குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Tuesday, August 12, 2008

கயலக்கா, புதுகை தென்றலின் கேள்விகளின் தொடர்ச்சி

இந்தப் பதிவு புதுகை தென்றல் கேட்ட முதல் கேள்வியின் தொடர்ச்சியாய்,

கயலக்கா கேட்ட இரண்டாவது கேள்வியின் பின்னூட்டம்.

===================================================================

ஓகே! நான் இன்னும் இந்த ஸ்டேஜ் வரல. என் மகன் இன்னும் குட்டிதான்.

ஆனால் இங்கே(நாங்கள் இருக்கும் இடத்தில்), முதல் பாகுபாடு வந்துவிட்டது. No pink, Only Blue :). இது, இங்கு உள்ள கலாச்சாரம். அதை மாற்ற முடியாது.குழந்தையிலிருந்து தாத்தா பாட்டிகள் வரை, கிண்டல் செய்வார்கள்.

அந்தந்த சமூகத்தில் இருக்கும் (பின்னூட்டங்கள் வந்த டில்லி,பங்களூர்,UK,புதுகை தென்றல் ஊர்) பழக்கங்களே இந்தப் பிரிவின் அடித்தளம்.

வயதின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டுதான் இருக்கும். சற்று, சிரமாக இருந்தாலும், இவை நடக்கும் போது, பெற்றோராகிய நாம் இதைக் கூலாகத்தான் ஹாண்டுல் செய்ய வேண்டும்.

நாமும் இது சிரீயஸ், இது இப்படி, அது அப்படி, இப்படி இருந்திருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமான தகவல் தராமல், தினமும் பள்ளியில் நடப்பவற்றைப் பற்றிப் பேசுவது போல் ஒரு cool tone-ல் ,

1.குழப்பாமல். அளவான தகவல் கொடுக்க முடிந்தால் கொடுக்கலாம்.

2.தெரியவில்லை என்றால், ம்ம்ம்ம்...'தப்புத்தான்...ஆனா நடந்துடுச்சு, depends...lets see..' என்று தெரியாது என்றே சொல்லலாம்.

3.அல்லது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு personality இருக்கும்.அந்தக் குழந்தையின் இயல்பு, ஒரு விளையாட்டுப் பொருள் கிடைக்கவில்லை என்றால் எப்படி சாமாளிப்பான்/ள், பிடிக்காத சாப்பாட்டை எப்படி சாப்பிடுவான்/ள், புரியாத ஒரு குழந்தைகள் படத்தைப் பார்த்துவிட்டு என்ன கண்ணோட்டம் கொடுப்பான்/ள் என்பது போல்.

அது தாய், தந்தைக்குத் தெரியும்.அதற்கு ஏற்றார் போல் தேவையான அளவு சொல்லிவிட்டு, மிச்சதை விட்டுவிடலாம். ரெண்டு நாளில் பிராஜக்ட் ஒர்க், ஸ்போர்ட்ஸ் டே என்று அவர்கள் priority மாறும்.

4.அல்லது, தாய்,தந்தைக்கு தன் குழந்தைக்கு எது சரி எனப்படுகிறதோ அது.

இதுதான் வழி என்று சொல்லவில்லை, இது புத்தகத்தில் இருப்பதும் இல்லை.எனக்குத் தோன்றியவை இவை. அவ்வளவு தான் :). Basically, explaining things depends on the kids personality and the parents.That much info. is enough.

// புதுகைத் தென்றல் said...
அதுவரைக்கும் ஏன் வெயிட்டணும்?அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?//

புதுகைத் தென்றல்!

உங்கள் பிள்ளைகளின் வயது எனக்குத் தெரியவில்லை. (இங்கே, நீங்கள்,கயலக்கா,ராமலக்ஷ்மி,நான் எல்லாருமே, நம் குழந்தைகளின் வயதைப் பொருத்தும் கண்ணோட்டம் அளிக்கிறோம்)

அதனால், என் கண்ணோட்டம் வேறாக இருக்கலாம்.

//அதுக்கு முன்னரே புரிய வைத்தால் தடுமாற மாட்டார்களே?//

எததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்.இந்த உலகத்தில் பிரச்சனைகளுக்காப் பஞ்சம்?. எல்லாவற்றையும் முன்னமே சொல்லிவிட முடியுமா?

இந்தப் ஆண்/பெண் பேதம் பற்றி மட்டும் முழுவதுமாக சொல்லித் தெளியலாம் என்று நினைத்தால், பிள்ளை எதிர் நோக்கும் மற்ற எல்லாவற்றையும் இதே முறையில் தெளியவைத்துக் கொண்டேதானே இருக்க வேண்டும். இதற்கு மட்டும் தான், நான் புரியவைப்பேன், மற்றவை என்னால் முடியாது, என்று நாம் ஒதுங்க முடியுமா?

