ரிப்பீட்டேய். நல்ல உச்சரிப்பும் கூட ... //

என் பெற்றோரின் உழைப்பு இதில் அதிகம். மிக்க நன்றி சதங்கா!

//கதை கேக்க நாங்க ரெடி.//

உண்மையாவே உற்சாகம் கொடுக்குது இந்த வார்த்தைகள். கூடவே, பொறுப்பையும்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க. :)

NewBee said...

//ராஜ நடராஜன் said... //

வாங்க வாங்க நடராஜன்!

நலமா? :)

//வீட்டுக்குப் போய் படம் பார்க்கிறேன்.//

கண்டிப்பாப் பாருங்க. உங்களுக்கு தெரிஞ்ச எல்லாக் குழந்தைகளுக்கும் காட்டுவீங்களா? :)

//இப்போதைக்கு தமிழ் = வார்த்தைகளைக் கொஞ்சம் அதிகப் படுத்தறது.நானும் கற்றுக்கொள்வேனே.
//

கண்டிப்பாக. நானும் கற்றுக்கொண்டுதானிருக்கிறேன். இன்றைய மொழிபெயர்ப்பு, ட்ரெய்லர் = முன்னோட்டம். :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க. தொடர்ந்து வாங்க.

துளசி கோபால் said...

வண்டு,

அது பறவை:-)

அதுக்கப்புறம் இன்னொரு சிண்ட்டு வந்துட்டான்.

அவன் என்னோடு இருந்த காலம் ரொம்ப இனியது.

அடுத்தடுத்த பகுதிகளாக எழுதி இருக்குப்பா.

குழந்தைகள் நிறைய இருக்காங்க. ஆலி, பூனி, கப்பு, ஜிகே, மில்ஸ்ன்னு.

எல்லாரையும் கூட்டிக்கிட்டு வந்துடறேன்:-)

Noddykanna said...

Dear RNV,

pudhiya muyarchi! paaraattukkal! sollitteela, ini akkam, pakkam, andai, asalaar-nnu yelaa thamizh kuzhandhaigalukkum seidhi solliraen. naan padam thaan paaka mudinjadhu, veettukku poyee andha maaya kuralayum kaetturaen.
pinoottam pinnae!

Vaazhthukkal!

-- noddykanna

விஜய் said...

உங்கள் கேள்வி--
கடைசி வரி... என்ன சொல்றதுன்னு தெரியல விஜய்?

உங்கள் பதில்--
பெட்ரோல் சிக்கனம் மிக மிக அவசியமே.

வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி..
விஜய்..
www.pugaippezhai.blogspot.com

மங்களூர் சிவா said...

நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

உங்கள் குரலா? இனிமை.

ராமலக்ஷ்மி said...

புதுவண்டல்லவா? குடித்த தமிழ் தேனுக்கு அளவுண்டா என்ன?
அதான் குரல் தேன்மதுரமாய் ஒலி(இனி)க்கிறது!

//உண்மை. அவர்கள் போட்ட திட்டம் தான், இந்த முயற்சிக்கான முதல் விதை.//

அட ஆமாம் அப்பவே சொல்லியிருந்தீங்களே,கதை,வசனம்,டைரக்க்ஷன் பண்ணலாம்னு. ஆனா ஒண்ணே ஒண்ணு தப்பா சொல்லியிருந்தீங்க "யாரு பாக்குறது"னு!
பாருங்க பாருங்க, குட்டீஸ் முதல் பாட்டி, தாத்தாஸ் வரை குஷியாக் கூடி.... எப்படி இருக்கப் போகுது ரெஸ்பான்ஸ்னு...பாருங்க...!வாழ்த்துக்கள்!

வேளராசி said...

காத்திருத்தல் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது

படம் கதை திரைக்கதை வசனம் குரல் அத்தனையும் அருமை அருமை


அருமையான முயற்சி தொடருங்கள்

வாழ்த்துக்கள்

NewBee said...

//துளசி கோபால் said...
குழந்தைகள் நிறைய இருக்காங்க. ஆலி, பூனி, கப்பு, ஜிகே, மில்ஸ்ன்னு.

