குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, December 6, 2010

பனியும் பனி சார்ந்த இடங்களும்...

பனியும் பனி சார்ந்த இடங்களும்...

பச்சை மரங்கள் வெண்ணிறமாய்
நடந்த பாதை குளிர்பனியாய்
விரிந்த வானம் கார்புகையாய்
விரையும் ஊர்தி வெகுமெதுவாய்!








காணும் முகங்கள் புகைப்படமாய்
அசையும் கரங்கள் சில்லறையாய்
ஓடும் சிறியார் ஓவியமாய்
பாடும் குயில்கள் பெண்மயிலாய்!







கூடும் கூட்டம் ஆழ்கடலாய்
பள்ளிக் கூடம் இறைவிடமாய்
அலுவல் எல்லாம் உறைபனியாய்
ஈசன் கூடத் தனிமரமாய்!




இயற்கை செய்த வெண்புரட்சி
எதிர்ப்பு இல்லாக் காந்திவழி!
எனக்கும் இந்த வரம் கிடைத்தால்
என் பேனா மாற்றும் என்னுலகை!

என் கனவுகள் எல்லாம் காவியமாய்!
என் நினைவுகள் எல்லாம் ஓவியமாய்!
என் வார்த்தைகள் எல்லாம் வாழ்வியலாய்!
நானே நானே இவ்வுலகாய்!

நான்கு நாளாய் வீட்டிலிருந்தேன்!
நன்றாய் உறக்கம் வந்ததம்மா!
திங்கள் இன்று கண்விழித்தேன்!
அய்யோ! நானும் என் சொல்வேன்!!!

18 Comments:

ராமலக்ஷ்மி said...

ஆகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வண்டின் ரீங்காரம்.. இனிமையாய் வெகு இனிமையாய்.. :)!

Welcome back !

அருமையான கவிதை.

//என் கனவுகள் எல்லாம் காவியமாய்!
என் நினைவுகள் எல்லாம் ஓவியமாய்!
என் வார்த்தைகள் எல்லாம் வாழ்வியலாய்!
நானே நானே இவ்வுலகாய்!//

மிகவும் ரசித்தேன்.

cheena (சீனா) said...

அன்பின் புது வண்டு - புதிய சிந்தனையில் கவிதை - ரீங்காரம் செய்யத் துவங்கிய புது வண்டிற்கு நல்வாழ்த்துகள் . தொடர்க - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

" காணும் முகங்கள் " ஏதோ தலைப்பு போலத் தோன்றுகிறது - இது அடுத்த வரியில் உள்ள புகைப்படமாய் என்னும் சொல்லோடு சேர்ந்து வர வேண்டுமல்லவா ? திருத்தலாமே !

cheena (சீனா) said...

பார்த்த்தைப் படம் பிடிக்கும் கண்கள்
நினைத்ததை நிகழ்வாக்கும் கரங்கள்
கவிதைக்கு காவியத் துணையாகும்
நல்ல கவிதை நாளும் வளரட்டும்
நல்வாழ்த்துகள்

செல்வி ஷங்கர்

Thekkikattan|தெகா said...

எதுகை மோனையா ஒரு சினிமா பாட்டுக்கு மெட்டு போட்டா பாடிரலாம் போல இருக்கு... காட்சியப்படுத்தல்.

//திங்கள் இன்று கண்விழித்தேன்!
அய்யோ! நானும் என் சொல்வேன்!!//

ஏன் திரும்பவும் வேலைக்கு போகணும்னு உங்க லயிப்பை களைக்கிற மாதிரி இருக்கின்னா... அந்த வரிகள் :)

அடிக்கடி எழுதுங்க!

NewBee said...

//ராமலக்ஷ்மி said...

ஆகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வண்டின் ரீங்காரம்.. இனிமையாய் வெகு இனிமையாய்.. :)! //

வாங்க ராமலக்ஷ்மி,

நலமா?

வரவேற்பிற்கும் வாழ்த்திற்கும் பெரும் மகிழ்ச்சி :)

NewBee said...

//cheena (சீனா) said...//

வாங்க சீனா ஸார்,

நலமா? :)

//புதிய சிந்தனையில் கவிதை - ரீங்காரம் செய்யத் துவங்கிய புது வண்டிற்கு நல்வாழ்த்துகள் . தொடர்க - நட்புடன் சீனா//

மிகுந்த மகிழ்ச்சி. தொடரும்ணு நம்புவோமாக....:)

NewBee said...

