குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Saturday, September 20, 2008

என் அம்மாவுக்காக...:) - வண்டு-சிண்டு கதை 5

வாங்க! வாங்க!

வணக்கம்.

அனைவரும் நலமா? :)

என் விடுமுறை இனிதே அமைந்தது :). விடுமுறையில் வந்த இரு கதைகளையும் நீங்களும் குழந்தைகளும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)'

அதற்கு முன் வண்டு-சிண்டு அறிமுகக் கதை கேட்போமா? யார் வண்டு, யார் சிண்டு என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்வோமே :)

வண்டு-சிண்டு அறிமுகக்கதை

இன்றைய கதை.....'என் அம்மாவுக்காக...:)':

அகலப்பட்டை - 512 kb:அகலப்பட்டை 150 kb:
-------------------------------------------------------------------------------------------------

என் பிள்ளை இன்னும் இதைக்கேட்கவில்லை.சுடச்சுட, சுட்டு, உங்களுக்கும், குழந்தைகளுக்கும் தந்துள்ளேன். :)

தங்கள் கருத்துகளையும், உங்கள் குழந்தைகளின் புரிதல்கள், கேள்விகள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.

என் பிள்ளைக்கு இதைக்காட்டியவுடன் அவன் உரையாடலை இங்கே, பதிவேற்றுகிறேன்.

நன்றி. :)

சென்ற இரு கதைகளின் சுட்டி கீழே:

4. என் சிற்றுண்டி

3. விளையாடும் நேரமிது

பி.கு.:இந்தக் கதை, ஒரு வயதிலிருந்து ஏழு வயதுவரை உள்ள குழந்தைகளுக்காக என்பதால், இன்றைய கதையை, மிகக்குட்டி, வாண்டுகளுக்கு, பெரியவர்கள்தான், அவர்களுக்குப் புரியும் வகையில் மறுபடி சொல்ல வேண்டி இருக்கும் என நினைக்கிறேன் :). தங்கள் அனுபவத்தையும் எனக்குத் தெரிவியுங்கள்.

இன்றைய கதையில், இனிவரும் கதைகளின் போக்கில், மாற்றம் ஏதுவும் வேண்டுமெனில், பின்னூட்டமாய்ப் பின்னுங்களேன். நன்றி:)

19 Comments:

ராமலக்ஷ்மி said...

நமக்காக எல்லாம் செய்யும் அம்மாவுக்கு உடல் நலமில்லாத போது என்ன செய்யலாம் என நாதனுக்கு நல்ல யோசனைகள் சொன்ன வண்டுவுக்கும் சிண்டுவுக்கும் வாழ்த்துக்கள். வருத்தமாய் இருந்த நாதன் மனமும் திருப்தியாகி விட்டிருக்கும் அம்மாவின் முகத்தில் சிரிப்பைக் கண்டதும். பின்னே, மருந்துடன் நின்றிடாமல் பூங்கொத்து, வாழ்த்து அட்டை என கூட்டணியாய் அமர்க்களப் படுத்தியிருக்கிறார்களே:)!
சின்னச் செல்லங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல நல்ல பாடங்கள் தொடரட்டும் புதுவண்டு!

தமிழ் பிரியன் said...

அம்மாவுக்கு மட்டும் தான் மருந்தா?... நல்லா இருக்கு! எல்லாவற்றையும் என் கேமராவில் மாற்றி வைத்துள்ளேன்.. என் மகனுக்கு போட்டுக் காட்டுவதற்கு..:)

ஆயில்யன் said...

//தமிழ் பிரியன் said...
அம்மாவுக்கு மட்டும் தான் மருந்தா?... நல்லா இருக்கு! எல்லாவற்றையும் என் கேமராவில் மாற்றி வைத்துள்ளேன்.. என் மகனுக்கு போட்டுக் காட்டுவதற்கு..:)
//

இது போன்ற பல பெற்றோர்களுக்கும் நல்ல நல்ல யோசனைகள் அளிக்கும் பாடங்கள் அருமை!
தொடருங்கள் உங்கள் பதிவுகளை!
:)

அதிஷா said...

இந்த கதைகளை என்னால் என் குழந்தைகளுக்கு கூற இயலாது இருப்பினும் பிற்காலத்தில் குழந்தை குட்டினு ஆகும் போது உபயோகித்து கொள்கிறேன்

கதைகள் சூப்பர்

தொடரட்டும் உங்கள் பணி

cheena (சீனா) said...

ஹாய் ஹாய் வண்டே

நல்லா இருக்கு - அம்மாவெ மகிழ்விக்கற கத

ஓம்பு சரி இல்லன்னா மந்து குய்க்கணும் - ஆமா - வண்டும் சிண்டும் நாதனுக்குச் சொல்லிக் கொடுத்து - அம்மாக்கு மந்து கொடுத்தாச்சு

அப்பறம் - பூ, படம், ஸ்டார் னு அமக்களப்ப்படுத்திட்டாங்க

சூப்பர் கத

நல்லாரு வண்டு

நந்து f/o நிலா said...

