வலைப்பூ பெப்சி!
இது செமக் கூலு மச்சி!
ரேடியோவில் ‘டாப் டென்’ பாடல்கள் கேட்டு டைம் பாஸ் செய்தவர்கள், நான் கடந்த பத்து நாட்களில் கேட்ட ‘டவுன் டென்’ டயலாக்ஸ் கேட்கவும்.
10
பசி வந்தா பத்தும் பறந்து போகும்.
(@ பத்து ரூபா இருந்தா பசி பறந்து போகும்ல.
@ ஆ!என் இதயத்தக் காணும். வேற ஒண்ணுமிலீங்க.ஒவரா ஹார்ட்ட டச் பண்ணி, அது முதுகு வழியாக் கீழ விழுந்துடுச்சு.நீங்க படிங்க, நான் குனிஞ்சு எடுத்துக்குறேன்)
9
‘ஒன்பது ரூபா நோட்டு’... நான் இன்னும் பாக்கலீங்க :-)
(@ யாருமே பாத்து இருக்க மாட்டாங்க.நோட்டு அச்சடிக்குறவன் கூடத் தான்.ஏன்னா அவன் குற்றவாளி.கோமாளி இல்ல, செல்லாத நோட்டு அச்சடிக்க.
@ ஸாரி கொஞ்சம் ஓவர் ஃப்ளோ ஆயுடுச்சு :-))
8
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா.
(@ அய்யய்யோ! அய்யய்யோ! உலகம் ‘காலக்ஸி’ குள்ள இருக்குன்னு சொல்லி எங்க டீச்சர் என்னய ஏமாத்திட்டாங்க.யு டூ டிச்சர்?
@ ஓஓஓஓஓஓ!
ஓஓஓஓஓஓ!
ஓஓஓஓஓஓ! இதுக்குப் பேருதாங்க ‘ஓஓஓஒ’-ன்னு அழுகுறது :-0)
7
அந்த மந்திரவாதி என்ன பண்ணுனான் தெரியுமா? ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கூண்டுல அந்தக் கிளிய அடைச்சு வச்சுடான்.
(@ ஏழு குண்டல வாடா! வெங்கட் ரமணா! கோவிந்தா கோவிந்தா!-ன்னு தாங்க பக்தி மயமா கதை சொன்னேன், எங்க வீட்டுக் குட்டிக்கு.ஆனா இந்தக் கதை தான் கடைசீல ஒர்க்கவுட் ஆச்சு.
@ நீங்க எல்லாம் எப்படி?.என்னது, வீட்டுக்கு, தூங்க வராம இருக்கத்தான் (ஓவர் டைம்) கதை சொல்லுவீங்களா?. வெரி பேட் பாய்ஸ் :p)
6
ஆறு மனமே ஆறு! அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
(@ நோ கமண்ட்ஸ். சாமி, கண்ணக் குத்திடும்.
@ நோ கமண்ட்ஸ். சாமி, கண்ணக் குத்திடும்.)
5
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
(@ வளையும். ஐந்துலயும் வளையும் ஐம்பதுலயும் வளையும். ஐநூத்தி ஐம்பதிலயும் வளையும்.எத்தன வாட்டி 5 என்ற எண்ணை எழுதினாலும், கீழ வளச்சுதாங்க எழுதணும்.இல்லேனா அது 5-சே இல்லை.வெறும் நேர்கோடு ,மேல் கோடு - மட்டும் தான்.
@ நன்றி.நன்றி.என்னது? இந்த அறிய கண்டுபிடிப்புக்கு வீடு தேடி வந்து விருது தறீங்களா. அட்ரஸ் வேணூமா?.ஹி..ஹி..ஹி..இந்த மாதிரி எத்தன வாட்டி ஏமாந்திருப்பேன்.விருது ஆட்டோவுல வரும்னு தெரியும்.அஸ்கு புஸ்கு)
4
நாலு பேரு தப்பாப் பேச மாட்டாங்க?
(@ தோடா! தமிழ் நாட்டுல பாதிப்பேரு தமிழத் தப்பாத் தான் பேசுறாங்க.நாலு பேர் தான் தப்பா பேசுறாங்கனு சொல்லுறது ரொம்பத் தப்பு
@ ‘தோடா’ என்பது தமிழ்ச் சொல் என நம்பி, தமிழைத் தப்பா ‘எழுதும்’ நாலு பேரில் நானும் சேர்கிறேன்.)
3
நான் பிடிச்ச முயலுக்கு மூணே கால்.
