எழுத்தாளர் சுஜாதாவின் ‘ஜே.கே.’ என்ற நாவலில், ஒரு வரி வரும். ஜியோ என்ற ஜியோத்ஸனா என்ற கதாநாயகியைப் பற்றித் தான் :-).
‘கிடாரின் ‘ஜி’ கம்பியைத் தட்டிப் பாருங்கள் ஜியோ;
திராட்சைத் தோட்டத்தில், கொத்துக் கொத்தாய்த் தொங்கும் திராட்சைகளில், ஒரே ஒரு திராட்சையின் நுனியில் இருக்கும் பனித்துளியை நாவால் தொட்டுப் பாருங்கள் ஜியோ;’
நிற்க! இந்த ‘ஜி’ ஜிலேபியைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது நானானி மற்றும் செல்வி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால் ‘ஜி’யோவுக்குத் தடை :(
‘சி’ல்லென்று ஒரு காதல்... ... படம் நல்லா இருந்தது... ...சூர்யா சூப்பர்... ...சரி சரி! ‘ஜோ’வும் ‘பூ’வும் கூட ஓக்கே.அதிலும் மச்சக்காரி பாடலில் ‘பூ’... ...
நிற்க! இந்த ‘சி’ சிவாஜியைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது செல்வி மற்றும் நானானி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால் ‘பூ’க்குத் தடை :(
‘ஜி’வாஜி வாயிலே ஜிலேபி என்று ஒரு முன்மாதிரியான பின்நவீனத்துவத்தை முன் வைத்த நிஜமா நல்லவரின் பதிவில் தான் முதல் முறையாக, இந்த, சரித்திரப் புகழ் பெற்ற;சுனாமியை சுழற்றி அடித்த; வளைகுடாவை வளைத்துப் போட்ட; இமயமலையை இளக வைத்த ‘ஜி-வா-ஜி’ தொடரைப் பார்த்தேன்.படுச்சுட்டு ,அவர் பதிவில் பின்னுட்டம் போடாமல், விட்டு விட்டு, இப்ப உன் பதிவில் அதைப் பற்றிச் சொன்னால், நி.ந. பெருந்தன்மையாய் விட்டு விடுவார் என்று நினைப்பா என்று யார் யாரோ கேட்பது போல் இருப்பதால்... ...
நிற்க! இந்த ‘சி’ யும், ‘ஜி’யும் ‘சிவாஜி வாயிலே ஜிலேபி’யைப் பற்றித் தான் இருக்க வேண்டும் என்பது நானானி மற்றும் செல்வி அம்மாவின் அன்புக் கட்டளை.அதனால்... ...:(
இதுல பாருங்க, வல்லியம்மா சுத்துன ஜிலேபில தான், ‘புகைப்படம்’ சூப்பர். (அதாவது! ஜாங்கிரி... ...தென்னகத்துல நமக்கு இரண்டும் ஒண்ணுதாங்க!ஹி..ஹி..ஹி..)
பார்த்த உடனே கை நீட்டி, ஒண்ணு எடுத்து, சின்னதா விண்டு, ஜூசியா வாயில போட்டு, கண் மூடி ரசிச்சு, இனிப்ப நாக்குல சுவைச்சு, தொண்டைல எறங்க விட்டு, ஒரு பெருமூச்சு விட்டுக் கண் தொறக்கணும்... ...(எதுக்குப் பெறுமூச்சா? அப்புறம் எடை பார்க்கும் இயந்திரமும் ‘பெறு மூச்சிற்கு ‘ரிப்பீட்டு’ப் போடுமே)... ...:-0
இத ஒரு, கவிதையா எழுதுவோமா?
வல்லியம்மா சுத்துன ஜாங்கிரி!
பார்த்த உடனே கை நீட்டி!
எடுத்து ஒண்ணு கண்மூடி!
சின்னதா விண்டு வாயில் போட்டு!
ஜூசியா இருக்கே எனஉணர்ந்து!
ரசித்து ரசித்து ‘உச்’ கொட்டி!
தொண்டையில் இறக்கி களித்திடவே!
சுத்துவோம் நாமே ஜிலேபியே!