உடம்பு சரி இல்லாதது குரலிலேயே தெரியுது. இந்த நிலையிலும் ஒரு வண்டு சிண்டு பதிவு. உங்க கடமையுணர்ச்சிய என்ன சொல்ல?

ஆண்ட்டிக்கு உடம்பு சரி இல்லையான்னு நிலா பாவமா கேட்டுச்சு. படம் வரைந்து கொடுக்கிறதுல்லாம் விளக்கமா சொன்னாலும் இப்போ புரியுமான்னு தெரியல. இரண்டே கால் வயதுதானே ஆவுது. பாக்கலாம் அடுத்தடுத்த தடவைகள் திரும்ப பாக்கும்போது என்ன சொல்லுதுன்னு

NewBee said...

வாங்க ராமலக்ஷ்மி,

நலமா? :)

நீங்க த ப்ர்ஸ்ட்டு....நாங்க த ஹாப்பி...:P

//சின்னச் செல்லங்கள் //

சொல் அருமை :)

வாழ்த்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி. இன்னுமொரு கதைக்களம் கான எனக்கிதொரு உற்சாக டானிக் :)

NewBee said...

//தமிழ் பிரியன்....//

தம்பி வரணும். நலமா? :)

//அம்மாவுக்கு மட்டும் தான் மருந்தா?... நல்லா இருக்கு! //

அம்மாவுக்குத் தான ஒம்பு சரியில்ல. அதான் அவுங்களுக்கு மட்டும் மருந்து.

அப்பா, நாதன் வரைஞ்ச படத்த share பண்ணிக்கட்டும் :). Sharing is a good habit, u know :P
:D :)

//எல்லாவற்றையும் என் கேமராவில் மாற்றி வைத்துள்ளேன்.. என் மகனுக்கு போட்டுக் காட்டுவதற்கு..:)
//

இந்த அத்தையின் அன்பை, செல்லத்திற்குத் தெரிவிக்கவும்.அடுத்தமுறை வலைப்பூவிற்கு அவரையும் அழைத்து வாருங்கள். என்ன வயது என்று தெரியவில்லை.முடிந்தால் அவரையே பின்னூட்டச் சொல்லுங்கள் :))

வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.சென்றமுறை,தாங்களே எல்லாருக்கும், பொறுப்பாய், பதிலளித்தை நினைத்தால்.............எனக்கு இன்னமும் புல்லரிக்குது தம்பி. நன்றி. :))

NewBee said...

//ஆயில்யன் said...
//

வாங்க ஆயில்யன். நலமா? :)

//இது போன்ற பல பெற்றோர்களுக்கும் நல்ல நல்ல யோசனைகள் அளிக்கும் பாடங்கள் அருமை!
தொடருங்கள் உங்கள் பதிவுகளை!
:)
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க. முடிந்தால், அறிந்த, தெரிந்த, சின்னச் செல்லங்களையும் அழைத்து வாருங்கள். நன்றி.

NewBee said...

//அதிஷா said... //

வாங்க அதிஷா. நலமா? :)

//இருப்பினும் பிற்காலத்தில் குழந்தை குட்டினு ஆகும் போது உபயோகித்து கொள்கிறேன்//

ஆஹா! மிக்க நன்றி.கதை, ஒரு வருங்கால, அன்புத் தந்தைக்கும் பிடித்ததில் மிக மிக மகிழ்ச்சி :)

//கதைகள் சூப்பர்

தொடரட்டும் உங்கள் பணி
//

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க்க்க மகிழ்ச்சி அதிஷா. தொடர்ந்து வாங்க.நன்றி. :))

NewBee said...

//cheena (சீனா) said... //

வாங்க வாங்க சீனா ஸார். நலமா? :)

புது இடமெல்லாம், நம்ம சொன்ன பேச்சு கேக்குதா? :P

//நல்லா இருக்கு - அம்மாவெ மகிழ்விக்கற கத

சூப்பர் கத

நல்லாரு வண்டு
///

மிக்க மகிழ்ச்சி. உங்க வாழ்த்து, தொடர்ந்து, எனக்குத் தேவை! தேவை! தேவை! :)

நேரம் கிடைக்கும் போது, செல்வி அம்மாவையும், கண்டிப்பா வந்து கதை கேட்கச் சொல்லுரீங்களா :))

NewBee said...

// நந்து f/o நிலா said... //

வாங்க நந்து. வாங்க நிலாக் குட்டி. நலமா?

நேரில் பார்த்தபொழுது, நிலா, வெகு சீரியஸாய், வண்டு-சிண்டு கதைக் குரலையும், என்னையும் ஒருங்கிணைக்க யோசித்த, expression, கண்ணுக்குள்ளேயே நிக்குது.நல்லா படிச்சு, குட் கேர்ள்-ஆ வரணும். சேரியா? :))

//உங்க கடமையுணர்ச்சிய என்ன சொல்ல?//

ஹி..ஹி..அதுவே, கதைக்கருவானதால், ஒருவகையில் நல்லதாப் போச்சு. :))

//ஆண்ட்டிக்கு உடம்பு சரி இல்லையான்னு நிலா பாவமா கேட்டுச்சு.//

how chweet!இந்த மாதிரி, குட்டிகள் கேட்கும், செய்யும் சின்ன விடயங்கள், உண்மையாகவே, நம் களைப்பைப் போக்கிவிடும் தான். :). Thanks nila.

