குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, April 7, 2008

நேற்று பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா

இப்படியே இருந்து விட்ட பச்சை மைதானம்...



அப்படியே இருக்கவில்லை நேற்று மட்டும்...



தினம் தினம் கடந்து போன ஒற்றை மரங்கள்...



குடம் குடம் என குடித்துவிட்டன குங்குமப்பூவை...



பொழுதன்றும் ஏறிஇறங்கிய தோட்டப்படிகட்டு...



பொசுக்கென்று போர்த்தியது பஞ்சுப் போர்வை...


நாட்க்கணக்காய் வளர்த்து வந்த ஆரஞ்சுப் பூ...



நாணமாய் சிவந்து விட்டது நேற்று மட்டும்...



நேற்றுப் பெய்த பனியில் ஒரு 'வெண்' - பா...



நேற்று மட்டும் பதிந்திருந்த என் காலடித்தடம்...


எல்லாமே மாறிப்போனது நேற்று மட்டும்...
ஆமாமாம் மாறாதது மாற்றம் தானே...

ஒலிக்கும்... ...

4 Comments:

cheena (சீனா) said...

புது வண்டே !!!

படங்கள் அருமை
வெண்பா அருமை
பதிவும் அருமை

நல் வாழ்த்துகள்

NewBee said...

சீனா ஸார்,

வாழ்த்துக்கும் இரசிப்பிற்கும் நன்றி...
:-)

goma said...

நான் 23 ஆவது வாசகி .விரைவில் 2300000000.........வாசகர் வாசிக்க வாழ்த்துகிறேன்

NewBee said...

வாங்க goma வாங்க!

இப்பத்தான், பின்னூட்டம் பத்தி ஒரு post போட்டுட்டு வரேன்...

ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... :-)...வருகைக்கு நன்றி! வாழ்த்துக்கு நன்றி!

blogger templates 3 columns | Make Money Online