குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Sunday, August 24, 2008

சிண்டுவின் 'விளையாடும் நேரமிது'...3-ஆம் கதை

'சிண்டுவின் - விளையாடும் நேரமிது'

வாங்க வாங்க.

அனைவரும் நலமா? :)

பெரியவர்களும் குட்டீஸும் தயாரா!

வழக்கம் போல், புதிதாக வருபவர்களுக்காவும் நமக்காகவும், வண்டு-சிண்டு அறிமுகக் கதை, பேட்போமா?. யார் வண்டு, யார் சிண்டு-னு இன்னொரு முறை தெரிஞ்சுப்போமே :)))

அதற்கு இங்கே கிளிக்குங்கள்

இந்த வாரம் நாம் பார்க்கப்போவது .......

'சிண்டுவின் - விளையாடும் நேரமிது' ....பார்ப்போமா?

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :








அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps :









==================================================================
பிள்ளை: Mom! is that my badge? (அந்த பாட்ஜ் அவன் பள்ளியில் கொடுத்தது :) )
நான் : ஆமாம். உன்னுடையது தான்.

பிள்ளை: Why is vandu wearing it? who gave it to him? Did you give it?
நான் : ம்

பிள்ளை: Are those toys all mine? Did chindu really drive the train? Where is my dinasour now?
நான் : ......
====================================================================

ஆஹா! இந்த முறை, பிள்ளை, கதையை,சட்டை செய்யவே இல்லை :( . அவன் விளையாட்டுச் சாமான்களைத்தான் சிண்டு விளையாடியதா என்பதையேக் கேட்டுக் கொண்டிருந்தான்.

மக்கா! நல்லுள்ளங்களே! இந்த முறை கதை எப்படின்னு நீங்களாவது சொல்லுங்க. மூன்றாவது கதையிலேயே போர் அடுச்சுடுச்சா :-0.

வாங்க வாங்க.வந்து உண்மையச் சொல்லி என்னையக் காப்பாத்துங்க....:))

பெரியவர்களும் , குழந்தைகளும் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் எனக்குக் கண்டிப்பாய்த் தெரிவியுங்கள். தற்போது நான் ஊரில் இல்லையென்றாலும், அப்போ அப்போ எட்டிப்பார்ப்பேன்.

ஆமா !சொல்லிப்போட்டேன். :)))

நன்றி! நன்றி! நன்றி!

பி.கு.: நந்து ஸார்! நிலாக் குட்டிக்கு, Happy sun-லேர்ந்து ஸ்டார் எடுத்து, உங்க நற்கரங்களால் நீங்களே கொடுத்துடுறீங்களா???? :))))). நன்றி. :)

பி.கு 2: நான் ஊரில் இல்லையென்றாலும், கதைகள் சொன்ன நேரத்திற்கு வரும் என்று நான் சொன்னதை, எங்கள் வீட்டு மின்சாரம் படிக்க மறந்துவிட்டது.அது தான் 4 மணி நேரத் தாமதத்திற்குக் காரணம். :((.

ஆனா, வந்துட்டோம்ல :)))

Thursday, August 14, 2008

PIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...

PIT மெகாப் போட்டிக்கு....... - இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.






















ஆமை வருது!
ஆமை வருது!
அசைந்து அசைந்து ஆடி வருது!

குட்டி இலையைத் தின்னும் ஆமை!
குட்டிக்கரணம் போடும் ஆமை!

விட்டுவிட்டு ஓடும் ஆமை!
(விடாமல்)
பிட்டு-க்கு மண் சுமக்கும் ஆமை! :)

Tuesday, August 12, 2008

கயலக்கா, புதுகை தென்றலின் கேள்விகளின் தொடர்ச்சி

இந்தப் பதிவு புதுகை தென்றல் கேட்ட முதல் கேள்வியின் தொடர்ச்சியாய்,

கயலக்கா கேட்ட இரண்டாவது கேள்வியின் பின்னூட்டம்.

===================================================================

ஓகே! நான் இன்னும் இந்த ஸ்டேஜ் வரல. என் மகன் இன்னும் குட்டிதான்.

