குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Tuesday, October 21, 2008

வண்டு - சிண்டு கதை 7 - காணத்தவறாதீர்கள் ;)

வணக்கம்.


அனைவரும் நலமா? :)

பொறுமைக்கு நன்றி :)

வண்டு-சிண்டு கதைகள் சனிக்கிழமைகளிலிருந்து செவ்வாய்க்கு மாறிய பின் வரும் முதல் கதை / வாழ்த்து இது.


ஆம். அடுத்த வாரம் வரும் தீபாவளிக்கான, முன்னோட்டம் இது :)


வண்டு - சிண்டுவின் தீபாவளி வாழ்த்துகள்:

பாகம் 1/3:


பாகம் 2/3 :


பாகம் 3/3:


நாதனும் இதில் ஈடுபட்டிருந்ததால், அவனுக்கு 'நோ கமெண்ட்ஸ்', மிகுந்த மகிழ்ச்சி :)


இந்த முறை சற்று (!!!) நீளமான படம் தான். ஆனால் குழந்தைகளுக்கு, அவசரமில்லாமல், மீண்டும் வீடியோ பார்த்து அல்லது பார்த்துக் கொண்டே வாழ்த்தட்டை தயாரிக்க உதவ வேண்டும் என்றே, நீட்டி விட்டேன்.


தங்கள் கருத்துகளையும், குழந்தைகளின் எண்ணங்களையும் எனக்கு, கண்டிப்பாய்த் தெரிவியுங்கள்.


அவர்கள் தயார் செய்த வாழ்த்து அட்டையையும் 'ஸ்கேன்' (scan) செய்து எனக்கு அனுப்புங்கள். அக்டோபர் 28, தீபாவளிக்கு மறு நாள் வரை எனக்கு அனுப்புங்கள்.மறக்காமல், குழந்தையின் பெயர், வயது மற்றும் பெற்றோர் பெயர் குறிப்பிட்டு அனுப்புங்கள்.


அனுப்ப வேண்டிய முகவரி : PudhuVandu@gmail.com


எல்லாவற்றையும் சேர்த்து, நாம் ஒரு பெரிய வாழ்த்தட்டை, தயாரிப்போம் சேரியா? :))


நன்றி.


பி.கு: இந்த வீடியோவை 'யூ-டூயுப்'-ல் ஏற்றுவதற்குள் கன்னாபின்னாவென்று பட்டுவிட்டேன். அதிகபட்சம் ஒரு வீடியோ 10 நிமிடம் தான் இருக்கலாமாம் :((

சரி என்று ஒருவழியாய், 3 வீடியோவாய்ப் பிரித்தால், 'யூ-டியூப்' Under maintenance-ல் சென்று விட்டது :((((. என்னத்தைச் சொல்ல.

9 Comments:

Thamiz Priyan said...

மூன்று பகுதியா போட்ருக்கீங்களா? நிறைய ஹோம் ஒர்க் இருக்கும் போல... மிக்க நன்றி! முழுவதும் பார்த்து விட்டு வருகின்றேம்.. :)

cheena (சீனா) said...

haa haa புது வண்டே

மொதல்ல உனக்கும் செல்ல நாதனுக்கும்- உங்க ரங்க்ஸூக்கும் எங்களோட இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

உழைப்பு தெரிகிறது - உழைப்பின் அருமை படம் ( 30 மணித்துளிகளா ) வெளி வந்த பின் ( ஏராளமாகக் கற்றுக் கொண்ட பின்) மனம் மகிழத் தெரிகிறது. நல்ல முயற்சி - இன்னும் தொழில் நுட்பம் கூட வேண்டும்.

அருமை அருமை - நல்வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

எப்போதும் பரிசுகளை வாங்கிக் கொண்டிராமல் நீங்களும் உங்கள் கையாலே வாழ்த்து அட்டை தயாரித்து வழங்குங்கள் பரிசாக உங்கள் அன்பு உறவினர்களுக்கு எனச் சொன்னதோடு நில்லாமல் ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கங்களுடம் நிறுத்தி நிதானமாகக் குழந்தைகள் ஃபாலோ பண்ணும் வகையில் சொல்லியிருக்கிறீர்கள் புதுவண்டு. கடும் உழைப்புத் தெரிகிறது. வாழ்க உங்கள் பணி!

ஆயில்யன் said...

//கடும் உழைப்புத் தெரிகிறது. வாழ்க உங்கள் பணி!
//

தொடர்ந்து வந்து சொல்கிறேன்! தொடராட்டும் உங்கள் பணி

:)

NewBee said...

வாங்க தமிழ் பிரியன்,

நலமா? :)

ஆமாம்.இந்த முறை டெக்னிக்கலாகவும் சிலவற்றை முயற்சி செய்தேன். அதனால் தான் நீண்டு விட்டது :)

பொறுமையாய் வாருங்கள்.

நன்றி :)

NewBee said...

அன்பு சீனா ஸார்,

நலமா? :)

உங்களுக்கும் செல்வி அம்மாவிற்கும் மனம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.

உங்கள் ஊக்கம் எப்போதும் எனக்கு உற்சாக டானிக்.

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. :)

NewBee said...

வாங்க ராமலக்ஷ்மி,

நலமா? :)

//கடும் உழைப்புத் தெரிகிறது. வாழ்க உங்கள் பணி!//

உங்களின் ஊக்கத்திற்கும் மிக்க்க நன்றி :).

வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் கனிந்த மகிழ்ச்சி :).

NewBee said...

//ஆயில்யன் said... //

வாங்க ஆயில்யன்,

நலமா? :)

//கடும் உழைப்புத் தெரிகிறது. வாழ்க உங்கள் பணி!

தொடர்ந்து வந்து சொல்கிறேன்! தொடராட்டும் உங்கள் பணி
:)
//

வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி :)

Thamiz Priyan said...

அக்கா! அழகா எடுத்து இருக்கீங்க... ரொம்ப நல்லா இருக்கு! தொடர்ந்து தாருங்கள்!

blogger templates 3 columns | Make Money Online