//
பார்த்த்தைப் படம் பிடிக்கும் கண்கள்
நினைத்ததை நிகழ்வாக்கும் கரங்கள்
கவிதைக்கு காவியத் துணையாகும்
நல்ல கவிதை நாளும் வளரட்டும்
நல்வாழ்த்துகள்

// செல்வி ஷங்கர்//

வாங்க வாங்க செல்வி அம்மா,

நலமா? உங்கள் வாழ்த்துகள், என்றைக்குமே மனதை நிறைக்கும். மிகுந்த மகிழ்ச்சி அம்மா! :)

NewBee said...

//Thekkikattan|தெகா said...

எதுகை மோனையா ஒரு சினிமா பாட்டுக்கு மெட்டு போட்டா பாடிரலாம் போல இருக்கு... காட்சியப்படுத்தல்.//

ஹி..ஹி..:D

// ஏன் திரும்பவும் வேலைக்கு போகணும்னு உங்க லயிப்பை களைக்கிற மாதிரி இருக்கின்னா... அந்த வரிகள் :)//

இதுக்கும் ஹி..ஹி..'கொஞ்சமா'- நிறைய சோம்பல் தான், எல்லாம் கனவாப் போச்சேன்னும் தான்.

// அடிக்கடி எழுதுங்க!//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தெகா :)

ILA (a) இளா said...

//ஓடும் சிறியார் ஓவியமாய்//
அழகு.. :)
இந்தக் குளிரிலும் ஒரு கவிதையா? கொடுமை..

துளசி கோபால் said...

ரொம்ப நாளா ஆளையே காணோமே புதுவண்டே?

அம்மா வீட்டில்தான் நல்ல தூக்கம் என்றது உண்மைதான்ப்பா:-))))))

duraian said...

பள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த ’திங்கள் காலையின் வரவை’
எனக்குள் மீண்டும் மலர வைத்து விட்டீர்கள் ,,:)

NewBee said...

//ILA(@)இளா said...

//ஓடும் சிறியார் ஓவியமாய்//
அழகு.. :)
இந்தக் குளிரிலும் ஒரு கவிதையா? கொடுமை..//

:) என்ன பண்றது இளா, ரொம்பக் குளிருதேன்னு, சாயங்காலம் , பஜ்ஜி போட்டேன், ஜிவ்வுனு கவிதை, வந்துடுச்சு :)

வருகைக்கு நன்றி இளா.

NewBee said...

//துளசி கோபால் said...//

வாங்க டீச்சர்,

நலமா? :)

ரொம்ப நாளா ஆளையே காணோமே புதுவண்டே?

ஆமாம், டீச்சர், ரொம்ப நாளாத் தூங்கீட்டேன்.

// அம்மா வீட்டில்தான் நல்ல தூக்கம் என்றது உண்மைதான்ப்பா:-))))))//

உண்மை டீச்சர். நல்ல தூக்கம் + செம சாப்பாடும் :D.

வருகைக்கு மகிழ்ச்சி டீச்சர் :)

NewBee said...

//துரை. ந.உ 9443337783 said...

பள்ளிப் பருவத்தில் நான் உணர்ந்த ’திங்கள் காலையின் வரவை’
எனக்குள் மீண்டும் மலர வைத்து விட்டீர்கள் ,,:)//

ஹா..ஹா.. பள்ளி நாட்களில் மட்டுமல்ல இன்றும் எனக்குத் 'திங்கள் காலை' இப்படித்தான்.

வருகைக்கு மகிழ்ச்சி துரை :).

Ke said...

O_o good

திண்டுக்கல் தனபாலன் said...

பழைய நினைவுகள் ஞாபகம் வந்தன...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_5.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

NewBee said...

//திண்டுக்கல் தனபாலன் //

Thank you for the introduction :).

I apologise, for the late reply and not having an tamil font. I have not been blogging for quite a while and I logged in to my account, just today.

Kind of you for reading my posts and I am hoping to return soon to blogging.

-Warm regards,
Pudhu Vandu

blogger templates 3 columns | Make Money Online