// இரண்டே கால் வயதுதானே ஆவுது. பாக்கலாம் அடுத்தடுத்த தடவைகள் திரும்ப பாக்கும்போது என்ன சொல்லுதுன்னு//

உண்மை நந்து. சென்ற இரு கதைகளும் கூட நிலாவுக்கு, heavy subjects தான்னு நினைக்கிறேன்.

ஆனா, இந்த வயதுக்குழந்தைகளுக்குப் புரியவில்லை என்றாலும் திரும்பத் திரும்பச் சொன்னால், அது ஒரு habit-ஆக, மனதில் பதிந்துவிடுகிறது. பிறகு அந்த வயது வரும் போது, அதுவே நல்ல பழக்கமாய், இயல்பாய் வரும். நாம் டென்ஷனாகிக் கொதிக்க வேண்டாம் பாருங்கள் :P

அதனால், இந்தக் கரு இந்த வயதுக் கதைகளுக்கு ஒத்துவரும் என்று எடுத்தேன். பெரியவர்கள், கதையை, இன்னும் break down, செய்து சொல்லத் தான் வேண்டும் என்பதை, என் பிள்ளைக்குச் சொல்லும் போது அறிந்தேன்.

கதை சொல்லும் விதத்தை, இன்னும் எளிமையாக்க, நான் வழிகள் யோசிக்கிறேன்.

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்ச்சி நந்து.

நிலாக்குட்டி! 5 கதைகள்ல, எது உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ, அதையே, திரும்பப் பாருங்க. சேரியா? :))

பொன்ஸ்~~Poorna said...

வண்டு,
நல்லா இருக்குங்க கதை. இதை அப்படியே தரவிறக்க முடியுமா?
இங்க CTA மூலம் நாங்க பாடம் எடுக்கிற போது இதைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி உண்டா?

அன்புடன்
பொன்ஸ்

NewBee said...

வாங்க பொன்ஸ்,

நலமா? :)

// இதை அப்படியே தரவிறக்க முடியுமா?//

பதிவில் உள்ள வீடியோவைக் கிளிக் செய்து, youtube தளத்திற்குச் சென்று, அங்கு, வலது புறத்தில் embed செய்வதற்கான, code-ஐ, உங்கள் பாடத்தில் copy, paste செய்யலாம்.

//இங்க CTA மூலம் நாங்க பாடம் எடுக்கிற போது இதைப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி உண்டா?
/

கண்டிப்பாய், பாடத்தில் பயன்படுத்தலாம் :).

Source: NewBee - http://naanpudhuvandu.blogspot.com/என்று அடிக்குறிப்பில் குறிப்பிட்டால், மிக்க மகிழ்ச்சி அடைவேன். இன்னும் நிறைய குழந்தைகளுக்குப் போய்ச் சேரும் வாய்ப்பளித்ததிற்கு, மிக்க நன்றி பொன்ஸ் :)

அவர்கள், கருத்துகள், கேள்விகள் , பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்பார்ப்புகள் எல்லாம் அரிய ஆவலாய் உள்ளேன்.

நன்றி :). தொடர்ந்து, குழந்தைகளுடன் வாங்க :)

the new cinema said...

நான் பார்த்த கொஞ்ச வலைப்பூக்களில் உங்களுடையது சூப்பர்
எனக்கும் சொல்லி கொடுங்களேன் !

பொன்ஸ்~~Poorna said...

embed?! :( அங்க பள்ளியில் இணையம் இல்லீங்களே...

தமிழ் பிரியன் said...

இந்த சிறுவர் கதையை பதிவிறக்கிக் கொள்ள இங்கு செல்லவும்

இது 11 mb அளவுள்ள MP4 கோப்பு.

NewBee said...

//பொன்ஸ்~~Poorna said...
embed?! :( அங்க பள்ளியில் இணையம் இல்லீங்களே...

//

பொன்ஸ்,

தங்கள், ஜிமெயிலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பாருங்கள். நன்றி. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஊருக்கு போயிட்டுவந்தப்பறம் நர்சரி அட்மிசன் டென்சன்.. மகளுக்கு பரிட்சைன்னு இருந்ததில் பார்க்க தாமதமாகிட்டது..

நல்லா இருக்கு கதை. நீங்க சொன்ன மாதிரியே என் சின்னப்பையனுக்கு புரியல மகளுக்கு புரிஞ்சது. உங்கபையன் சொன்னதை இன்னும் அப்டேட் செய்யலையா..?

blogger templates 3 columns | Make Money Online