குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Sunday, June 8, 2008

ஜூன் PIT-க்கு

PIT ஜூன் மாதப் போட்டிக்காக முதல் படம்.

என் பிள்ளையின் வகுப்பாசிரியையும் உதவித்தலைமை ஆசிரியையும்.ஆசிரியைகளுக்கோ வேலையில் மும்முரம்.ஆனால் கீழே இருக்கும் இரண்டு வாண்டுகளுக்கோ? :)














லண்டன் மெட்ரோபாலிடன் காவலர்.No stopping at anytime :( என்று சொல்லி நாள் முழுவதும் அவருக்கு அங்கு தான் ஸ்டாப்பிங்.

















இவர்களும் லண்டன் மெட்ரோபாலிடன் காவலர்களே.வண்டி, வாண்டுகள் படத்தைத் தாண்டி இன்னும் நிறைய மக்கள் எல்லாரையும் கண்காணிக்க வேண்டும்.........














இவர்கள் வேலைக் கடினமா? அல்லது 10, 20 வாண்டுகளைச் சமாளிக்கும் ஆசிரியைகளின் வேலை கடினமா?

பி.கு.:அப்பாடா.......ரொம்ப நாள் கழிச்சு, ஒரு பதிவு போட்டாச்சு. :D :D.

வலையுலக நல்லுள்ளங்களே!
வாங்க!
வந்து கருத்தைச் சொல்லுங்க!
போட்டிப் படம் இந்த மாதத் தலைப்பிற்கு ஓகேவா????????

19 Comments:

Unknown said...

:).Good!

ராமலக்ஷ்மி said...

காத்துக் கொண்டல்லவா இருந்தேன். வல்லியம்மா பதிவிலே ரொம்ப சலிச்சுக்கிட்டீங்களே! ஆனால் படங்கள் அருமை. போன முறை போல கதை ஆரம்பித்து டிஸ்கஷனுக்கு என்னைக் கூப்பிடுவீர்கள் என நினைத்தேன். பரவாயில்லை, இப்போதும் நாட் டூ லேட். முதல் படத்தில் டீச்சர் அப்படிக் கை நீட்டுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதில் ஆரம்பிக்கலாமா?

NewBee said...

வாங்க ராம்லக்ஷ்மி,

:-).நலமா?

ஆஹாஆஆஆ! ஆரம்பிக்கலாமே,க்கலாமே,லாமே,மே :).......

காரணம் சொல்லி, பிரச்சனைப் பெரிதாகி, லண்டன் போலீஸ் வருவதாக, அவுட் லைன் போடலாமா, கதைக்கு?

படம் பிரம்மாண்டம் ஆயுரும்ல :D :D

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க ராமலக்ஷ்மி.:))))

துளசி கோபால் said...

படங்கள் நல்லா இருக்கு.


டீச்சர் ஏன் அப்படிக் கையை நீட்டுறாங்களா?

அட... இது தெரியலையா?

'போ. சீக்கிரம்போய் பின்னூட்டம் போட்டுட்டு வா. முதல்லே அந்த வேலையைப் பார். ம்...ஆகட்டும்'

NewBee said...

வாங்க! வாங்க! டீச்சர்! :-).

நலமா?

ஓகே.ஓகே.அவுங்க அது தான் சொல்றாங்களா?

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.ஒரு டீச்சரின் சிந்தனை இன்னொரு டீச்சருக்கு நல்லாத் தெரியுமே.

வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ம்ம்ம்ம்ம்பபப நன்னி! டீச்சர் :)

செல்விஷங்கர் said...

புது வண்டே

போலீசு சும்மா வராது - பொடிசுங்களே எல்லாம் புடிச்சுட்டுப் போக வந்திருக்கும். படமெல்லாம் நல்லா இருக்கு - பரிசு உனக்கே ( நான் ஜட்ஜில்லையே)

தாரணி பிரியா said...

டீச்சர் : யாருப்பா அது கிளாஸ் டைம்ல வந்து போட்டோ எல்லாம்
எல்லாம் எடுத்துட்டு கிளம்புங்க கிளம்புங்க சார்.


காவலர் 1 : ஏன்பா அங்கதான் டீச்சர் சொன்னங்க இல்லையா வேலை செய்யற இடத்துல தொந்தரவு செய்யகூடாது

காவலர் 2 : என்னது அவர் இப்ப இங்கதான் வாராறா? உடனே
பஸ் ஏறி கிளம்ப வேண்டியதுதான்

தாரணி பிரியா said...

மேல சொன்னதெல்லாம் சும்மா படங்கள் நல்லா இருக்குங்க புது வண்டு

NewBee said...

வாங்க தாரணி!:-)))

வணக்கம்! தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

வசனம் எல்லாம் மிகப் பொருத்தமா இருக்கே.பேசாம நானும் ராமலக்ஷ்மியும் எடுக்குற படத்துல நீங்க வசனகர்த்தா ஆயுடுங்களேன்.

துளசி டீச்சர ஆல்ரெடி, (அவுங்களக் கேக்காம), ப்ரொடுயூசர் ஆகிட்டேன்.

படம் பெயர்:'இது தாண்டா படம்"

எப்படி இருக்கு? :P

NewBee said...

செல்வி அம்மா!

:)))

வாங்க! வாங்க! நலமா?

