குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Thursday, August 14, 2008

PIT-க்குப் போகும் குட்டி ஆமை.. ...

PIT மெகாப் போட்டிக்கு....... - இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.


ஆமை வருது!
ஆமை வருது!
அசைந்து அசைந்து ஆடி வருது!

குட்டி இலையைத் தின்னும் ஆமை!
குட்டிக்கரணம் போடும் ஆமை!

விட்டுவிட்டு ஓடும் ஆமை!
(விடாமல்)
பிட்டு-க்கு மண் சுமக்கும் ஆமை! :)

8 Comments:

ராஜ நடராஜன் said...

ஆமை ஜெயிச்சுடும் போல இருக்குதே!

ஓவியா said...
This comment has been removed by the author.
ஓவியா said...

நாலுஆமைகள் இருக்கிறார்கள்... இதில யார் பிட்டுக்கு போறார்? :)(முதல்ல 3 ஆமை என்று எழுதிட்டேன்.. அதுதான் நீக்கி விட்டேன்)

தமிழ் பிரியன் said...

நல்லா இருக்கு ஆமைகள்.. :)

ராமலக்ஷ்மி said...

அருமை. விடுமுறையில் இருக்கிறீர்களே எங்கே படம் என கேட்கலாமோ கூடாதோ என நினைத்தேன். அசத்தலா வந்துட்டீங்க.

//பிட்டு-க்கு மண் சுமக்கும் ஆமை!//

பிட்டுக்கு மண் சுமந்து வந்து கொண்டிருந்த முயல்களெல்லாம் களைப்பில் ஆங்காங்கே மரத்தடியில் ஓய்வெடுக்க ஆமை சரியான நேரத்தில் போய் சேர்ந்து பரிசைத் தட்டிக் கொண்டதுவாம்:))!

//இந்த உரலைக் கிளிக்கிப் பெரிதாகப் பாருங்கள்.//

ஏன் கிளிக்கிடணும். நந்து CVR பதிவில் சொன்ன வழியைப் பின் பற்றலாமே. படத்துக்கான html-லில் s/400 என இருப்பதை s/800 என மாற்றி விடுங்கள். அவ்வளவுதான். கிளிக்கிடத் தேவையின்றி படம் பெரிதாகத் தெரியும்.

வாழ்த்துக்கள்!

cheena (சீனா) said...

ஆகா ஆகா - ஆமை படமும் அருமை பாடலும் அருமை - நல்வாழ்த்துகள் புது வாண்டு - வண்டு

வல்லிசிம்ஹன் said...

பீ, தெளிவா படம் வந்திருக்கு.
வெற்றிக்கு வாழ்த்துகள்.

வண்ணச்சேர்க்கை வெகு அழகு.

@ராமலக்ஷ்மி டிப்ஸுக்கு நன்றிம்மா. நானும் அடுத்த தடவை அதுபோலச் செய்யப் பார்க்கிறேன்.

4tamilmedia Team said...

உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். மேலும் உங்கள் வலைப்பூ இவ்வாரம் எங்கள் இணையத்தளத்தில் வாரமொருவலைப்பூ பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
நன்றி

blogger templates 3 columns | Make Money Online