எல்லாவற்றையும் முன்னமே, இது இப்படி, நீ இப்படி இருந்து கொள் எனறால், வளரும் பிள்ளை தானாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா?

உலகத்தில் எல்லாம் pre-defined, அம்மா/அப்பா எழுதிய வழிகளில் சென்றால் வாழ்க்கை இனிமை என்பது சரியா?

ஒரு அளவிற்கு பொதுவாக அட்வைஸ் செய்துவிட்டு, அதிகமாக முன்னமே கொட்டிக் கவிழ்க்காமல் (ஓதாமல் - :P), தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே.

வாழ்க்கையில் பலப்பல, பிரச்சனைகளைப் பிள்ளைகள் சந்திக்காமலே போகலாம். அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்?

ஸ்ஸ்ஸ்ஸ்...பதிவு பெருசாயுடுச்சு :))

----------------------------------------------------------------------------------------------

ம்ம்ம்...பதிவை இன்னும் பெருசாக்கப்போகிறேன் ஒரு கதை சேர்த்து. :)).

1. //எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் //

2. //சில விடயங்களை சொல்ல வேண்டிய வயதையும் நாமும் தீர்மானித்து விடுகிறோம் தானே?... அதனால் வந்ததாக இருக்கலாம்.. //

ம்ம்ம்...ஆமாம். தற்போது உள்ள சூழ்நிலையில் சில விடயங்கள் 3,4 வருடங்கள் முன்னதாகவே அறிமுகமாகின்றன.

அங்கே தான்

// புதுகைத் தென்றல் said... எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும்//என்பது வருகிறது.

அந்த விடயத்தின் பார்வை, அந்தந்த வயதைப் பொருத்ததே. இதற்கு ஒரு கதை உண்டு, இந்தப் பதிவிலேயே சற்று நேரத்தில் சேர்க்கிறேன்.//

அதற்கான கதையே இது.

5-ஆம் வகுப்புப் படிக்கும் 10 /11 வயதுப் பெண்ணிற்கும் தாய்க்கும் நடக்கும் உரையாடல்:

பள்ளியில் இருந்து வரும் பெண்: அம்மா! செக்ஸ் என்றால் என்ன? What is Sex?
அம்மா: (முகம் பேயறைகிறது, தூக்கிவாரிப் போடுகிறது)...ம்ம்ம்ம்ம்...என்ன?

பெண்: செக்ஸ்-னா என்னமா?
அப்பா: ஏய், என்னடி கேக்குறா இவ?
அம்மா: இருங்க, உங்களுக்கு ஒன்னும் தெரியாது.நான் பேசுறேன்.

பெண்ணிடம் , அம்மா: அது வந்து...ம்ம்ம்....நீ ரூமுக்கு வா.சொல்றேன்

மிகவும் ஜாக்கிரதையாக 10 வயது பெண்ணிற்கு என்ன தெரியவேண்டுமோ புரியுமோ அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி , மிகவும் யோசித்து, சொல்கிறார், அளவாக.

20 நிமிடத்தில் ரூமை விட்டு பெண் வெளியே வருகிறாள்

அப்பா: என்ன ஆச்சு? புருஞ்சுதா?
பெண்: இல்லைப்பா. புரியலை. :(

ம்ம்ம்...அப்பா தன் வார்த்தை வட்டத்துக்குள், பெண்ணுக்குப் புரிய வைக்கிறார். இன்னும் 10 நிமிடம்

பெண்:ஆனா, அப்பா, நீயும் அம்மாவும் சொல்லும் இத்தனை விடயங்களையும் எப்படி, இத்துணூண்டு இடத்தில் எழுதுவது?

அப்பா: என்ன கேக்குற புரியல?

பெண்:பள்ளிக்கூடத்தில், ஒரு application form கொடுத்திருக்கிறார்கள். அதில் Name :

Age:

Sex: என்று கேட்கிறார்கள். இவ்வளவு சின்ன இடத்தில், நீங்களும் அம்மாவும் சொன்ன இத்தனை விடயங்களை எப்படி எழுதுவது? :((((

22 Comments:

Thamiz Priyan said...

சில விடயங்களை சொல்ல வேண்டிய வயதையும் நாமும் தீர்மானித்து விடுகிறோம் தானே?... அதனால் வந்ததாக இருக்கலாம்.. மேலும் மீடியாக்களின் அதீத வளர்ச்சியும் தேவைக்கு அதிகமான அறிவையும் தந்து விடுவது போல் இருக்கிறது.

pudugaithendral said...