(@ ஒ! முயலுக்கெல்லாம் கால் பண்ண ஆரம்பிச்சுட்டியா? மொபைல் தான் இந்தியா முழுவதும் ஒரு ரூபாய், லோக்கல் எல்லாம் இலவசம்னு ஆயுடுச்சே.நடத்து நடத்து.
@ ஆமா! முயலோட எந்த மொழில பேசுன?)
1
ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்...
(@ நான் எப்பவுமே சிங்கிள் தாங்க. ‘ஒண்ணா’ தான் அதாவது தனியா தான் இருக்கேன்.ஹி..ஹி..ஹி..
@ இதுக்கு சிங்கள் கமெண்ட் தான்... ...அஸ்கு புஸ்கு)
பி.கு.: @, @-னு போட்டு அட்ட டைம் ரெண்டு கமெண்ட் நானே போட்டுக்கிட்டதாலயும்,
ரெண்டாவது எண் உள்ள டயலாக்க மறக்காம மறந்துட்டதாலயும் இந்தப் பதிவ ‘இரண்டில்லா மொக்கை மாதிரினு’ சொல்லி, வ.வா.ச. போட்டிக்கு சமர்ப்பிக்கிறேன். ;-)
தலைப்புல ‘ரெண்டு’ இருக்கணும்னு அவசியம் இல்லனு சொன்னதால, பதிவுலேயே ‘ரெண்டு’ இல்லாம எழுதி, எல்லாரையும் ‘ரெண்டு’ எங்கன்னு தேட வெச்சதால, போட்டி விதிகளின் படி, பதிவின் கருவில், ஐ மீன் , ‘மொக்கையின் கரு’-வில் ‘ரெண்டு’ கொண்டு வர, பாடு பட்ட எனக்கு, எல்லாரும் ‘மொத்த’ ஸாரி மொத்தமா கருத்துச் சொல்ல பின்னூட்டத்திற்கு வரவும்.
இது தேறுமா என்று சொல்லவும். நன்னி.:-)
பி.கு.:இரண்டு பதிவு போட வேண்டும் என்பது போட்டியின் விதி.கடைசி நாள் நெருங்குவதால், என்ன எழுதுவது என்று '10'சன் ஆனதால் வந்த '10' இது.கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குங்க :D.
20 Comments:
ரெண்ட விட்டா உலகமே இல்ல - ஆமா , இல்ல !!
ஒண்ணாயிருக்கது சூப்பர் - ஒண்ணா, ஒத்துமையா இருக்கது ரொம்ப சூப்பர்
(நானும் சிங்கிளாத்தான் இருக்கேன் - உலகத்துலே யாராச்சும் ரெண்டா இருக்காங்களா)
ஒம்பது ரூபா நோட்டு யாராச்சும் கோமாளி அடிச்சா சொல்லுறேன்
முதுகுக்கு பின்னாடி எல்லாம் நழுவி ஓடக்கூடாது - பத்திரமா பாத்துக்க - பை பை பை
இரு வேறு பட்ட கருத்துகள் கூற தலை ஆசைப்பட்டாலும் நெஞ்சு வாழ்த்துகள் என ஒரு கருத்தையே கூற விரும்புகிறது.
மொக்க, கும்மிலே சேந்துட்டியா வண்டே
பட்டாளத்தே அனுப்பட்டா
பின்னூட்டம் எத்தனை வேணும் சொல்லு
ரெடி ஸ்டார்ட் மீஜிக்
தேறும் தேறும் தேறும்.
நியூபீ,
கங்கணம் கட்டிக் கதை சொல்றீங்களா.
நன்றி நன்றி. நோட் திஸ் பாயிண்ட் மிலார்ட்.
ரெண்டு தடவை சொல்லிட்டேன்.:)
காலையில் இறுக்கமாக இருந்த மனசை சிரிக்க வச்சதுக்கு கோடி புண்ணியம் உங்களுக்கு.:)))
நீங்க இத்தனையாவதுங்க.....
621
யார் இந்த வண்டு?
/
Your comment has been saved and will be visible after blog owner approval.
/
என்ன இதெல்லாம்????
கும்மிய அசிங்க படுத்திகிட்டு????
/
யார் இந்த வண்டு? ஏன் இந்தப்பதிவு? வண்டு! உங்களைப் போல் ஒன்று. ஆம்! உங்களுக்கும் வண்டுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது............... ..................... வண்டுக்கும் தெரியாது, 'ஏன் இந்தப்பதிவு?' என்று. :) :)
/
ரொம்ப நல்லது!!!!!!!!
க்ளீனா புரிஞ்சது.!!!!
