எல்லாருக்கும் வணக்கம்! :)
வருகை தந்ததுக்கு மிக்க மகிழ்ச்சி.
இது என்னுடைய சிறிய முதல் முயற்சி. என்னுடைய 4 1/2 வயது மகனுக்காக, சொல்ல நினைத்துத் துவங்கியது, இப்பொழுது உங்கள் முன்னால்.
அகலப்பட்டை 512 kbps - BroadBand 512 kbps :
அகலப்பட்டை 150 kbps - BroadBand 150 kbps:
இரண்டு வாரத்திற்கு ஒரு கதை என்று, இப்பொழுது நீங்கள் பார்க்கும் இந்த வடிவிலேயே கதை சொல்லப்படும்.
தமிழில் கதை இருக்க வேண்டும், குழந்தைகள் தமிழில் 'டிஜிடல் ஸ்டோரி' கேட்க வேண்டும் என்பதன் முயற்சியே இது.
1-லிருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான, கதைக்கரு சொல்லப்படும். ஆர்வமுள்ள, வண்டு-சிண்டுவைப் பிடித்த மற்ற குழந்தைகளும், குழந்தயுள்ளம் கொண்ட எல்லாப் பெரியவர்களும், வந்து கேட்டால், மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்.
தங்களின், ஊக்குவிப்பை, பின்னூட்டமாய் இட்டுச் செல்ல வேண்டுகிறேன்.
நிறை, குறை, பிடித்தவை, மிகவும் பிடித்தவை, சற்றுக் குறைவாய்ப் பிடித்தவை :) மற்றும் உங்கள் எண்ணங்கள் என்னவோ அதையும், இந்தப் படக்கதை கேட்ட உங்கள் குழந்தைகளின் கேள்விகள் என்னவோ அதையும் எனக்குத் தெரிவியுங்கள். :).
குழந்தைகளும் நீங்களும் எப்பொழுது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து இந்த வலைப்பூவில் கதை கேட்கலாம். :-)
நன்றி!
-இப்படிக்கு,
புதுவண்டு.
பி.கு.: என் மின்னஞ்சல் : pudhuVandu@gmail.com.
எல்லாக் கதைகளையும், இந்த வலைப்பூவின் வலதுபுறத்தில் உள்ள உரல்களின் மூலம் பார்க்கலாம்.
குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'
Sunday, July 20, 2008
வாங்க! வாங்க! வண்டு - சிண்டு ட்ரெய்லர் பார்க்க வாங்க :)
at 23:27 47 comments
Labels: chindu, NewBee, vandu, கதை, சிண்டு, தமிழ்க் கதைகள், படக்கதை, வண்டு
Monday, April 7, 2008
நேற்று பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா
இப்படியே இருந்து விட்ட பச்சை மைதானம்...
அப்படியே இருக்கவில்லை நேற்று மட்டும்...
தினம் தினம் கடந்து போன ஒற்றை மரங்கள்...
குடம் குடம் என குடித்துவிட்டன குங்குமப்பூவை...
பொழுதன்றும் ஏறிஇறங்கிய தோட்டப்படிகட்டு...
பொசுக்கென்று போர்த்தியது பஞ்சுப் போர்வை...
நாணமாய் சிவந்து விட்டது நேற்று மட்டும்...
நேற்றுப் பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா...
நேற்று மட்டும் பதிந்திருந்த என் காலடித்தடம்...
எல்லாமே மாறிப்போனது நேற்று மட்டும்...
ஆமாமாம் மாறாதது மாற்றம் தானே...
