குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Thursday, April 17, 2008

காதலிக்கு வாழ்த்து! காதலனுக்கு வாழ்த்து! பெற்றோர்க்கு வாழ்த்து! கவிஞனின் ஆப்பு!

காதலிக்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~
ஒற்றை ரோஜா அழகு!
கொடுப்பவர் கொடுத்தால்
இன்னும் அழகு...அற்றைத் திங்கள் அழகு!
இருப்பவர் இருந்தால்
இன்னும் அழகு...

பற்றைத் துறப்பது அழகு!
பற்றாமல் (தீ) பற்றுவது
இன்னும் அழகு...

வெட்டை வெளித் தனிமை;
மொட்டை மாடி இனிமை;
சுட்டுவிட்ட நிலவு;
சுடும் கனவு;

யாவும் பெற்று கசிந்துருக வாழ்த்துகள்!
யாவும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!காதலுனுக்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~~~
காதல் அழகு!
காதலி கிடைத்தால்
இன்னும் அழகு...


யமஹா அழகு!
பில்லியன் உயர்த்தினால்
இன்னும் அழகு...

பீட்சா அழகு!
க்ரெடிட்கார்ட் இருந்தால்
இன்னும் அழகு...

விட்டு விட்ட சிகரெட்;
கட்டி விட்ட ஃபோன்பில்;
சுட்டுவிட்ட நிலவு;
சுடும் கனவு;

யாவும் பெற்று கசிந்துருக வாழ்த்துகள்!
யாவும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!


பெற்றோர்க்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~~~~

பெற்ற பிள்ளைகள் அழகு!
பட்டம் பெற்றால்
இன்னும் அழகு...

கட்டிய வீடு அழகு!
படுத்ததும் வரும் தூக்கம்
இன்னும் அழகு...

கடமைகள் அழகு!
இனிதே முடிந்தால்
இன்னும் அழகு...நீண்ட ஆயுள்;
நீடிக்கும் மகிழ்ச்சி;
நிறைய பேரப்பிள்ளைகள்;
நிம்மதியான உறக்கம்;

யாவும் பெற்று மகிழ்ந்திருக்க வாழ்த்துகள்!
யாவும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!


கவிஞனின் ஆப்பு!
~~~~~~~~~~~~~~~~

காதல் அழகு!
திருமணத்தில் முடிந்தால்
இன்னும் அழகு...

காதலன் அழகு!
(மாலையிட்ட பிறகும்)
மாறாமல் இருந்தால்
இன்னும் அழகு...
காதலி அழகு!
(மாலையிட்ட பிறகும்)
பேசாமல் இருந்தால்
இன்னும் அழகு...

தாய்தந்தை கனவு அழகு!
சற்று வளைந்து கொடுத்தால்
இன்னும் அழகு...

கவிதை அழகு!
பொய் கலந்தால்
இன்னும் அழகு...

கற்பனை அழகு!
தொடர்பில்லாமல் இருந்தால்
இன்னும் அழகு...

அழகோ அழகு!
அழகோ அழகு!
அழகோ அழகு!

பி.கு.: ‘இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும்’- போட்டியின் விடைகள் வெள்ளி இரவு 12:00 மணிக்கு அறிவிக்கப் படும். இன்னமும் யாரும் விடை சொல்லவில்லை என்றாலும். ;-)

10 Comments:

cheena (சீனா) said...

அழகு அழகு கவிதை அழகு
அதுவும் புது வண்டு ஒலித்தால் இன்னும் அழகு
காதலி காதலன் பெற்றோர் அனைவரின் அழகும் அழகு
பட்த்துடன் இணைந்ததால் இன்னும் அழகு

NewBee said...

:-).நன்றி சீனா ஸார். மகிழ்ச்சியா இருக்கா.

நிஜமா நல்லவன் said...

கவிதை எல்லாம் மிக அழகு.

////இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும்’-///

எனக்கு தெரிந்து ஒரு தவறுதான் திரும்ப திரும்ப நடக்கிறது. அது நான் உங்கள் பதிவிற்கு வந்து செல்வதுதான்:)

NewBee said...

//நிஜமா நல்லவன் said... //

வாங்க நி.ந. நலமா?.

//கவிதை எல்லாம் மிக அழகு.//

மிக்க நன்றி.

//எனக்கு தெரிந்து ஒரு தவறுதான் திரும்ப திரும்ப நடக்கிறது. அது நான் உங்கள் பதிவிற்கு வந்து செல்வதுதான்:)//

அய்யோ! அவ்ளோ கொடும படுத்துறேனா?

அய்! :-) இல்ல, நீங்க சும்மாங்காட்டி சொல்லுறீங்க.நீங்க தான் நெசமாவெ நல்லவர் ஆச்சே.:)

Noddykanna said...

Dear RNV,

pudhumaiyaa irukku!

puriyuraapula irukku!

chuttinaa yenna?

nijamaa theriyaama thaan kaekuraen....

yenannu sonaa,
yaarum sollalanaalum(!)
naan kandu solluvaen!

Anbudan,
Udanpirappu

NewBee said...

அன்பு நாடிக்கண்ணா,

நலமா? வருகைக்கு நன்றி.:-)

நீ கேட்ட கேள்வி புல்லரிக்குது. அர்த்தம் தெரியலனாலும் சரியான பாதைல போற.

;-). புரியுதா?. மற்ற விடைகளுக்குக் காத்திருக்கும்

-புல்லரிக்கும் புதுவண்டு.:)

ரசிகன் said...

கவிதை தொகுப்பு நல்லாயிருக்கு:) வாழ்த்துக்க்கள்.

NewBee said...

//ரசிகன் said...
கவிதை தொகுப்பு நல்லாயிருக்கு:) வாழ்த்துக்க்கள்.//

நன்றி! ஆசிரியரே. :-)

வருகைக்கும் வாழ்த்திற்கும்.

துளசி கோபால் said...

கூட்டில் இருக்கும் யானைதான் கொள்ளை அழகு.:-))))

NewBee said...

துளசி கோபால் said...
கூட்டில் இருக்கும் யானைதான் கொள்ளை அழகு.:-))))

Dear Teacher,

Hearty thanks :)))).

Romba kashta-p-pattu yaanaiya ukkaara vachen :D :D..

P.S:I don't have tamil font now :(

blogger templates 3 columns | Make Money Online