ஒரு அளவிற்கு பொதுவாக அட்வைஸ் செய்துவிட்டு, அதிகமாக முன்னமே ஓதாமல், தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே.//

நானும் இதைத் தானே சொல்கிறேன். எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை தெரியாதவர்கள் தான் அதிகமாக ஓதுவார்கள்.

தாங்க நாம் இருக்கிறோம் என்பதை பிள்ளைக்கு புரிய வைப்பது தான் கடினமான வேலை. அதைச் செய்தால் போதும். நாம் சொல்வதை பிள்ளைகள் புரிந்துக் கொள்வார்கள்.

pudugaithendral said...

எததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்//

நல்ல கேள்வி. தடுமாறுவதற்கு முன்னே எது சொல்ல வேண்டுமே அதைச் சொல்லலாம்.

காதல் இனிமையானது, புனிதமானது. படிக்கும் வயதில் காதல் பறவையின் காலில் கட்டப்பட்ட பாரம் போல். சுமை அதிகமாகும். பாரத்தினால் பறவைக்கு பறக்க இயலாமல் போகும்.

இப்போது படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் புரிந்து கொள்வார்கள்.

pudugaithendral said...

வளரும் பிள்ளை தானாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா?//

பக்கத்து கடையில் கொத்துமல்லி வாங்கபோய் அங்கே கிடைக்காவிட்டால், கொஞ்சம் தூரம் இருக்கும் கடையில் போய் வாங்கி வருவது சுய சிந்தனை.

ஏனோ தெரியவில்லை. பிள்ளைகளுக்கு முறையாக சொல்ல வேண்டும் என்று நான் சொல்வதை யாரும் சரியாக புரிந்துக்கொள்ள மாட்டார்கள் போலும்.

இன்று ஒவ்வொரு ஆண்மகனையும் கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் தங்களின் மன வேதனையை.

NewBee said...

வாங்க தமிழ் பிரியன்,

நலமா? :)

//சில விடயங்களை சொல்ல வேண்டிய வயதையும் நாமும் தீர்மானித்து விடுகிறோம் தானே?... அதனால் வந்ததாக இருக்கலாம்.. //

ம்ம்ம்...ஆமாம். தற்போது உள்ள சூழ்நிலையில் சில விடயங்கள் 3,4 வருடங்கள் முன்னதாகவே அறிமுகமாகின்றன. அங்கே தான்

// புதுகைத் தென்றல் said...

எந்த வயதில் என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு வரையரை இருக்கிறது. அந்த அளவு மட்டும் சொல்ல வேண்டும்//

என்பது வருகிறது. அந்த விடயத்தின் பார்வை, அந்தந்த வயதைப் பொருத்ததே. இதற்கு ஒரு கதை உண்டு, இந்தப் பதிவிலேயே சற்று நேரத்தில் சேர்க்கிறேன்.

//மேலும் மீடியாக்களின் அதீத வளர்ச்சியும் தேவைக்கு அதிகமான அறிவையும் தந்து விடுவது போல் இருக்கிறது.
//

இருக்கலாம். அது பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் தானே, தமிழ் பிரியன் இருக்கிறது. தொலைக்காட்சி பார்க்கும் நேரம், பார்க்க வேண்டிய வலைத்தளங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் யார் தீர்மானிக்கிறார்கள்? பெற்றோர்தானே.

இந்த காலத்தில்(லும்) பெற்றோருக்குப் பொறுப்பு அதிகம் தான்.பெற்றோர் இதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி.

NewBee said...

// புதுகைத் தென்றல் said... //

வாங்க புதுகை தென்றல்,

நலமா? :)

//அதிகமாக முன்னமே ஓதாமல்,//

என்று நான் எழுதியது, இரண்டாம் முறை படிக்கும் போது, எனக்கே ஒரு மாதிரி இருந்தது. சொல்லவந்த கருத்தை முழுவதுமாக முன்னிறுத்தாமல், கவனத்தைத் திருப்பிவிட்டது.சிறிது மாற்ற முயற்சித்து இருக்கிறேன், பதிவில் :)))

//தாங்க நாம் இருக்கிறோம் என்பதை பிள்ளைக்கு புரிய வைப்பது தான் கடினமான வேலை.//

முற்றிலும் உண்மை. மிகக் கடினமான் வேலை. But its a process.இல்லையா? :))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி புதுகை தென்றல்.

NewBee said...

