என் தாய் தந்தையைப் பற்றிப் பெருமையாய், பேசிய பொழுது (அதாவது, over-ஆய் ice வைத்ததாய், என் உடன்பிறப்பு மின்னஞ்சலிட்டதை, அப்பொழுதே மறந்துவிட்டு), என் கண்ணுக்குள் நின்ற இன்னொரு விஷயம், என் தாய்மொழி.
நான் இப்பொழுது எண்ணி மகிழும் என் இளமைக்காலம்;
என் பெற்றோரோடு, நான் பேசி மகிழும் அந்தப்பொழுதுகள்;
நான் சுற்றித்திரிந்த தெருக்கள்;
என் வாழ்க்கையின் எல்லாக் கனவுகளின் verbal translation;
என் உ.பி. யோடு வெட்டியாய், நான் அடித்த அரட்டை;
எல்லாமே (கொஞ்சமே கொஞ்சம் ஆங்கிலக்கலப்போடு),
தமிழ்! தமிழ்! தமிழ்!
தான். இந்த அறிய கண்டுபிடிப்பிற்கு, எதற்கு ‘நிற்க! சிந்திக்க! பின்னூட்டமிடுக!’ என்கிறீர்களா. வண்டின் profile-ஐ என்றைக்காவது பார்த்த ஞாபகம் இருக்கிறதா?. Location: London, UK.(profile பார்க்கச் செல்பவர்கள், தயவுசெய்து 'Back' button அடித்து இங்கேயே வரவும்).
Yes! Location: London, UK. முழுவதுமாக மாறிப்போன profile; இவ்வலைப்பூவில், கடந்த மூன்று நாட்களாக சுற்றி வந்த வண்டின் இன்றைய நிஜம் --> எங்கு திரும்பினாலும், சுத்தமாகத்தமிழ்க் காற்றே வீசாத, இயற்கை; எந்தக் காகிதம் பிரித்தாலும் சத்தமாகத் தமிழ் பேசாத வாசிப்புகள்;
இது கூடப் புரியாமலா, தாய்த்திருநாட்டில் இருந்து பறந்து வந்தேன் என்று கேட்கிறீர்கள் - புரிகிறது. இந்த, ‘நிற்க! சிந்திக்க!’ எனக்காக இல்லை.
'தமிழ்த் தெரியாத', என் அடுத்த சந்ததிக்காக; அவர்களின் தமிழ் பேசும், தாத்தா பாட்டிக்காக; இந்த வலைப்பூவைத் தமிழில் எழுதி மகிழுந்து, ஒரு நாள் என் பிள்ளையும் இதைப்படிக்கும் என்று, ஒரு சின்ன ஆசையை ஒளித்து வைத்திருக்கும் என் மனதிற்காக.
எனக்காவது, தொலைபேசியில் தமிழர்களோடு தமிழ் பேச முடியும்;
வலைப்பூவில் பாய்ந்து பாய்ந்து பத்திரிக்கை படிக்க முடியும் (நான் படிக்கும் பொழுது பக்கத்தில் இருந்து பார்த்ததில்லையே? - சாமிக்கு ஒரு ரூபாய் முடிந்து வைத்து நன்றி சொல்லுங்கள்);
மின் அஞ்சலில் தமிழர்களோடு தட்டச்ச முடியும்; அவ்வளவு ஏன்? ‘சொந்தமாக ஒரு வலைப்பூ’ எழுதும் அளவுக்குத் தமிழ் எழுதப்படிக்கத் தெரியும்.
ஆனால், இன்னும் தமிழ் படிக்கத் தெரியாத அந்த அடுத்த சந்ததி என்ன செய்யும்.
சுற்றி வளைத்துப்பார்த்தால், இந்த ‘நிற்க! சிந்திக்க!’, என்னைப்போன்ற, தமிழை இன்னும், வீட்டிலேயே, இரண்டாம் பாடமாகப் பிள்ளைகளுக்கு ஆரம்பிக்காத வண்டுகளுக்காகத் தானோ?
அப்படியென்றால், இப்படி வைத்துக்கொள்வோம்.’நிற்க! சிந்திக்க’-வை, என்னைப் போன்றவர்கள் எடுத்துக்கொள்கிறோம்; ‘பின்னூட்டமிடுக’-வை, இந்த விஷயத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
வண்டின் FAQ:
1. வண்டுடன் ‘நி!சி!’-வில் நிற்பவர்கள், என்ன செய்வதாய் உத்தேசம்?. (அட! எங்களுக்கும் சொல்லுங்கப்பா)
2. பெரியவர்கள் அனைவரும் அதாவது இந்தக் கேள்விக்கு, நடைமுறைக்கு ஒத்து வரும்படியான் ஒரு பதிலை, already நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கும் நல்லவர்கள், வல்லவர்கள் அனைவரும், என்ன செய்தீர்கள் என்று தயவு செய்து சொல்லவும்.(அட! இதுக்கு மேலக் குனிய முடியலைங்கோ! Keyboard, table-க்குக் கீழ இருந்து தெரியமாட்டேங்குதுங்கோ!)