ஆனால் இங்கே(நாங்கள் இருக்கும் இடத்தில்), முதல் பாகுபாடு வந்துவிட்டது. No pink, Only Blue :). இது, இங்கு உள்ள கலாச்சாரம். அதை மாற்ற முடியாது.குழந்தையிலிருந்து தாத்தா பாட்டிகள் வரை, கிண்டல் செய்வார்கள்.

அந்தந்த சமூகத்தில் இருக்கும் (பின்னூட்டங்கள் வந்த டில்லி,பங்களூர்,UK,புதுகை தென்றல் ஊர்) பழக்கங்களே இந்தப் பிரிவின் அடித்தளம்.

வயதின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டுதான் இருக்கும். சற்று, சிரமாக இருந்தாலும், இவை நடக்கும் போது, பெற்றோராகிய நாம் இதைக் கூலாகத்தான் ஹாண்டுல் செய்ய வேண்டும்.

நாமும் இது சிரீயஸ், இது இப்படி, அது அப்படி, இப்படி இருந்திருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமான தகவல் தராமல், தினமும் பள்ளியில் நடப்பவற்றைப் பற்றிப் பேசுவது போல் ஒரு cool tone-ல் ,

1.குழப்பாமல். அளவான தகவல் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம்.

2.தெரியவில்லை என்றால், ம்ம்ம்ம்...'தப்புத்தான்...ஆனா நடந்துடுச்சு, depends...lets see..' என்று தெரியாது என்றே சொல்லலாம்.

3.அல்லது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு personality இருக்கும்.அந்தக் குழந்தையின் இயல்பு, ஒரு விளையாட்டுப் பொருள் கிடைக்கவில்லை என்றால் எப்படி சாமாளிப்பான்/ள், பிடிக்காத சாப்பாட்டை எப்படி சாப்பிடுவான்/ள், புரியாத ஒரு குழந்தைகள் படத்தைப் பார்த்துவிட்டு என்ன கண்ணோட்டம் கொடுப்பான்/ள் என்பது போல்.

அது தாய், தந்தைக்குத் தெரியும்.அதற்கு ஏற்றார் போல் தேவையான அளவு சொல்லிவிட்டு, மிச்சதை விட்டுவிடலாம். ரெண்டு நாளில் பிராஜக்ட் ஒர்க், ஸ்போர்ட்ஸ் டே என்று அவர்கள் priority மாறும்.

4.அல்லது, தாய்,தந்தைக்கு தன் குழந்தைக்கு எது சரி எனப்படுகிறதோ அது.

இதுதான் வழி என்று சொல்லவில்லை, இது புத்தகத்தில் இருப்பதும் இல்லை.எனக்குத் தோன்றியவை இவை. அவ்வளவு தான் :). Basically, explaining things depends on the kids personality and the parents.That much info. is enough.

// புதுகைத் தென்றல் said...
அதுவரைக்கும் ஏன் வெயிட்டணும்?அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?//

புதுகைத் தென்றல்!

உங்கள் பிள்ளைகளின் வயது எனக்குத் தெரியவில்லை. (இங்கே, நீங்கள்,கயலக்கா,ராமலக்ஷ்மி,நான் எல்லாருமே, நம் குழந்தைகளின் வயதைப் பொருத்தும் கண்ணோட்டம் அளிக்கிறோம்)

அதனால், என் கண்ணோட்டம் வேறாக இருக்கலாம்.

//அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?//

எததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்.இந்த உலகத்தில் பிரச்சனைகளுக்காப் பஞ்சம்?. எல்லாவற்றையும் முன்னமே சொல்லிவிட முடியுமா?

இந்தப் ஆண்/பெண் பேதம் பற்றி மட்டும் முழுவதுமாக சொல்லித் தெளியலாம் என்று நினைத்தால், பிள்ளை எதிர் நோக்கும் மற்ற எல்லாவற்றையும் இதே முறையில் தெளியவைத்துக் கொண்டேதானே இருக்க வேண்டும். இதற்கு மட்டும் தான், நான் புரியவைப்பேன், மற்றவை என்னால் முடியாது, என்று நாம் ஒதுங்க முடியுமா?