ஒலிக்கும்... ...
at 11:19 4 comments
Labels: NewBee, photo kavithai, snow, படக் கவிதை, பனி, புதுவண்டு, வண்டு
Tuesday, March 25, 2008
வாழ்க்கைத் தண்டவாளத்தின் வானவில் வரைபடங்கள்
| **குருகுலத்தின் பெயர் - வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளியிருந்த convent ‘Holy Trinity’. |
| **படித்தது - ஒண்ணாப்பில் இருந்து ஐந்தாப்பு. |
| **பிடித்தது - Sylvester master வாசித்த guitar; Srinivas master நடனக்குழுவில்,‘கோபியர் கொஞ்சும் ரமண’-னாய், தேறிய நாள்;ஒவ்வொரு சனிக்கிழமையும், தொடரும் ஞாயிரும். |
| **பசுமரத்தாணியாய்ப் பதிந்த பாடங்கள்- அப்படி எதுவும் இருந்ததாய், என் ‘சரித்திர, புவியியல், அறிவியல், கணித’-த்தை, ஞாபகமாய் மறந்த ஞாபகத்தில் சத்தியமாய், எதுவும் இல்லை. |
இப்படி, சிங்காரச்சென்னையின், புஷ்பக விமானத்தில் (‘ரிக்ஷா’), RNV-யாய் வலம் வந்த எனக்கு ... ...ஆறாம் வகுப்பில் தான், நான் வசித்த ஆசியாக்கண்டமே, அதிராமல் அதிர்ந்தது. தமிழாசிரியையாய், என் தாய் பணியாற்றிய குருகுலத்தில் எனக்கு இடம் கிடைத்தது.
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.’
எவ்வளவு முயன்றும், இந்தக்குறளை, என் தாய்த்தமிழாசிரியை, என் உடன்பிறப்பு, சக மாணவர்கள், எனக்குப் பாடம் உரைத்த ஆசிரியர்கள் மற்றும் 7-ஆம், 8-ஆம், 9-ஆம்.. .. ..12-ஆம் வகுப்பு அனைத்திற்கும் பாடமளித்த ஆசிரியர்கள்; இவர்கள் யார் மனத்திலிருந்தும், என்னால் அழிக்க முடியவில்லை.
‘விளைவு?’
‘போர், போர், உக்கிரமான போர்
ஒரு நாளல்ல, இரு நாளல்ல
மாபெரும் மகதத்தின் மானம் பறிபோகும் விதத்தில்
சின்னஞ்சிறு கலிங்கம், 120 நாட்கள், போர் நடத்திற்று’
-நன்றி! பள்ளியின் ‘அசோகர்’ நாடகத்தின் முன்னுரை எழுதிய என் தாய்க்கு - 1988
அசோகரின் போரைவிட, இந்த வண்டின் போர்க்களம், மிகக்கொடூரமாய் இருந்தது, 10 ½ வயதில். :(
‘படிக்க வேண்டும், படிக்க வேண்டும், உக்கிரமாய்ப்படிக்க வேண்டும்
ஒரு நாளல்ல; இரு நாளல்ல;
மாபெரும் படிப்புக்குடும்பத்தின் மானம் காக்கும் வகையில்
சின்னஞ்சிறு வண்டு 7 வருடங்கள், போர் நடத்திற்று.’
-நன்றி! பள்ளியின் ‘அசோகர்’ நாடகத்தின் முன்னுரை எழுதிய என் தாய்க்கு - 1988
‘விளைவு?’
5 வருடங்களுக்குப்பின் SSLC பொதுத்தேர்வில், பள்ளியின் top scorer.. .. ..வண்டு.
என் வாழ்க்கைத் தண்டவாளத்தில், வானவில்லில் வரைந்த வரைபடங்கள் சில உண்டென்றால், அதில் இதுவும் ஒன்று;
என் வாழ்க்கைத் தண்டவாளத்தில், வெற்றியூர் செல்ல வாய்ப்புகள் சில வந்ததென்றால், அதற்குக் காரணம், நான் கற்ற முதல் பாடம் - ‘முயற்சி திருவினை ஆக்கும்’
ஒலிக்கும்... ...
at 10:43 0 comments
Labels: bee, NewBee, school days, SSLC, top scorer, பள்ளி, புதுவண்டு, வண்டு, வாழ்க்கைத்தண்டவாளம்
Monday, March 24, 2008
பஞ்சுமிட்டாய் வண்டு, RNV....:)
ஒரு அன்னப்பறவைக்கும் ப்ஃனிக்ஸ் பறவைக்கும் பிறந்த வண்டு. இயற்கை - உலகம்; வானம் - வீடு; பிரித்தறிதலும், எழுந்தெழுதலும் - கற்ற பாடம்; வானவில் - வாழ்க்கை;
இது தொடக்கம்;
பின் நடந்தது என்ன?
