குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Tuesday, May 13, 2008

PIT - மே மாதப் போட்டிக்கு, என்னோட 'ஜோடி'

ஏய்.ஓடிப்போலாமா?

ம்.சரி.மழை பேஞ்சு , கிளைமேட் சூப்பரா இருக்கு.ஆனா,எப்புடி?

ஒரு ஐடியா.அந்தக் கார்?

லைசென்ஸ் இருக்கா?

இந்தப் புதுவண்டு PIT-க்குப் படம் எடுக்குறேன்னு, நம்மள வீட்டுக்குள்ள வச்சுட்டு, என் லைசென்ஸக் கூட ஒளிச்சு வச்சுருச்சு.

இரு இரு. நம்ம சக வலைப்பதிவர்கள் கிட்டக் கேப்போம். அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.நல்லதா ஒரு வழி சொல்லுவாங்க.ஓகேவா?

ஓகே.

ஆமா எங்க போறோம்?

வேற எங்க,நம்ம PIT-க்குத் தான்.ஓகேவா?

டபுள் ஓகே.:)

-------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள முதல் படம் PIT போட்டிக்கு.கீழே வரும் மற்றவை பார்வைக்கு.
படங்கள் எப்புடின்னு சொல்லுங்க மக்களே.தேறுமா?.போட்டிப் படம் ஓகேவா?

31 Comments:

துளசி கோபால் said...

ஓகே

NewBee said...

வாங்க வாங்க டீச்சர்.நலமா?

இப்பத்தான் PIT-ல உரல் கொடுத்துட்டு வரேன்.வந்து பார்த்தா உங்க 'ஓகே'.:)))

வருகைக்கும், 'ஓகெ'-க்கும் நன்றி டீச்சர்.:D

Durai Thiyagaraj said...

ஏதோ புரியர மாதிரி இருக்கு.உங்க கமெண்ட போடுங்க

நானானி said...

வித்தியாசமாய் நல்லாருக்கு!புது வண்டு!
முதல் படத்தில் இருக்கும் ஜோடி,'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு
ஓடிப்போகப் போகுதா? இல்லை ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கப் போகுதா? சொல் வண்டே!!

NewBee said...

வாங்க துரை தியாகராஜன்.

//உங்க கமெண்ட போடுங்க//

ம்ம்.புரியலையே.

வருகைக்கு நன்றி.:)

NewBee said...

வாங்க வாங்க நானானி. நலமா?

வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி :)))

கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடப் பாறாங்க.'Just married' tag- போட்ட அப்புறமும் புது வண்டு வெளில விடலயாம்.அதான் 'ஒடுற' திட்டம் போடுறாங்க.:)))

ரசிகன் said...

ஆஹா.. எல்லா படங்களும் ஏதோ கனவு சீன்ல வர மாதிரியே இருக்கு:)

ஏதோ போஸ்ட் புரடக்‌ஷன்ங்கறாங்களே,.,அதுல நீங்க எக்ஸ்பர்ட் போல ..

சூப்பரு:)

ரசிகன் said...

//Tuesday, May 13, 2008[Score: out of votes]
Pathivu Toolbar ©2008thamizmanam.com
PIT - மே மாதப் போட்டிக்கு, என்னோட 'ஜோடி'

ஏய்.ஓடிப்போலாமா?

ம்.சரி.மழை பேஞ்சு , கிளைமேட் சூப்பரா இருக்கு.ஆனா,எப்புடி?

ஒரு ஐடியா.அந்தக் கார்?

லைசென்ஸ் இருக்கா?

இந்தப் புதுவண்டு PIT-க்குப் படம் எடுக்குறேன்னு, நம்மள வீட்டுக்குள்ள வச்சுட்டு, என் லைசென்ஸக் கூட ஒளிச்சு வச்சுருச்சு.

இரு இரு. நம்ம சக வலைப்பதிவர்கள் கிட்டக் கேப்போம். அவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.நல்லதா ஒரு வழி சொல்லுவாங்க.ஓகேவா?

ஓகே.

ஆமா எங்க போறோம்?

வேற எங்க,நம்ம PIT-க்குத் தான்.ஓகேவா?

டபுள் ஓகே.:)

//

அடடா.. என்னா ஒரு ரொமாட்டிக் கலந்துரையாடல்..
இதை ஒட்டுக்கேட்டு எழுதுன புதுத்தேனிக்கு பாராட்டுக்கள்:)

வல்லிசிம்ஹன் said...

