குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Wednesday, April 30, 2008

ஒரே ஒரு கதை - வ.வா.ச. போட்டிக்கு... ... ...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கதைத் தலைப்பு : ‘ஊடல்’ (அ) ‘விரிசல்’

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காதே.

மலயருக்குக் கோபம்; ஆத்தங்கரைப் பக்கம் நடை.

மங்கலா, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க எதிர்ப்புறம்.

சண்டைக்கு ஒரு அளவில்ல.எல்லாரும் மனுசங்க தானே.மனசு ஒத்துதானே ஆரம்பிச்சுது.இப்ப இல்லேனா எப்படி?

ரெண்டா இருக்குற மனச ஒண்ணாக்கலாம்னு ஆரம்பிச்சசுதுதானே. இப்ப தொட்டது குத்தம்னா எப்படி?. இந்த நூற்றாண்டுலயும் இப்படியா?

அரசமரத்தடியில கூடிக் கூடிப் பேசுனப்ப நல்லாத் தானே இருந்துச்சு. முழு சம்மதம்னு சொல்லிதானே,சிரிச்சு சிரிச்சு பேசுனது.

திருவிழா நேரம்.கோயில் தேர, இரண்டு, பக்கமும் சேர்ந்து நின்னு இழுத்தா கைகள் ஒண்ணாச் சேரத்தானே செய்யும். இப்ப, கண்ணக் கசக்கி கிட்டு ‘ஆ! ஆத்தா வையும்.இது தப்பு’- னா எப்படி.

தொடப்புடாதாம்ல.அது சரி!

ஏன்?

சண்ட முத்திப் போய் இப்ப ஊரே ரெண்டு பட்டுக் கெடக்குனா பாத்துக்குங்க.மலயர் ஒரு பக்கம்.மங்கலா(ர்) ஒரு பக்கம்.

கதைத்தலைப்பு : ‘விரிசல்’ (அ) ‘ஊடல்’.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இது காதல் கதையா? ஆமாம் என்பவர்கள் இதை,இந்தக் கதையை, கடைசி பத்தியில் ஆரம்பித்து முதல் பத்திவரை, வரிசை மாற்றிப் படிக்கவும்.தலைகீழா இல்லைங்க. பத்தி வரிசை மட்டும் மாத்துங்க.வரிகள அப்படியே படிங்க. இப்ப கீழ், ஊதா, வரிலேர்ந்து ஆரம்பிங்க.போங்க.

படிச்சுட்டீங்களா? இல்லையா?.படிச்சுட்டு வாங்க.மத்தத அப்புறம் பாக்கலாம். ’ஸ்க்ரோல் அப் ப்ளீஸ்’

ஆச்சா? :-),இப்ப சொல்லுங்க இது காதல் கதையா? இல்ல சாதிக் கலவரமா?


பி.கு.:ஸ்ஸ்ஸ்ப்பாஆஆஅ! மூளையக் கசக்கிக் கசக்கி, சுண்டக்கா சைஸ்ல இருந்தது இப்ப கடுகு சைஸ் ஆயுடுச்சு.நல்லா இருந்தா, நல்லவங்க எல்லாரும் பின்னூட்டம் போடுங்க. சந்தோஷமா இருந்தா மூள வளரும்னு பக்கத்து வீட்டு நர்ஸ்சம்மா சொல்லுச்சு! ;-).

இதே போட்டிக்கான மற்ற இரண்டு இடுகைகள் இங்கும் இங்கும்.

22 Comments:

NewBee said...

வ.வா.ச. வலைப்பூ டவுன்லொட் ஆகவில்லை.எந்தப் பக்கத்தையும் படிக்க இயலவில்லை.

எனவே , இப்பதிவு போட்டியில் உள்ளது என்று தெரிவிக்க பின்னூட்டம் இட இயலவில்லை.

யாரேனும் வழி சொல்லுங்களேன்.

Thamiz Priyan said...

https://www.blogger.com/comment.g?blogID=26953824&postID=6180373631469997472&page=1

இங்கே போங்க
சங்கத்துக்கு போட்டிக்கு

NewBee said...

நன்றி தமிழ் பிரியன்.

வெகு நேரத்திற்குப் பிறகு வ.வா.ச. பக்கம் டவுன்லோட் ஆகிவிட்டது.பின்னூட்டம் போட்டுட்டேன்.:-)

KRP said...

புதிய சிந்தனை.
ரொம்ப நல்லா இருந்தது
அன்புடன்
கே ஆர் பி

http://visitmiletus.blogspot.com/

NewBee said...

வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி கே.ஆர்.பி.:-)

டோமரு. said...