இது எப்படி இருக்கு? என்னது கேவலமா இருக்கா! நோ!நோ! செல்லம்! நீ அப்படி எல்லாம் சொல்லக் கூடாது செல்லம்.சிவாஜி கண்ணக் குதிடுவாரு. எந்த சிவாஜி? மராட்டிய மன்னரா? நடிகர் திலகமாவா? யாரா இருந்தா நமக்கென்ன செல்லம்? கண்ணு நம்மளது! அதக் காப்பாத்திக்கணுமே? :-0
சரி! ‘ஜி’ பத்தி ஒரு கவிதை எழுதியாச்சு,அதனால ‘சி’ பத்தி ஒரு சில கேள்வி பதில் சொல்லுவோமா?
கேள்வி 1:16 வயதில் புதுவண்டு என்ன செய்தது?
வேற என்ன பிறந்த நாள் தான் கொண்டாடுச்சு :D
செய்தி:நம்ம மராட்டிய மன்னர், 16 வயதில் ஒரு படையை நடத்தி, பிஜப்பூரின், டோர்னோ கோட்டையைப் பிடித்தாராம்.அதுதான் அவர் முதல் போர்.
கேள்வி 2: 36 வயதில் நீங்கள் என்ன செய்தீர்கள்?
(நமக்கு இன்னும் அவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓ வயசு ஆகலீங்க :D)
செய்தி:1666, அவுரங்கசீப், சிவாஜியையும் அவர் 6 வயது மகன் சம்பாஜியையும், டெல்லியில் வீட்டுக் காவலில் (பிடித்து) வைத்து விட்டார். சிவாஜி தனக்கு உடல் நலமில்லை என்று (பொய்) சொல்லி, கடவுளுக்கு இனிப்புகள் நெய்வேத்தியம் செய்ய வேண்டும் என்று சொல்லி தினமும் கோவிலுக்கு இனிப்புகள் வழங்கச் செய்தாராம்.
பல நாள் இப்படிச் செய்து, ஒரு நாள் அந்தப் பெட்டிகளில், ஒவ்வொன்றிலும் இவரும் இவர் மகனும் ஒளிந்து கொண்டு, தப்பி விட்டனராம். இதில், உள்குத்து நிறைய இருக்கலாம் என்று வரலாறு சந்தேகித்துக் கொண்டே இருக்கிறது.
நிற்க! பதிவு ரொம்பப் பெருசாகுது.டா... டா...பை...பை...
பி.கு.: சிவாஜி பற்றிய செய்திகள் உபயம் கூகுள் ஆண்டவர். என்னையும் மதித்து, ‘சி-வா-ஜி’-க்கு அழைத்த நானானி அம்மாவிற்கும், செல்வி அம்மாவிற்கும் இரண்டு இரண்டு ஜிலேபி. பின்னூட்டம் போடுவோருக்கும் இரண்டு உண்டு.
:D :-) ;)
குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'
Wednesday, June 18, 2008
ஜி! – ன்னா ஜிலேபி! ‘சி’-ன்னா சிவாஜி!....ஒண்ணு நானானி அம்மாவுக்கு, ஒண்ணு செல்வி அம்மாவுக்கு!
at 21:09
Subscribe to:
Post Comments (Atom)
20 Comments:
சுத்திட்டேன்! பிழிஞ்சுட்டேன்!
(மொக்கைனா என்னானு) தெரியாம எழுதிட்டேன்.....
கொஞ்சம் பாத்துக் கும்முங்க...ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச்...:-0
புது வண்டே
கட்டளையை சிரமேற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு அழகு தமிழில் அருமையான சிந்தனையுடன் ஆராய்ந்து சுற்றிய சிலேபி சுவைக்கிறது. இனிக்கிறது.
ஜியோ என்னை எங்கோகொண்டு செல்கிறது. கொசு வத்தி சுத்த வைச்சிட்டியே வண்டே
நல்லா இருக்கு - நல் வாழ்த்துகள்
புது வண்டே !
சும்மா சொல்லக்கூடாது - நல்ல்ல்ல்ல்லாவெ ஜிலேபி சுத்திட்ட்டே !
அத எல்லோருக்கும் கொடுத்திட்டீயே !!
இந்தா உனக்கும் ரெண்டு ஜிலேபி
16 - 36 லே ஜிவாஜி சூப்பர் ஜிவாஜி.
new bee,
சுத்தி சுத்தி, ஜிலேபியை எல்லாருக்கும் கொடுத்தூட்டீங்க.அடிஷனலா சிவாஜி செய்தி வேற இலவசம்:)
நல்லா இருந்தது ஜிலேபி.
பரவாயில்லையே புதுவண்டு, சிவாஜிக்கும் இனிப்புக்கும் சம்பந்தம் இருந்தது எனச் சரித்திரச் சான்றுடன் ஆணித் தரமாய் நிரூபித்ததற்கே அள்ளித் தரலாம் மார்க்.
