குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Monday, April 14, 2008

இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும் pls.


எல்லாருக்கும் வணக்கம்!

நான் வலைப்பூவுக்குப் புதுசு... ... ஆஹா, இந்தப் புராணத்த நிறைய வாட்டி, சொல்லிட்டேனோ?...சரி விடுங்க, அரசியல்ல இதெல்லாம் சகஜம் தானே.(அப்படின்னு சொன்னப்புறம் ஹி..ஹி..ஹி..னு வழியறது மரபு).ஹி..ஹி..ஹி

இந்த வரியைப் படிக்குறவங்க, இந்தத் ‘த்’-தன்னாவை இப்பப் படிக்குறவுங்க, மனசாட்சி தொட்டு, சொல்லுங்க... ...நீங்க முதல் பதிவு போடும் போது (அதாவது என்ன மாதிரி புதுசா வலைப்பூவுக்கு வந்த போது... ...ஹி..ஹி..ஹி..), இந்த, சந்தேகம் எல்லாம் வந்ததா?

எந்த சந்தேகம்? வருசயாப் படிங்க... ...

1. எதடா எழுதுறது? சாப்ட்ட காபியையா?, சந்திச்ச இனா வானாவையா? சிரிச்ச ஜோக்கையா?
3. ஒரு post போட்டவுடனே... ... 15 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி, பின்னூட்ட status பாத்துக்குறது
4. அப்புறம், முக்கியமா, நம்ம blog template வித்தியாசமா இருக்கணுமேன்னு, எல்லார் வீட்டு blog-யையும் போய் எட்டிப் பாத்து, போன விஷயத்த மறந்து போய், அங்கன இருந்த post பூராவையும் படுச்சுப் போட்டு... ...

ஆஹா, அம்புட்டு பேரும் இம்புட்டு எழுதுறாங்களா... ...நம்ம blog-குக்கு யார் வருவான்னு... ...நொந்து நூலாகி, வெந்து வேர்க்கடலை ஆகி, ஒரு வாரம் கடையை இழுத்து மூடுறது

உண்மையா இல்லையா?

என்னாது இல்லையா...இதெல்லாம் அநியாமுங்க, ஏற்கனவே வெந்த வேர்க்கடலய, மிக்சீல போடாதீங்க. வந்து காப்பாத்துங்க. இதெல்லாம் சகஜம், இது ‘புதுசு புதுசு கண்ணா புதுசு’-களின் 'நியாயமான அறிகுறி' அப்புடின்னு எல்லாம் சொல்லுங்க... ஸ

பி.கு.: ஆமாமுங்க, இதுல 5 தவறுகள் இருக்குங்க (அதாவது எனக்குத் தெரிஞ்சு 5-ங்க)... ...என் சந்தேகத்துக்குப் பதில் சொல்லுற உங்களுக்கும் பொழுது போகனுங்களே... ...அதான் proof பாக்காம போட்டுட்டேன்... ...ஒரே ஒரு க்ளூ தாரேன்... ...கண்டிப்பா எழுத்துப் பிழையச் சொல்லலங்க.

Enjoy-ங்க. :). புடுச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க. பொழச்சுக்குவேன்.

இதற்கான விடைகள் இங்கே...

ஒலிக்கும்...

21 Comments:

கோவி.கண்ணன் said...

ஏன் இந்த கொலை வெறி ?
:-)

NewBee said...

//கோவி.கண்ணன் said...
ஏன் இந்த கொலை வெறி ?
:-)//

வாங்க..:-) வருகைக்கு நன்றி...

நான் சொல்லல! 15 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி, பின்னூட்ட status...

சொன்ன சொல் காப்பாத்துற, பரம்பறைங்க...:-)

cheena (சீனா) said...

ரீங்காரிக்கும் புது வண்டே !! - தட்டச்சுப் பிழைகள் ஏராளம் ஏராளம் - கவனம் தேவை - அழகு தமிழிலேயே எழுத முயலவும். ஐந்து தவறுகள் - ஆராய வேண்டும் - கூறினால் என்ன பரிசோ ?

NewBee said...

வாங்க சீனா ஸார்,

தட்டச்சு பிழைகள், சரி பண்ணீட்டேன்...

பரிசு, பரிசு....ம்ம்ம்...ஆஆஆஅ...

யாரோ வாசக்கதவ தட்டுறாங்க...சீனா ஸார்...

பி.கு: அது சர்ப்ரைஸ்...முதல்ல பதில் சொல்லுற ரெண்டு பெருக்கு, என்னால முடுஞ்சது..

Anonymous said...

பரவாயில்லை பொழச்சுக்குவீங்க‌
//புடுச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க. பொழச்சுக்குவேன்//

கருப்பன்/Karuppan said...

Helpபிட்டேன்...

:-)))))))

NewBee said...