எல்லாரையும் கூட்டிக்கிட்டு வந்துடறேன்:-)
//

:D :D. மிக்க நன்னி! :). எல்லாருக்கும் துண்டு போட்டுர்ரேன்.... :)

NewBee said...

//Noddykanna said...
Dear RNV,

pudhiya muyarchi! paaraattukkal! sollitteela, ini akkam, pakkam, andai, asalaar-nnu yelaa thamizh kuzhandhaigalukkum seidhi solliraen.

Vaazhthukkal!

-- noddykanna
//

அன்பு நாடிக்கண்ணா,

:). வரணும். நலமா? :)

உன் ஊக்குவிப்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.

தொடர்ந்து வரவும், குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு. :)

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி நாடி.

பி.கு.:குருவிகளின் கருத்துகள் அவர்கள் 'கையினாலேயே' வந்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும். :)

NewBee said...

//விஜய் said...
//

ஹா..ஹா...ஹா...விடமாட்டீங்களே...:)))))

நன்றி விஜய் :)))

NewBee said...

// மங்களூர் சிவா said... //

வாங்க சிவா! :)))

நலமா?

//நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். உங்கள் குரலா? இனிமை.//

ஆமாம் :)

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாங்க.

NewBee said...

//ராமலக்ஷ்மி said...
//

உங்கள் ஊக்குவிப்பு மகிழ்ச்சியைத்தருகிறது. கூடவே பொறுப்பையும்...:)

நன்றி ராமலக்ஷ்மி.

NewBee said...

//வேளராசி said... //

வாங்க 'வேளராசி'. :)

நலமா?

//காத்திருத்தல் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கிறது//

அதை நிறைவேற்றுவதற்கு என்னாலான முழு முயற்சி எடுக்கிறேன் :))

//படம் கதை திரைக்கதை வசனம் குரல் அத்தனையும் அருமை அருமை.
அருமையான முயற்சி தொடருங்கள்.
வாழ்த்துக்கள்
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க...தொடர்ந்து சந்திப்போம்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

வாவ்... புது வண்டு அட்டக்காசம்ப்பா..அதுவும் உங்க குரல் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி தொகுத்துவழங்குறாப்ப்ல இருக்கு.. நாங்கள்ளாம் ரெடியாக்கும் சீக்கிரம் ஆரம்பிங்க..முயற்ச்சிக்கு வாழ்த்துகள்

NewBee said...

//கயல்விழி முத்துலெட்சுமி said... //

வாங்க கயலக்கா,

நலமா? :)

//வாவ்... புது வண்டு அட்டக்காசம்ப்பா..அதுவும் உங்க குரல் டிவியில் குழந்தைகள் நிகழ்ச்சி தொகுத்துவழங்குறாப்ப்ல இருக்கு.. //

மிக்க நன்னி :)

//நாங்கள்ளாம் ரெடியாக்கும் சீக்கிரம் ஆரம்பிங்க..முயற்சிக்கு வாழ்த்துகள்
//

வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க மகிழ்ச்சி கயலக்கா.

'எல்லாருக்கும் பிடிக்க வேண்டுமே' என்ற பொறுப்பு அதிகமாகியுள்ளது...:)) கண்டிப்பாக முழுமுயற்சி எடுக்கின்றேன், உங்கள் எல்லாருடைய ஊக்குவிப்போடும்.

பேரன்ட்ஸ் கிளப் said...

அருமையான முயற்சி தொடருங்கள்

வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

ஆஹா நல்ல முயற்சியா இருக்குதே!

நிஜமா நல்லவன் said...

வண்டு சிண்டு எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான பேரு தான். சரியா தான் செலக்ட் பண்ணி இருக்கீங்க.

நிஜமா நல்லவன் said...

முன்னோட்டம் சூப்பர்!

நிஜமா நல்லவன் said...

உங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கு. நீங்க கதை மட்டும் சொல்லாம பாடவும் செய்யலாமே?

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்களுடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்!

வல்லிசிம்ஹன் said...