// புதுகைத் தென்றல் said...
எததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்//

நல்ல கேள்வி. தடுமாறுவதற்கு முன்னே எது சொல்ல வேண்டுமே அதைச் சொல்லலாம்.

காதல் இனிமையானது, புனிதமானது.......
//

உண்மை. வயதுக்கேற்று பிள்ளைகள் எதிர்கொள்ளும் உலகம் மாறும்.அப்பொழுது
//எது சொல்ல வேண்டுமே அதைச் சொல்லலாம்.//

சரியே. :))

ராமலக்ஷ்மி said...

நன்றி ந்யூ பி. இதே இதே இதேதான் நானும் கூற நினைத்தது. பிள்ளைகள் வளருமிடமும் சூழலும் மாறுபடுதலும் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

//Basically, explaining things depends on the kids personality and the parents.That much info. is enough.//

Correct.

//எததெற்கு முன்னரே, எதை, எதை என்று சொல்வீர்கள்.இந்த உலகத்தில் பிரச்சனைகளுக்காப் பஞ்சம்?. எல்லாவற்றையும் முன்னமே சொல்லிவிட முடியுமா?//

நல்ல கேள்வி.

//எல்லாவற்றையும் முன்னமே, இது இப்படி, நீ இப்படி இருந்து கொள் எனறால், வளரும் பிள்ளை தானாய் உணரும், சிந்திக்கும் சுயத்தை இழந்துவிடமாட்டானா/ளா?//

குழந்தையாய் இருக்கும் வரை ஸ்பூன் ஃபீட் பண்ணலாம். "வளரும்" பிள்ளை என வந்து விட்டாலே தானாக சாப்பிடத் தெரியத்தானே வேண்டும். சரியான டேபிள் மேனர்ஸுடன் சிந்தாமல் சாப்பிடுகிறார்களா எனக் கண்காணித்து வந்தாலே போதும். சரியில்லாத சமயங்களில் தலையிட்டுத் திருத்திட முடியும்.

//வாழ்க்கையில் பல பல பிரச்சனைகளைப் பிள்ளைகள் சந்திக்காமலே போகலாம். அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்?//

அதுதான் என் கருத்தும்.

//தடுமாற நேர்கையில் தாங்கி நிறுத்த தயார் நிலையில் எப்போதும் நாம் இருக்கலாமே.//


எனது வரிகளையே அழுத்தமாகக் கூறியிருக்கும் புரிதலுக்கு நன்றி ந்யூ பி.

ராமலக்ஷ்மி said...

புதுகைத் தென்றல் said...
//தாங்க நாம் இருக்கிறோம் என்பதை பிள்ளைக்கு புரிய வைப்பது தான் கடினமான வேலை. அதைச் செய்தால் போதும். நாம் சொல்வதை பிள்ளைகள் புரிந்துக் கொள்வார்கள்.//

அப்பாடா புயலா வந்த தென்றல், தென்றலா நாங்க சொன்னதை புரிஞ்சுக்கிட்டீங்க:))! கடினமா இருந்தாலும் அதைச் செய்வதைவிட பெற்றோருக்கு வேறென்ன தலையாய வேலை. செய்வோம்ங்க:)!

NewBee said...

//இன்று ஒவ்வொரு ஆண்மகனையும் கேளுங்கள், அவர்கள் சொல்வார்கள் தங்களின் மன வேதனையை.
//

சரியே. சூழ்நிலைகளும், எதிர்கொள்ளல்களும் தான் பிரச்சனையின் Seriousness-ஐத் தீர்மானிப்பவை. அதற்கு ஏற்ற மாதிரி
// பிள்ளைகளுக்கு முறையாக சொல்லபவையின்// seriousness-ம் இருக்கும் தான்.

pudugaithendral said...

But its a process.இல்லையா? :))


Surely its a big process

pudugaithendral said...

குழந்தையாய் இருக்கும் வரை ஸ்பூன் ஃபீட் பண்ணலாம். "வளரும்" பிள்ளை என வந்து விட்டாலே தானாக சாப்பிடத் தெரியத்தானே வேண்டும். சரியான டேபிள் மேனர்ஸுடன் சிந்தாமல் சாப்பிடுகிறார்களா எனக் கண்காணித்து வந்தாலே போதும். சரியில்லாத சமயங்களில் தலையிட்டுத் திருத்திட முடியும்.//

அப்பாடி இப்பத்தான் நான் சொல்வதை நீங்களும் சரியாக புரிந்துகொண்டுள்ளீர்கள் புரிதலுக்கு
நன்றி ராமலட்சுமி.