Its a fairy tale. A dream comes true. மாட மாளிகையும் கூடகோபுரமும் குடி இருந்த, ஒரு ‘கச்சாலீஸ்வரர்’ வசிப்பின், இராஜ வாரிசு.
“மகத வினைஞரும் மராட்டக்கம்மரும்
அவந்திக்கொல்லரும் யவனத்தச்சரும்
கொண்டினிதியற்றிய .. .. “
புஷ்பக விமானமே, ஆசைப்பட்ட, சென்னை ‘ரிக்ஷா’-வின், இளைய பயணி.
மகாராணியார்க்கும், உடன் பிறப்பிற்கும் மரியாதை தந்து, பக்க இருக்கையில், சென்னையை ஊர்வலம் வந்த , பஞ்சுமிட்டாய் வண்டு. :) ‘ரொம்ப நல்ல வண்டு’. (If u would like to follow bee’s journey, always remember what is ‘RNV’ - ரொம்ப நல்ல வண்டு).
இது கனவு.
பின் நடந்தது என்ன?
Well, you need to go for education, right?.
“We know accurately only when we know little,
With knowledge doubt increases. ”

Then you feel like, ‘you know nothing’, which is, were exactly you started. Then why bother to learn. I tried to sell this idea to the king,(ofcourse, my dad), and found that an 3 year old can’t be an good sales executive.
அன்று தொடங்கியது வண்டின் குருகுலம்.
ஒலிக்கும்... ...
at 14:55 0 comments
Labels: childhood days, fairy tale, NewBee, இராஜ வாழ்க்கை, பஞ்சுமிட்டாய் வண்டு, புதுவண்டு
ஏன் இந்தப்பதிவு?
வருகைக்கு நன்றி!
உங்கள் வருகையால், நீங்கள் பெற்றது நட்பு; கொடுத்தது 'என் புன்னகை'.......
நான் பிறந்த காரணத்தை, நானே அறியும் முன், எனை அறிந்த, என் தாய் தந்தை எனக்கெழுதிய, என் முதல் பதிவு :
"காலத்திற்கேற்ற ஒரு கல்வியைக் கற்க சிந்தித்தேன். சிந்தனையில் பூத்தது கணினி. காரணம் என்னை இவ்வுலகிற்குத் தந்த தந்தையின் ஆற்றல் என் சிந்தனையில் உதித்ததால். மூச்சு விட நேரமின்றி முடிந்ததெல்லாம் செய்து பார்க்கும் முனைப்பான ஆற்றலை நானும் என் உடன் பறக்கும் வண்டும் சிந்தித்து சிந்தித்துப் பேசியதுண்டு. அதனால் வந்தது காலத்தின் கணினிக்கலை. அதில் என் கருத்தை விரிக்க மனக்கலை துணிந்தது."

at 14:14 0 comments
Labels: first post, mom n dad, NewBee, புதுவண்டு, பெற்றோர், முதல் பதிவு
Sunday, March 23, 2008
தாய் தந்த அறிமுகம்
நான் புதுவண்டு !
என் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு எனக்கு சிறகுகள் வேண்டும்.;அச்சிறகுகள் பறப்பதற்கு என் சிந்தனை தூண்டு கோலாகும்.
பறக்கும் இந்த வண்டு தமிழ் மொழிக்குள்ளும் தமிழ் உணர்வுக்குள்ளும் சிறகடிக்க வேண்டும். என் சீரிய சிந்தனை வண்டின் ரீங்காரமாய் இங்கு ஒலிக்கும். தமிழ் மலருக்குள் நான் பறப்பேன். இந்தத் தமிழ்ப் பறவையை வாழ்த்துங்களேன்.

Subscribe to:
Posts (Atom)