புது முயற்சி எடுக்கும் புது வண்டுக்கு ரீங்காரம் நல்லாவே வருது. நல்லா இருக்குப்பா. காத்துக்கிட்டு இருக்கேன் என் பேரன்களோட:)

NewBee said...

//பேரன்ட்ஸ் கிளப் said...
அருமையான முயற்சி தொடருங்கள்

வாழ்த்துக்கள்
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க பேரன்ட்ஸ்!உங்கள் அனைவரின் ஊக்குவிப்பும் எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தரும். :) நன்றி.

பி.கு.:பதில் மொழியிட மிகவும் தாமதித்துவிட்டேன். மன்னிகவும் :-|.

NewBee said...

// நிஜமா நல்லவன் said...//

நி.ந.,

வாங்க வாங்க :)

நலமா?

பதில் மொழியிட மிகவும் தாமதித்துவிட்டேன். மன்னிகவும். :(

//ஆஹா நல்ல முயற்சியா இருக்குதே!//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த மசிழ்ச்சி :D :D

NewBee said...

// நிஜமா நல்லவன் said...
வண்டு சிண்டு எல்லோருக்கும் ரொம்ப பிடித்தமான பேரு தான். சரியா தான் செலக்ட் பண்ணி இருக்கீங்க.//

ஹி...ஹி..ஹி..வண்டு (என் பேரும் :P), சிண்டு பேரும் எல்லாருக்கும் பிடிச்சதுல, அவுங்க ரெண்டு பேரும் ஜிவ்வுன்னு பறந்து.......இப்ப அவுங்களப் பிடிக்கவே முடியல...:D :D

NewBee said...

நிஜமா நல்லவன் said...
//முன்னோட்டம் சூப்பர்!//

நன்னி! :))

//உங்களுக்கு நல்ல குரல் வளம் இருக்கு. நீங்க கதை மட்டும் சொல்லாம பாடவும் செய்யலாமே?//

ஆஹா! நி.ந.! நீங்க 'நிஜமா' நல்லவர் இல்ல, 'அநியாயத்துக்கு' நல்லவர் :)

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :).
ஆனந்தக் கண்ணீர்.

NewBee said...

//
நிஜமா நல்லவன் said...
வாழ்த்துக்களுடன் அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்!

//

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது நி.ந. என் சிறுமுயற்சிக்கு நீங்கள அத்தனை பேரும் வாழ்த்துச் சொல்லி உற்சாகப்படுத்துவது. :)

என் பொறுப்பு கண் முன்னே தெரிகிறது. தங்கள் எல்லார் அன்பினோடும், குழந்தைகளின் பின்னூட்டங்களோடும், நானும் கற்றுக்கொண்டே நல்ல கதைகள் செய்யுறேன். :)))

NewBee said...

//வல்லிசிம்ஹன் said... //

வல்லியம்மா :D,

வாங்க! வாங்க!

நலமா? :)

//புது முயற்சி எடுக்கும் புது வண்டுக்கு ரீங்காரம் நல்லாவே வருது. நல்லா இருக்குப்பா. காத்துக்கிட்டு இருக்கேன் என் பேரன்களோட:)
//

ஆஹா! கேட்கவே இனிமையா இருக்கு. உங்களுக்கும் பேரன்களுக்கும் வண்டு-சிண்டு மிகவும் பிடிக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து வாங்கம்மா பேரன்களோடு.

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க்க்க்க்க நன்றி அம்மா :)

NewBee said...

வல்லிமா,

வண்டு 'லேஸி' வண்டாத் தூங்கிடுச்சு. அதான் பதில் மொழி தாமதம்மாயுடுச்சு. தப்பா எடுத்துக்காதீங்க. :((

SanJai said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி. :)

NewBee said...

//SanJai said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரி. :)
//

வாங்க SanJai,

நலமா? :)

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)

தொடர்ந்து வாங்க. தெரிந்த குழந்தைகளையும் முடிந்தால் கூட்டிக்கொண்டு வாங்க. :)))

blogger templates 3 columns | Make Money Online