//கண்காணித்து வந்தாலே போதும்//

இதை இதைத் தான் நான் எதிர் பார்த்தேன். அத்தகைய ஒரு கண்காணித்தல் இல்லாத்தால்தான் என் பதிவில் அந்தப்பையன் தவறு செய்தது என்று நான் சொல்வது தவறல்லவே.

NewBee said...

வாங்க ராமலக்ஷ்மி,

நலமா? :)

//கடினமா இருந்தாலும் அதைச் செய்வதைவிட பெற்றோருக்கு வேறென்ன தலையாய வேலை. செய்வோம்ங்க:)!
//

உண்மை! உண்மை! உண்மை! சில பலவற்றை நாம் இதற்காக இழக்கத்தான் வேண்டும். ஆனால், வேறு வழியில்லை. என் அப்பா,அம்மா எனக்குச் செய்ததை நான் என் பிள்ளைக்குச் செய்யத்தான் வேண்டுகிறேன். :)))

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சிங்க.

பி.கு.:இன்னும் இரண்டு நாள்களில் கிளம்புகிறேன்.அதுவரை, இங்கேயும்(வலை) சுற்றிக் கொண்டிருப்பேன் :)

pudugaithendral said...

அப்பாடா புயலா வந்த தென்றல்//

என்றும் தென்றல்தான்.

, தென்றலா நாங்க சொன்னதை புரிஞ்சுக்கிட்டீங்க:))!//
நான் சொல்ல விழைந்ததை நீங்களும் புரிந்து கொண்டீர்கள்//

கடினமா இருந்தாலும் அதைச் செய்வதைவிட பெற்றோருக்கு வேறென்ன தலையாய வேலை. செய்வோம்ங்க:)!

இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்தால் பிள்ளைகள் இனிதான இளர்வளர்நிலையைக் கடப்பார்கள் என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை.

அதற்காகத்தான் நான் அந்த பதிவையிட்டதும் கூட.

நன்றி புதுவண்டு, நன்றி ராமலட்சும்

ராமலக்ஷ்மி said...

சுபம்:)!

NewBee said...

தமிழ் பிரியன், புதுகை தென்றல், ராமலக்ஷ்மி ஒரு கதை சேர்த்துருக்கிறேன். :)))

சுபம் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

புதுகைத்தென்றல் பதிவுல மாற்றுக்கருத்து எனக்கு ஏதுமில்லை.. உண்மையில் எல்லா அம்மாக்களும் நம்மைப்போல புதுகைத்தென்றலைப்போல குழந்தைகளிடம் பேசுவதில்லை என்பதால் நிகழ்ந்திருந்த தவறைத்தான் எழுதி இருந்தார்கள். ஆனால்
பேசினாலும் சில சமயம் அவங்களோட பியர் டென்சன் காரணமா நடக்கும் விசயங்களுக்கு எப்படி ரியாக்ஷன் செய்வது என்பது தான் என் குழப்பம்..இங்க புது வண்டு சொன்ன இரண்டாம் யோசனைதான்.. நான் இப்போது நடைமுறையில் பயன்படுத்துகிறேன்.

ராமலக்ஷ்மி said...

//அதற்கு முன் ஏன் குழப்பவேண்டும்?//

அதற்கான பதில்தான் உங்க பிற்சேர்க்கையாக வந்திருக்கும் கதை. Agmark New Bee Touch:)!

சரி சரி மறுபடி இன்னொரு சுபம் போட்டிடலாம்:))!

சுபம்:)))!

Thamiz Priyan said...

அக்கா பிற்சேர்க்கை கதை அருமை!
அதே நிலை தான்... தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிறுவர்கள் விரும்புகின்றார்கள்... நாம் மறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்... அதனால் எழும் தலைமுறை வேறுபாடு தான் அடுத்தடுத்த கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது... :)

கயல்விழி said...

என்னென்னவோ எழுதி இருக்கீங்க, வியப்புடன் படித்தேன். கருத்து எழுத என்னிடம் நாலெட்ஜ் இல்லை புது தேனி :)

pudugaithendral said...

கதை நல்லா இருந்தது புது வண்டு.

அந்தத் தாய் போல் பதட்டப்படாமல்
சூழ்நிலையை அறிய முற்பட்டால் போதும்.

Thamiz Priyan said...

///கயல்விழி said...

என்னென்னவோ எழுதி இருக்கீங்க, வியப்புடன் படித்தேன். கருத்து எழுத என்னிடம் நாலெட்ஜ் இல்லை புது தேனி :) ///
ஏனுங்க அம்மணி, உங்களுக்கே இது நல்லா இருக்கா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

blogger templates 3 columns | Make Money Online