//
சின்ன அம்மிணி said...
பரவாயில்லை பொழச்சுக்குவீங்க‌
//புடுச்சுருந்தா பின்னூட்டம் போடுங்க. பொழச்சுக்குவேன்//
//

தாங்க்ஸு...தாங்க்ஸு...அம்மிணி... :-)

NewBee said...

//கருப்பன் said...
Helpபிட்டேன்...

:-)))))))//

:D :D... Thanks-இ,Jump-இ,Smile-இட்டேன்...:-)))))

Noddykanna said...

Dear RNV,

nalla thaana irundha? yenna aachu unakku?

thisai maaraamal, thirampada yeludha vaazhthukkal!

Anbudan,
Udanpirappu.

NewBee said...

Thanks NoddyKanna...;-)

செல்விஷங்கர் said...

1. காபி சாப்பிட முடியாது = குடிக்கணும்

2. ஜோக் சிரிக்காது

3. புதுசு புதுசு கண்ணா - இல்ல

4. சொல்லுங்க .... ஸ

5. 5 தவறுகள் இல்லை

செல்விஷங்கர் said...

விடைகள் தெரியும் வரை பப்ளீஷ் செய்ய வேண்டாம். போட்டி முடிவில் பப்ளீஷ் செய்யவும். இப்பொழுது சரியா தவறா = எத்தனி சரி போன்ற விபரத்தினை நன்றியுடன் தெரிவிக்கவும்

ரசிகன் said...

ஐஞ்சு பிழைகளையும் கண்டுபிடிச்சதும் ,எனக்கும் மெயில் தட்டிவுடுங்கப்பா.,:P

யோவ் புதுவண்டு நல்லா இன்ரஸ்டாதான்யா இருக்கு உம்ம பதிவு & போட்டி:))

அருமையான பதிவுகளாய் போட்டு எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்:)

அன்புடன் உங்கள் ரசிகன்.

NewBee said...

// செல்விஷங்கர் said //

செல்வி அம்மா,

நலமா?வருகைக்கு நன்றி! விடைகளுக்கும் நன்றி!

ஆனா உங்க மார்க் 3/5 தான்.2,5 தப்பா சொல்லீட்டீங்க...இருந்தாலும் உங்களுக்கு ஒரு 'ஓ' போட்டுர்ரேன்...

யாராவது 5/5 எடுக்குராங்களான்னு காத்திருந்து பாக்குரேன்.. இல்லேனா உங்களுக்குத்தான் பரிசு...

மத்தவங்க முயற்சி பண்ணட்டும்னு, உங்க விடைகள வெளியிடல...

maniacr said...

Hi,

Interesting.Have sent the answers to ur mail ID.check it out..:)

-Paul n Mani

NewBee said...

Paul n Mani,

Guys! thanks for viewing...You have given 2 answers n both of them are correct...

Paul! Welcome to my blog :)
Mani! Welcome back :)

NewBee said...

//ரசிகன் said...
ஐஞ்சு பிழைகளையும் கண்டுபிடிச்சதும் ,எனக்கும் மெயில் தட்டிவுடுங்கப்பா.,:P

யோவ் புதுவண்டு நல்லா இன்ரஸ்டாதான்யா இருக்கு உம்ம பதிவு & போட்டி:))

அருமையான பதிவுகளாய் போட்டு எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்:)

அன்புடன் உங்கள் ரசிகன்.//

வாங்க ரசிகன்,

வருகைக்கும் அன்பிற்கும் நன்றி!

//அருமையான பதிவுகளாய் போட்டு எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்:)//

கண்டிப்பா முயற்சிக்கிறேன்...இல்லேனாலும் நீங்க ரொம்ப நல்லவங்கனு தெரியும்..:-)

வாழ்த்திற்கும் நன்றி! :)

நிஜமா நல்லவன் said...

நான் வந்துட்டு போனத சொல்லத்தான் இந்த பின்னூட்டம்.

NewBee said...

வாங்க நி.ந.! நலமா? :-)
வருகைக்கு நன்றி!

எம்.ரிஷான் ஷெரீப் said...

2,5 ஐக் காணவில்லை.
பாலா,எனக்கு மட்டும் அந்த அஞ்சையும் மெயில் பண்ணிடுங்க..
இங்க வந்து அஞ்சையும் நானே சொல்லிடுறேன். :P

NewBee said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
2,5 ஐக் காணவில்லை.
பாலா,எனக்கு மட்டும் அந்த அஞ்சையும் மெயில் பண்ணிடுங்க..
//

வாங்க ரிஷான்,

வணக்கம்! உங்கள சந்திச்சதுல மிக்க மகிழ்ச்சி.:-)

//2,5 ஐக் காணவில்லை.//

ம்ம்ம்ம்...புரியல.

பாலா யாரு? ரசிகனா? ஸாரி நான் புதுசு.ஹி..ஹி..ஹி..

blogger templates 3 columns | Make Money Online