பரிசு எனக்கே எனக்கா? நன்னி! நன்னி! ரொம்ப நன்னி அம்மா :D :D

நீங்க சொல்லிட்டா அப்பீலே இல்ல.ஹி..ஹி..ஹி..

எங்க? ரங்ஸ் அய்யாவக் காணும் :P

துளசி கோபால் said...

நல்லவேளை...தலைப்பு ( படத்தின் தலைப்பைச் சொல்றேன்) தமிழில்தான் இருக்கு.

வரிவிலக்கு பிரச்சனை இருக்காது:-)))))

Illatharasi said...

டீச்சர் ரொம்ப கோவமா இருக்காங்க.....நீங்க படம் எடுத்ததா பார்த்தா? ;)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

NewBee said...

//துளசி கோபால் said...
வரிவிலக்கு பிரச்சனை இருக்காது:-)))))

//

ஹி..ஹி..எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ யோசிச்சு, இந்தத் தலைப்பு வெச்சேன் தெரியுமா டீச்சர்?

அப்புரமா ஒரு ஜோடா கூடக் குடிச்சேனே......

NewBee said...

//Illatharasi said...
வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!
//

வாங்க இல்லத்தரசி!

நலமா? தங்கள் வருகைக்கு மிக்க நன்றி:-))))

//டீச்சர் ரொம்ப கோவமா இருக்காங்க.....நீங்க படம் எடுத்ததா பார்த்தா? ;)//

ஹி..ஹி..டீச்சர் நமக்கு தோஸ்த்து! கூப்பிட்டு படம் எடுத்துக்கோன்னு சொன்னாங்க!

இது வேலை மும்முரம்.

Dr.Srishiv said...

என் வலைப்பூவிற்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றி புதிய தேனீக்கு, அது என்னங்க PIT? எனக்கு புரியலை, பெங்களூருக்கு வேலைக்கு வந்ததிலிருந்து வலைப்பதிவு மற்றும் குழும மடல்களுக்கு அதிகம் நேரமில்லை, மேலும் அலுவலகத்தில் வலை மேய வசதியில்லை :( நன்றி மீண்டும்
ஸ்ரீஷிவ்...@ சிவா...

cheena (சீனா) said...

புது வண்டே

ஆசிரியரும் காவலரும் பணியில் இருக்கும்பொழுது எடுத்த புகைப்படங்கள் அருமை.

துக்ளக் ஆசிரியர் சோ அடிக்கடி கூறுவார்.

ஆசிரியர்களையும் காவலர்களையும் மதிக்காத எந்த நாடும் உருப்படாதென்று.அந்த அடிப்படையில் ஆசிரியரையும் காவலரையும் இணைத்து ஒரு பதிவு இட்டமை நன்று

நல்வாழ்த்துகள் வெற்றி பெற

NewBee said...

//Dr.Srishiv said...
//

வாங்க முனைவரே! நலமா?

தங்களின் இத்தனை வருட உழைப்பும் கனவும் நினைவாகி இருக்கிறது.பதிவைப் படித்ததும் கண்டிப்பாய் வாழ்த்தத் தோன்றியது :-).

PIT என்பது, Photography In Tamil என்ற நம் சக வலைப்பூ.வலைஞர்களாகிய புகைப்படக் கலைஞர்கள் சிலர் கூட்டாகச் சேர்ந்து, அனைவருக்கும் புகைப்படக் கலையை எளிய முறையில் புரியும் படி சொல்லித் தருகிறார்கள்.அதுவும் மிகவும் பொறுமையாக.

நேரம் கிடைக்கும் பொழுது அங்கு சென்று பாருங்கள்.http://photography-in-tamil.blogspot.com/

அவர்கள் மாதா மாதம் ஒரு தலைப்பைக் கொடுத்து,அதற்கேற்ற புகைப்படம் எடுக்க போட்டி நடத்துகிறார்கள்.இந்த மாதத தலைப்பு 'அன்றாட வேலையில் ஈடுபட்டிருக்கும் உயிரினம்'.http://photography-in-tamil.blogspot.com/2008/05/pit-2008.html

அதற்குத் தான் இந்தப் புகைப்படங்கள்

வருகைக்கு மிக்க நன்றி முனைவரே! :)

NewBee said...

//cheena (சீனா) said...
புது வண்டே

ஆசிரியர்களையும் காவலர்களையும் மதிக்காத எந்த நாடும் உருப்படாதென்று.அந்த அடிப்படையில் ஆசிரியரையும் காவலரையும் இணைத்து ஒரு பதிவு இட்டமை நன்று

நல்வாழ்த்துகள் வெற்றி பெற
//

வாங்க சீனா ஸார், வாங்க.:)

நலமா?

ஹி...ஹி..ஹி...ஆமா!ஆமா! அப்படி எல்லாம் யோசிச்சு தான் போட்டேன்.

அப்படின்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.இதல்லாம் தானா வருது ஸார், தானா வருது.ஒரு வேள, ரத்தத்துலேயே இருக்குமோ? :D :D

வருகைக்கு நன்றி! சீனா ஸார்.:)

Illatharasi said...

புது வண்டு அவர்களுக்கு நன்றி, எனது வலைக்கு வந்து கருத்துக்களை சொன்னதற்கு.... அடிக்கடி வாங்க!!!

Breakfast items இங்கே தேடவும்.....
http://illatharasi.blogspot.com/search/label/Breakfast

blogger templates 3 columns | Make Money Online