எல்லாவற்றையும் முன்னமே, இது இப்படி, நீ இப்படி இருந்து கொள் எனறால், வளரும் பிள்ளை தானாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா?

உலகத்தில் எல்லாம் pre-defined, அம்மா/அப்பா எழுதிய வழிகளில் சென்றால் வாழ்க்கை இனிமை என்பது சரியா?

ஒரு அளவிற்கு பொதுவாக அட்வைஸ் செய்துவிட்டு, அதிகமாக முன்னமே கொட்டிக் கவிழ்க்காமல் (ஓதாமல் - :P), தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே.

வாழ்க்கையில் பலப்பல, பிரச்சனைகளைப் பிள்ளைகள் சந்திக்காமலே போகலாம். அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்?

ஸ்ஸ்ஸ்ஸ்...பதிவு பெருசாயுடுச்சு :))

----------------------------------------------------------------------------------------------

ம்ம்ம்...பதிவை இன்னும் பெருசாக்கப்போகிறேன் ஒரு கதை சேர்த்து. :)).

1. //எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் //

2. //சில விடயங்களை சொல்ல வேண்டிய வயதையும் நாமும் தீர்மானித்து விடுகிறோம் தானே?... அதனால் வந்ததாக இருக்கலாம்.. //

ம்ம்ம்...ஆமாம். தற்போது உள்ள சூழ்நிலையில் சில விடயங்கள் 3,4 வருடங்கள் முன்னதாகவே அறிமுகமாகின்றன.

அங்கே தான்

// புதுகைத் தென்றல் said... எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும்//என்பது வருகிறது.

அந்த விடயத்தின் பார்வை, அந்தந்த வயதைப் பொருத்ததே. இதற்கு ஒரு கதை உண்டு, இந்தப் பதிவிலேயே சற்று நேரத்தில் சேர்க்கிறேன்.//

அதற்கான கதையே இது.

5-ஆம் வகுப்புப் படிக்கும் 10 /11 வயதுப் பெண்ணிற்கும் தாய்க்கும் நடக்கும் உரையாடல்:

பள்ளியில் இருந்து வரும் பெண்: அம்மா! செக்ஸ் என்றால் என்ன? What is Sex?
அம்மா: (முகம் பேயறைகிறது, தூக்கிவாரிப் போடுகிறது)...ம்ம்ம்ம்ம்...என்ன?

பெண்: செக்ஸ்-னா என்னமா?
அப்பா: ஏய், என்னடி கேக்குறா இவ?
அம்மா: இருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது.நான் பேசுறேன்.

பெண்ணிடம் , அம்மா: அது வந்து...ம்ம்ம்....நீ ரூமுக்கு வா.சொல்றேன்

மிகவும் ஜாக்கிரதையாக 10 வயது பெண்ணிற்கு என்ன தெரியவேண்டுமோ புரியுமோ அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி , மிகவும் யோசித்து, சொல்கிறார், அளவாக.

20 நிமிடத்தில் ரூமை விட்டு பெண் வெளியே வருகிறாள்

அப்பா: என்ன ஆச்சு? புருஞ்சுதா?
பெண்: இல்லைப்பா. புரியலை. :(

ம்ம்ம்...அப்பா தன் வார்த்தை வட்டத்துக்குள், பெண்ணுக்குப் புரிய வைக்கிறார். இன்னும் 10 நிமிடம்

பெண்:ஆனா, அப்பா, நீயும் அம்மாவும் சொல்லும் இத்தனை விடயங்களையும் எப்படி, இத்துணூண்டு இடத்தில் எழுதுவது?

அப்பா: என்ன கேக்குற புரியல?

பெண்:பள்ளிக்கூடத்தில், ஒரு application form கொடுத்திருக்கிறார்கள். அதில் Name :

Age:

Sex: என்று கேட்கிறார்கள். இவ்வளவு சின்ன இடத்தில், நீங்களும் அம்மாவும் சொன்ன இத்தனை விடயங்களை எப்படி எழுதுவது? :((((

Sunday, August 10, 2008

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்

இனிய :) சுதந்திரதின நல்வாழ்த்துகள் :)))))


நிறையவற்றை ஒரு வாரம், மூன்று நாள் எனக்கொண்டாடுகிறோம். இனிய சுதந்திரதினத்தையும் அதில் சேர்க்கலாமே என்று தான், இப்போதுலிருந்தே.:)


இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!















