நிமிடத்திற்கு நான்கு முறை
என் பேர் சொல்லி அழைத்து,
நேரம் கேட்டதால்...
புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட கடிகாரத்தை
‘இருக்கட்டும் இது!’ என்று ஒளித்து வைத்தேன்.
உனக்காக;
நீ பசியாய் வந்த பொழுது
தண்ணீர்க்குவளையும் உப்புத்தூவியும்
என் பேர் சொல்லி அழைத்து,
வேண்டும் என்றதால்...
புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட இரண்டையும்
‘காணோமே அது!’ என்று ஒளித்து வைத்தேன்.
உனக்காக;
நீ பிரச்சனையோடு வந்த பொழுது
முழுதாய் ஒரு நிமிடம் பார்ப்பாய்
என் பேர் சொல்லி அழைத்து,
என்முகம் என்பதனால்...
புதிதாய் வந்த இழப்பையும் கண்ணீரையும்
‘சரி போகட்டும் அது!’ என்று ஒளித்து வைத்தேன்.
உனக்காக;
நீ (உன்) தாய் தந்தையோடு வந்த பொழுது
பேச்சுவார்த்தை முற்றிய பிறகும்
என் பேர் சொல்லி அழைத்து,
என்னைத் திட்டாமல் விட்டதனால்...
புதிது புதிதாய், உன் பெயர் போட்டு வந்த சண்டைகளையும்
‘சாவி போட்டே இருக்கட்டும்’ என்று ஒளித்து வைத்தேன்.
உனக்காக;
இப்படி ஒளித்துவைத்து ஒளித்துவைத்து
உன்னைக் காதலித்ததால் தான்
அப்படி என்ன செய்துவிட்டாய் ‘எனக்காக?’, என்று
என் பேர் சொல்லி அழைத்து...
புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?
உனக்காக.
ஒலிக்கும்... ...
9 Comments:
///புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?///
:(
A very nice poem with touchy words!
anbudan aruna
//
நிஜமா நல்லவன் said...
///புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?///
:(
//
எனக்கும் அப்படித்தான் இருந்தது
'உனக்காக.' என்றபோது
:-) என்று இருந்தது...
வருகைக்கு நன்றி! 'நிஜமா நல்லவன்' :)
// aruna said...
A very nice poem with touchy words!
anbudan aruna//
வருகைக்கும் அன்பிற்கும் நன்றி! அருணா.
புது வண்டே !
கவிதை எழுத ஆரம்பித்து விட்டாயா ??
இருக்கட்டும் வழக்கம் போல் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது
ம்ம்ம்ம்ம்ம்
நடை அழகு - நல் வாழ்த்துகள்
அன்புடன் சீனா !!
பதிவைப் பார்த்தால் புது வண்டு போலத் தெரியவில்லையே....
வருகைக்கு நன்றி! goma... :-)
இன்னும் வளரனும், நிறையப் படிக்கணும்.. அதுனால, எப்பவுமே புதுசு தானே..
ரீங்காரம் இனிமையாக இருக்கிறது! தொடருங்கள்.
நன்றி! கருப்பன்...:-)
வருகைக்கும் வாழ்த்துக்கும்...
Post a Comment