ரீங்காரமிட்டு எனது PiT பதிவில் தேன் குடித்து மகிழ்ந்த தாங்கள் அதற்கு முன்னாலயே நின்று கொண்டிருந்த சிந்திக்க வைக்கும் சிவாஜியை கண்டு கொள்ளாமல் போய் விட்டீர்களே! ஜிந்திக்க வைத்து விடுவாரோ ஜிவாஜி என அஞ்சி வண்டு 'ஜிவ்'னு விட்டதோ ஜூட்?
//ஜியோ என்னை எங்கோகொண்டு செல்கிறது. கொசு வத்தி சுத்த வைச்சிட்டியே வண்டே
//
வாங்க சீனா ஸார்?
நலமா?
ஹி..ஹி..ஹி...இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்....காணோமே அந்தப் பதிவு....சீக்கிரம் போடுங்க....
ஜியோ! பற்றி மேலும் அறிய ஆவல் உள்ளோர், சீனா ஸாரைத் தொடர்பு கொள்ளவும்....
:D :D...இன்னிக்கு நல்லாத் தூக்கம் வரும். :D :D
செல்வி அம்மா!
வாங்க! வாங்க! நலமா?
//இந்தா உனக்கும் ரெண்டு ஜிலேபி//
உங்கப் பெருந்தன்மையப் பாக்கும் போது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
எனக்கு வார்த்தியே வர மாட்டேங்குது! :)))))) (ஆனந்தக் கண்ணீருங்க....)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிமா!
வாங்க வல்லியம்மா,
நலமா? :))))
//new bee,
சுத்தி சுத்தி, ஜிலேபியை எல்லாருக்கும் கொடுத்தூட்டீங்க.அடிஷனலா சிவாஜி செய்தி வேற இலவசம்:)
நல்லா இருந்தது ஜிலேபி.
//
உங்களுக்கே உங்களுக்காக ஒரு கவிதையும் எழுதி இருக்கேனே....அதுவும் எப்படின்னு சொல்லுங்களேன்?ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ச்ச்ச்ச்ச்ச்ச்.:)))
வாங்க ராமலக்ஷ்மி,
நலமா? :)))))))))..
//பரவாயில்லையே புதுவண்டு, சிவாஜிக்கும் இனிப்புக்கும் சம்பந்தம் இருந்தது எனச் சரித்திரச் சான்றுடன் ஆணித் தரமாய் நிரூபித்ததற்கே அள்ளித் தரலாம் மார்க்.
//
ஆஹா! ஆஹா! ராமலக்ஷ்மி, உங்கள மாதிரி நாலு பேர், இல்ல இரண்டு பேர் இருந்தா நான் பொழச்சுக்குவேன்.
//ஜிந்திக்க வைத்து விடுவாரோ ஜிவாஜி என அஞ்சி வண்டு 'ஜிவ்'னு விட்டதோ ஜூட்?
//
கமிங் டு த பாயிண்ட் ஆஃப் வைடாலிட்டி அண்டு டோடாலிட்டி ஆஃப் த சப்ஜக்ட், தேர் இஸ் தி இண்டிவிஜுவாலிட்டி ஆஃப தி ப்ளாகர், விச் இஸ்....
ஏங்க? என்ன சொல்லுறதுன்னு எனக்குத் தெரியலைன்றத, இதுக்கு மேல எப்படிங்க சொல்றது....
ஏதோ தெரியாம பண்ணிட்டேன்...மன்னிச்சு விட்டுருங்களேன்.......:(
Dear RNV,
Jilabi kavithai, unnmaiyilaeyae super! Highlight-ae kadaisi vari thaan! "suthuvoem naama jilaebiyae!" sirippu varudhu, sirippu varudhu, sirikka sirikka sirippu varudhu!
migavum rasithaen, mokkai poeda kattru konda puduvandu vaazhga!
vara vara iyalbu vaazhkaiyilum, mokkai yendra soll idam pera aarambithu vittadhu, valaippokkalin thaakkam thaan, sathiyamaaga mokkai yendra sollai mudhalil therindhu kondadhu ingu thaan! thodarkka narpani!