உங்களாண்ட இதே பேஜாராபோச்சுப்பா.
ஸ்...அப்பா இப்பவே கண்ணகட்டுதே.

NewBee said...

டோமரு,

எண்ட்ரி கொடுத்ததுக்கும் எண்ட்ரி போட்டதுக்கும் நன்றி! :-)

வெட்டிப்பயல் said...

நல்ல யோசிச்சிருக்கீங்க...

சூப்பர் :-)

ILA (a) இளா said...

பதிவு இன்னமும் புரியல..

ஆனா வ.வா.ச template பத்தி சொன்னதுக்கு நன்றிங்க. சரி, செஞ்சாச்சு

ILA (a) இளா said...

இது எல்லாம் மப்பு அடிச்சுட்டு படிச்சாதான் புரியும் போல. மண்டை காய்ஞ்சு அப்புறம் கதைய படிச்சுட்டோம்ல. நல்ல கதை. நம்மளதும் இதே மாதிரி ஒன்னு எழுதி இருக்கேன்

cheena (சீனா) said...

புது வண்டு புதுமைக்கதை படைக்கிறதா - நல்வாழ்த்துகள் - இரட்டைப் பொருள் தரும் இரு கதைகள் இரு பக்கத்திலுமாக - அருமையான சிந்தனை.

போட்டிக்கு இரண்டு படைப்புகள் வேண்டுமாமே

இரா. வசந்த குமார். said...

நல்லா இருக்குங்க கதை...

NewBee said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி! 'வெட்டிப்பயல்'.... :-)

NewBee said...

வாங்க இளா,

வருகைக்கு நன்றி!

முதல் பின்னூட்டத்திலேயே, வயுத்துல புளியக் கரச்சுட்டீங்க...:-)

இப்படி எல்லாம் சொன்னா, இரண்டானது பதிவு எப்படி எழுதுறது நான்?

உங்க 'இரண்டாவது' பின்னூட்டம் தான் சூப்பர்.:-)

NewBee said...

cheena (சீனா) said...
//
போட்டிக்கு இரண்டு படைப்புகள் வேண்டுமாமே//

அன்பு சீனா ஸார்,

வாங்க வாங்க.நலமா?:)

ஆமாம்! இரண்டாவது யோசிச்சுகிட்டே இருக்கேன்.....'மொக்கை மாதிரி'ன்னு ஏதாவது போடலாமான்னு...;-)

NewBee said...

//இரா. வசந்த குமார். said...
நல்லா இருக்குங்க கதை...//

:) நன்றி வசந்த குமார்.

cheena (சீனா) said...

புது வண்டு

வவாசங்கத்தின் பதிவிற்கு ஒரு சுட்டி கொடுக்க வேண்டுமென்று ஒரு விதி இருக்கிறதாமே - பார்த்துக்கொள்

3ம் தேதி இறுதி தினம் - அதற்குள் அடுத்த பதிவினையும் போட்டுவிடு

செல்விஷங்கர் said...

கதை சூப்பர் - கீழேந்து படிச்சா சமுதாயம் - மேலேந்து படிச்சா காதல் - நடுவுலேந்து படிச்சா நிகழ்ச்சி - மாத்தி மாத்திப் படிச்சா கதையா கவிதையா - தலை சுத்தும். நல்ல வித்தியாசமான சிந்தனை - புதுசு புதுசு கண்ணா புதுசு புதுசு.

வாழ்த்துகள்

NewBee said...

செல்வி அம்மா,

வாங்க,வாங்க. நலமா?

உங்ககிட்டேருந்து 'சூப்பர்' வாங்குறது, மகிழ்ச்சியா இருக்கு.

வாழ்த்துகளுக்கு நன்றி அம்மா.:)

NewBee said...

//cheena (சீனா) said...
புது வண்டு

3ம் தேதி இறுதி தினம் - அதற்குள் அடுத்த பதிவினையும் போட்டுவிடு//

சீனா ஸார்,

இன்னும் இரண்டு பதிவு போட்டுட்டேன்.மொத்தம் மூணு.மூணாவதுல 'படம்' காட்டியிருக்கேன்.

பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.:)

சிவசுப்பிரமணியன் said...

நல்ல முயற்சி.. கொஞ்சம் புரிஞ்சுக்க கஷ்டமா இருந்தாலும்.. படிச்சு முடிச்சவுடனே ஒரு திருப்தி "அப்பாடா ஒருவழியா படிச்சாச்சு" :)))))))))))))

NewBee said...

ஹா...ஹா...ஹா...சிவா! ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அன்பானவராயிருக்கீங்க :-)))))))

உங்களுக்கு திருப்தியா கதை சொன்னதுல எனக்கும் திருப்தி.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிவா.:)

blogger templates 3 columns | Make Money Online