அன்பு செல்வி அம்மா,
நலமா? வெகு நாட்கள் ஆகிவிட்டதே?
என் 'மொக்கை மாதிரியையும்' ரசித்தமைக்கு நன்றி...:-))))
அன்பு சீனா ஸார்,
வாங்க வாங்க!
புரியுது, நீங்க சொல்றது. மற்றவர்கள் எழுதுவதைப் படிக்கும் போது இறுக்கம் விலகி மனம் சிரிப்பதால், எனக்கும் பிடித்துப் போநிற்று.
ச்சும்மாஆஆஆ ஒரு ட்ரை தான்.
வருகைக்கு நன்றி. தங்கமணி எப்படி இருக்காங்க?:)
//வல்லிசிம்ஹன் said...
:)
காலையில் இறுக்கமாக இருந்த மனசை சிரிக்க வச்சதுக்கு கோடி புண்ணியம் உங்களுக்கு.:)))
வாங்க! வாங்க! உங்கள பாத்ததுல ரொம்ப மகிழ்ச்சி.
நீங்க சொல்றது உண்மை.சில நேரங்கள்ல வெறும் 'மொக்கையா'க் கூடத் தேடிப் படிப்பேன்.
laughter is the best medicine-ல.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி 'புது டீச்சர்':)
வாங்க வாங்க 'மங்களூர் சிவா',
நீங்க வந்தது ரொம்ப மகிழ்ச்சி.
கமண்ட் மாடரேஷன் போட்டு கடுப்பேத்திட்டேனா? :).இப்பதான் எங்க ஊர்ல விடிஞ்சுது. அதான் லேட்.
வருகைக்கும் , 'என் முதல் கும்மிக்கும்' மிக்க நன்றி.:-)))
புது வண்டு,
மறுமொழிகள் அதிகம் வேண்டுமெனில் மட்டுறுத்தல் இல்லாதது நலம். தேவை எனில் மீண்டும் மட்டுறுத்தல் (Comment Moderation)போடலாம். சிந்தனை செய்
ஆரம்பிச்சாச்சா உங்க கலக்கல:)))))
//‘ஒன்பது ரூபா நோட்டு’... நான் இன்னும் பாக்கலீங்க :-)
(@ யாருமே பாத்து இருக்க மாட்டாங்க.நோட்டு அச்சடிக்குறவன் கூடத் தான்.ஏன்னா அவன் குற்றவாளி.கோமாளி இல்ல, செல்லாத நோட்டு அச்சடிக்க.
@ ஸாரி கொஞ்சம் ஓவர் ஃப்ளோ ஆயுடுச்சு :-))//
இது ரொம்ப டாப்பு:))
/'10'சன் ஆனதால் வந்த '10' இது.//
நல்லாவே 10ஷன் ஆகறிங்க:))))
வாங்க ரசிகன்,
உங்க எல்லாப் புன்னகைகளுக்கும்
//:)))))
:))
:))))
//
நன்றி. :))))) :)) :)))).
// NewBee said...
வாங்க ரசிகன்,
உங்க எல்லாப் புன்னகைகளுக்கும்
//:)))))
:))
:))))
//
நன்றி. :))))) :)) :)))).//
ஹலோ.. ஏனுங்க தேனி.. இதென்ன அநியாயமா இருக்கே!! நான் கொடுத்த சிரிப்பான்களை அப்படியே எனக்கு திருப்பி தந்தா?
வட்டி எங்கே?:P:)))
இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு... ஒன்று இரண்டு என்று வகைப்படுத்து பாடுன்னு அவ்வையார்கிட்ட முருகன் சொன்னாராம்... நீங்க ஒண்ணு ரெண்டுன்னு மொக்கை போடுறீங்க...
நீங்கள் கேட்பவை
காமெடி கலக்கல்
ஐயோ.. எனக்கும் இந்த டாப் டென் வியாதி தொத்திக்கும் போலிருக்கே
புத்தம் புது 'நியூ பீ' யே!
அம்மாவாசைக்கு அடுத்த நாள் உன் கூட்டில் நுழைந்தாற்போல்...ஒரே மொக்கையாயிருக்கே!!!
ஜிலேபியை சிவாஜி வாயில் போட
அழைத்'தேனே'? பாக்கலையா?
அதையும் ஒரு மொக்கையாக....அம்மாவாசைக்கு முந்தின நாள் அடையாக போட்டுவிடவும்.
நானானி! வாங்க! வாங்க! இப்பப் பாத்துட்டேன்....:)))))
மாவு தயாருச்சுகிட்டு இர்க்கேன் பிழிஞ்சுடுவோம்:D
Post a Comment