Anbudan,
noddykanna
ஆஹா இதுக்குப் பேர்தான் மொக்கையா? எப்பா ஏங்க இந்த கொலைவெறி
\\ எப்படி இருக்கு? என்னது கேவலமா இருக்கா! நோ!நோ! செல்லம்! நீ அப்படி எல்லாம் சொல்லக் கூடாது செல்லம்.சிவாஜி கண்ணக் குதிடுவாரு. எந்த சிவாஜி? மராட்டிய மன்னரா? நடிகர் திலகமாவா? யாரா இருந்தா நமக்கென்ன செல்லம்? கண்ணு நம்மளது! அதக் காப்பாத்திக்கணுமே? :-0\\
இந்த வரிகளுக்காகவே உங்களுக்கு 4 ஜிலேபி தரலாம்
எல்லோரும் ஜிலேபியை தேனில் போட்டு தந்தா நம்ம வண்டு சார் ரொம்ப சந்தோஷமாயிடுவர்.
வாங்க நாடி,
நலமா? :)
//"suthuvoem naama jilaebiyae!" sirippu varudhu, sirippu varudhu, sirikka sirikka sirippu varudhu! //
ஹி..ஹி..ஹி..ரொம்ப நன்றி! இத! இத! இதத் தான் நான் எதிர்பார்த்தேன்.
//migavum rasithaen, mokkai poeda kattru konda puduvandu vaazhga!
//
நாலு பேர, சிரிக்க வைக்க முடியும்னா, என்ன வேனா பண்ணலாம்.அதானால், இப்ப மொக்கை போட கத்துகிட்டு இருக்கேன்.:D :D
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நாடிக்கண்ணா!
வாங்க ராப்!
பேர் வித்தியாசமா இருக்கு.நல்லாவும் இருக்கு.
//ஆஹா இதுக்குப் பேர்தான் மொக்கையா?
//
அப்படியா? ஆமாவா? ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))
//எப்பா ஏங்க இந்த கொலைவெறி//
ஹி..ஹி..ஹி..இது கொலைவெறி இல்ல, ஒரு அபரிவிதமான் அன்பு தான்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராப்.
வாங்க தாரணி,
நலமா? :)
//எல்லோரும் ஜிலேபியை தேனில் போட்டு தந்தா நம்ம வண்டு சார் ரொம்ப சந்தோஷமாயிடுவர்.
//
ஆஹா! தேனில் போட்ட ஜிலேபியா? :P :P :D :D...உங்களுக்குரொம்ப நல்ல மனசு.வாழ்க! வளர்க! :))
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க தாரணி!
மொக்கைன்னா என்னான்னு தெரியாமையா....? இது..இது..இதுதான் மொக்கை. கொஞ்சம் தலைசுத்துச்சு..சுத்திசுத்தி(ஜிலேபியை அல்ல) பாயிண்டை தொட்டுட்டு தொட்டுட்டு வந்தது சூப்பர்!!நல்லவேளை..பதிவில் இனிப்புப் பெட்டி ஏதும் இல்லை. இருந்திருந்தால் அதில் ஒளிந்து கொண்டு தப்பித்திருப்பீர்கள்!!!
நல்லாருந்துது, நியூபீ!!!
வாங்க நானானி அம்மா!
நலமா? :)
//பாயிண்டை தொட்டுட்டு தொட்டுட்டு வந்தது சூப்பர்//
ஹி..ஹி..ஹி..என்ன எழுதுறதுன்னு தெரிஞ்சாத் தான் தொட்டுட்டு, உள்ளே போயிருப்பேனே.....தெரியாமத் தான் அலைபாஞ்சுட்டேன்.....
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சிமா!:)
சாரிப்பா. கவிதையைப் பத்திச் சொல்லாம விட்டேன்.
முதன் முதலா என் பேரில அதுவும் ஜிலேபி மகானுடன் இணைத்து வந்திருக்கும் இனிப்புக் கவிதைக்கு வண்டே புது வண்டே உனக்கு நன்றி.,
நீ மலரிலிருந்து எடுக்கும் மது(தேன்)
எப்பவும் வற்றாமல் பதிவுகளில்
பொங்கி வர வாழ்த்துகள்.
வல்லியம்மா,
வாங்க! வாங்க! நலமா?:D :D
வருத்தப்படாதீங்கமா!:( சும்மா தான் கேட்டேன்.
//நீ மலரிலிருந்து எடுக்கும் மது(தேன்)
எப்பவும் வற்றாமல் பதிவுகளில்
பொங்கி வர வாழ்த்துகள்.//
நிஜாமாவே, மனசு சந்தோஷப்படுதும்மா! I am blessed to have ur wishes.
மிக்க நன்றிமா..:))
ஆண்டவா என்ன கொடுமை இது!
:))))
Post a Comment