நன்றி! வணக்கம்! மீண்டும் சந்திப்போம்.
ஒலிக்கும்... ...
12 Comments:
Dear RNV,
veettil thamizh pesi maghizhvoem mudalil! Thamizhukkundu thazhaikkum sakthi! nam makkal
nijamaai thamizh pesuvar!
Vannap padamum, iniya nadaiyum
eerkkum thamizhum abaaram!
Thodarattum! vaazhthukkal!
-- udanpirappu.
அன்பு நாடிக்கண்ணா,
வருகைக்கு நன்றி! ஊக்கத்திற்கு ஒரு தேன் குடம்.(வண்டிடம் அளவில்லாமல் உண்டு)
1. வீட்டில் தமிழிலேயேப் பேசுவோம்...
மிகச்சரி. முதலில் புரிதல், பின்பு கற்றல்!
தமிழில் ரீங்காரம் செய்யும் புது வண்டே !! - வருக வருக - தமிழ் மணத்தில் இணைந்தாயிற்று - பின் என்ன - கலக்குக - அனைத்துப் பதிவுகளுமே நன்கு ஒலிக்கின்றன. நல் வாழ்த்துகள்.
இடைஇடையே ஆங்கில சொற்களைத் தவிர்க்க முயல்க.
அன்புடன் .... சீனா
---------------------
அன்பு சீனா ஸார்,
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!...ஆங்கிலச் சொற்கள், மண்டையில் இருந்து கொண்டு, அடிக்கடி குடைகின்றன....
போகப் போகத் திருந்திவிடுவேன் என்று நினைக்கிறேன்....:D
பொன் வண்டே ! புது வண்டே !
பறந்து வா என் தோட்டத்திற்கு - தேன் அதிகம் உண்டு அருந்தி மகிழ !
ரீங்காரமாய் ஒலி உன் கருத்துகளை.
புதிய பதிவு கண்டு இசை எழுப்பு!
இயன்றவரை இனிய தமிழில் புதிதாய் எழுதுவோம்...இன்ன பிற மொழிகளில் இருந்து ஆக்கங்களை தமிழுக்கு கொண்டு வருவோம்.
செல்வி அம்மா கூப்பிட்டு நான், வராமலா?
கஞ்சியும் காரத்துவயலும் ரெடி பண்ணுங்க.....
பறந்து வாரேன் :)....
//
ஜீவா (Jeeva Venkataraman) said...
இயன்றவரை இனிய தமிழில் புதிதாய் எழுதுவோம்...இன்ன பிற மொழிகளில் இருந்து ஆக்கங்களை தமிழுக்கு கொண்டு வருவோம்.
//
வருகைக்கு நன்றி ஜீவா! :-)
நிற்க! சிந்திக்க!! இவை இரண்டும் பிசிறில்லாமல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. செயலில் தான் எதுவும் வரமாட்டேன்கிறது.
//நிஜமா நல்லவன் said...
நிற்க! சிந்திக்க!! இவை இரண்டும் பிசிறில்லாமல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. செயலில் தான் எதுவும் வரமாட்டேன்கிறது.
//
யாராவது கண்டிப்பாய் ஒரு வழி வைத்திருப்பார்கள் என்ற நம்பிக்கைதான்... காத்திருப்போம்..
'நி.சி.'-க்கு நன்றி :).
துளித் துளியாய் தட்டித் தட்டி வண்டு தேன் எடுக்க தேன் அடைகளை அப்படியே அள்ளிச் செல்லக் காத்திருக்கும் தமிழ் தேன் 'குடிகாரி'தேன் கூடு நிறையட்டும் அடை அடையாய் அடையட்டும்.தமிழ்த் தேன் பருக வருவோர் எண்ணிக்கை கூடட்டும் .
தமிழின் பெருமை எனக்கும் லண்டனில் 3 ஆண்டுகள் நார்த் ஃபின்ச்லியில் இருந்தபோதுதான் புரிந்தது
உண்மைதாங்க... ஒரு, வாரக்கடைசியில், தமிழ் வலைப்பூ எல்லாம் படித்துவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்த போது, வந்த பயம் தான் இந்த இடுகை.
வாழ்த்திற்கு மிக்க நன்றி! goma. வருகைக்கும்:-)
Post a Comment