படம்: கூகுளார்


இந்தப் பாட்டையும் கேட்டுருங்க! :)))
பாடல்:Smashhits.com


இந்தப் பதிவையும் படிச்சுருங்க :))).


நன்றி : நண்பர் அதிஷா

Friday, August 8, 2008

வண்டு - சிண்டு 'டைகரின் பிறந்தநாள்' - இரண்டாம் கதை

வாங்க வாங்க! நலமா? :)

குழந்தைகளுக்கான படக்கதைகளில் என்னுடைய இரண்டாம் முயற்சி.....

'டைகரின் பிறந்தநாள்'.

அதற்கு முன், வண்டு-சிண்டு அறிமுகப்பகுதியைப் புதிய குழந்தைகளுக்காகவும், உங்களுக்காவும் இன்னொருமுறை பார்ப்போமா? யாரு வண்டு, யாரு சிண்டு-னு இன்னோருவாட்டி தெரிஞ்சுப்போமே :)

வண்டு-சிண்டு அறிமுகம் இங்கே

இப்ப, 'டைகரின் பிறந்தநாள்'.

அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps:





அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:




*************************************************************************************
கதை கேட்டதும் என் பிள்ளையுடனான உரையாடல்:

பிள்ளை: (very seriously) Mom! why is vandu crying? :(
நான் : வண்டுக்கு வயிறு வலிக்குது. அதான் அழறான்.

பிள்ளை: (thinking very deeply). But why is he crying? :(
நான் : நெறைய சாக்லேட் சாப்பிட்டதுனால வயிறு வலிக்குது.அதான் வண்டு அழுது.

பிள்ளை: (seriously) But why did he eat loads of them? :(
நான் : நிறைய சாக்லேட் சாப்பிடக் கூடாதுன்னு வண்டுக்குத் தெரியல அதான்.

பிள்ளை: But why didn't, tiger and chindu tell him, not to eat loads of choclates?
நான் : ம்ம்ம்....சிண்டும், டைகரும் அப்போ அங்க இல்ல. எல்லாரும் வேற ரூம்ல இருந்தாங்க. அதனால யாரும் வண்டு சாக்லேட் சாப்பிடறதப் பாக்கல..

பிள்ளை: (more seriuosly) Oh mom! but, why is vandu crying and why did he eat so much choclates?
நான் : ............................................

*************************************************************************************

கதை கேட்டதும் உங்கள் கருத்துகளுடன், உங்களுடன் கதை கேட்ட குழந்தைகளின் கேள்விகளையும், கருத்துகளையும் சேர்த்து பின்னூட்டமிட்டால், மேலும் மகிழ்வேன்.

தொடர்ந்து கதை கேட்க வாங்க. இதே கதையையும் , முந்தையக் கதைகளையும் அடுத்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை, மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும், குழந்தைகள் கேட்கும்வரை, இங்கே வந்து, அவர்களுக்கும் காட்டுங்கள்.

ஒரு புதிய கதையுடன் ஆகஸ்ட் 23, 2008-ல் உங்களை, சந்திக்கிறேன். மகிழ்ச்சி. :)

பி.கு.: ஒரு மூன்றரை வாரத்துக்கு புதுவண்டு வீட்டவிட்டு எஸ்கேப் ஆகப்போகுது. ஆனா, வண்டு சிண்டு கதை கண்டிப்பா சொன்ன நேரத்துக்கு வரும் :).


பின்னூட்டம் பார்க்கவும் அப்போ அப்போ புதுவண்டு பறந்து வரும். அதுவரைக்கும் எல்லாரும் உங்க வலைப்பூவோட என் வலைப்பூவையும் சேர்த்து பத்திரமாப் பாத்துக்குங்க. ஆமா! சொல்லிட்டேன் :P :)))).

முதல் கதை: இது என்ன கலாட்டா?

blogger templates 3 columns | Make Money Online