**குருகுலத்தின் பெயர் - வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளியிருந்த convent ‘Holy Trinity’. |
**படித்தது - ஒண்ணாப்பில் இருந்து ஐந்தாப்பு. |
**பிடித்தது - Sylvester master வாசித்த guitar; Srinivas master நடனக்குழுவில்,‘கோபியர் கொஞ்சும் ரமண’-னாய், தேறிய நாள்;ஒவ்வொரு சனிக்கிழமையும், தொடரும் ஞாயிரும். |
**பசுமரத்தாணியாய்ப் பதிந்த பாடங்கள்- அப்படி எதுவும் இருந்ததாய், என் ‘சரித்திர, புவியியல், அறிவியல், கணித’-த்தை, ஞாபகமாய் மறந்த ஞாபகத்தில் சத்தியமாய், எதுவும் இல்லை. |
இப்படி, சிங்காரச்சென்னையின், புஷ்பக விமானத்தில் (‘ரிக்ஷா’), RNV-யாய் வலம் வந்த எனக்கு ... ...ஆறாம் வகுப்பில் தான், நான் வசித்த ஆசியாக்கண்டமே, அதிராமல் அதிர்ந்தது. தமிழாசிரியையாய், என் தாய் பணியாற்றிய குருகுலத்தில் எனக்கு இடம் கிடைத்தது.
‘ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்.’
எவ்வளவு முயன்றும், இந்தக்குறளை, என் தாய்த்தமிழாசிரியை, என் உடன்பிறப்பு, சக மாணவர்கள், எனக்குப் பாடம் உரைத்த ஆசிரியர்கள் மற்றும் 7-ஆம், 8-ஆம், 9-ஆம்.. .. ..12-ஆம் வகுப்பு அனைத்திற்கும் பாடமளித்த ஆசிரியர்கள்; இவர்கள் யார் மனத்திலிருந்தும், என்னால் அழிக்க முடியவில்லை.
‘விளைவு?’
‘போர், போர், உக்கிரமான போர்
ஒரு நாளல்ல, இரு நாளல்ல
மாபெரும் மகதத்தின் மானம் பறிபோகும் விதத்தில்
சின்னஞ்சிறு கலிங்கம், 120 நாட்கள், போர் நடத்திற்று’
-நன்றி! பள்ளியின் ‘அசோகர்’ நாடகத்தின் முன்னுரை எழுதிய என் தாய்க்கு - 1988
அசோகரின் போரைவிட, இந்த வண்டின் போர்க்களம், மிகக்கொடூரமாய் இருந்தது, 10 ½ வயதில். :(
‘படிக்க வேண்டும், படிக்க வேண்டும், உக்கிரமாய்ப்படிக்க வேண்டும்
ஒரு நாளல்ல; இரு நாளல்ல;
மாபெரும் படிப்புக்குடும்பத்தின் மானம் காக்கும் வகையில்
சின்னஞ்சிறு வண்டு 7 வருடங்கள், போர் நடத்திற்று.’
-நன்றி! பள்ளியின் ‘அசோகர்’ நாடகத்தின் முன்னுரை எழுதிய என் தாய்க்கு - 1988
‘விளைவு?’
5 வருடங்களுக்குப்பின் SSLC பொதுத்தேர்வில், பள்ளியின் top scorer.. .. ..வண்டு.
என் வாழ்க்கைத் தண்டவாளத்தில், வானவில்லில் வரைந்த வரைபடங்கள் சில உண்டென்றால், அதில் இதுவும் ஒன்று;
என் வாழ்க்கைத் தண்டவாளத்தில், வெற்றியூர் செல்ல வாய்ப்புகள் சில வந்ததென்றால், அதற்குக் காரணம், நான் கற்ற முதல் பாடம் - ‘முயற்சி திருவினை ஆக்கும்’
ஒலிக்கும்... ...
0 Comments:
Post a Comment