சூப்பர் படம். மென்மையா இருக்கு.
மத்த படங்களும் நல்லா இருக்கே.

ஸ்பெஷலா அந்த இலைகள்.!!!

PPattian : புபட்டியன் said...

ரெண்டாவது (இலை) படத்தில நடுவில் Focus வைத்து சுற்றிலும் Blur பண்ணினால் அதையே போட்டிக்கு வைக்கலாம் என்பது என் கருத்து.

முதல் படமும் வித்தியாசமா நல்லாத்தான் இருக்கு.. வாழ்த்துக்கள்..

ஓவியா said...

முதல் படம் அழகு... கைக்கடிகார ஜோடிகளும் அழகு. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு! வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

புது வண்டே

PIT போட்டிக்கு 4 படம் அனுப்பற அளவுக்குத் தேறிட்டே போல இருக்கு - டபுள் ஓக்கே

ரொம்ப நல்லா இருக்கு - எங்கே போய் புடிச்சே இந்த இடத்தே

ரெண்டு பூனக்குட்டியும் லக்கி தான்

இலயும் பூவும் சூப்பரோ சூப்பர்

நல்வாழ்த்துகள் - வெற்றி பெற

செல்வி ஷங்கர்
---------------

NewBee said...

ரசிகன்,

வாங்க வாங்க.நலமா? :))

என் (சிறு) முதல் போஸ்ட் பொரட்க்ஷன் முயற்சியை வாழ்த்திய ரசிகன்....

ரொம்ப நல்லவர், வல்லவர்.

:D :D :D :D

வருகைக்குக் ரசிப்பிற்கும் நன்றி ரசிகன் :-)

NewBee said...

//வல்லிசிம்ஹன் said...
சூப்பர் படம். மென்மையா இருக்கு.
மத்த படங்களும் நல்லா இருக்கே.

ஸ்பெஷலா அந்த இலைகள்.!!!
//

வல்லி அம்மா,

வாங்க வாங்க.எப்படி இருக்கீங்க.

நானும் இரண்டாவது படம் இலைகளைத்தான் போட்டிக்காஅ வெச்சிருந்தேன்.ஆனா, 'ஜோடி' என்ற தலைப்பிற்குப் பொருந்துமா என்று சந்தேகம் வந்துடுச்சு.அதான் 'ஓடிப்போலாமா'வ
அனுப்பிட்டேன்.

என்ன சொல்லுறீங்க? மாத்திடுவோமா? இன்னும் ஒரு நாள் இருக்கு.நம்ம PIT-காரவுக ரொம்ப நல்லவுங்க. :-)))))

NewBee said...

//PPattian : புபட்டியன் said...
ரெண்டாவது (இலை) படத்தில நடுவில் Focus வைத்து சுற்றிலும் Blur பண்ணினால் அதையே போட்டிக்கு வைக்கலாம் என்பது என் கருத்து.
முதல் படமும் வித்தியாசமா நல்லாத்தான் இருக்கு.. வாழ்த்துக்கள்..
//

வாங்க பட்டியன்,

வருகைக்கு நன்றி.முதலில் நானும் இலைகளைத்தான் போட்டிக்கு அனுப்பலாம்னு இருந்தேன்.'ஜோடி' என்ற தலைப்பிற்குப் பொருந்துவதை விட 'இரண்டு' என்ற தலைப்புக்குத் தான் சரியாய் இருந்த மாதிரி தோணுச்சு.

என்ன சொல்றீங்க? வல்லி அம்மாவும் அதுதான் சொல்லுறாங்க.

NewBee said...

//cheena (சீனா) said...
புது வண்டே
PIT போட்டிக்கு 4 படம் அனுப்பற அளவுக்குத் தேறிட்டே போல இருக்கு - டபுள் ஓக்கே
ரொம்ப நல்லா இருக்கு - எங்கே போய் புடிச்சே இந்த இடத்தே
-செல்வி ஷங்கர்//

வாங்க சீனா ஸார்.வாங்க செல்வி அம்மா.இருவரையும் ஒரு சேரப் பார்க்குறதும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

இந்த இடம், நம்ம வீட்டு ஜன்னல் தானுங்க ;-)

NewBee said...
This comment has been removed by the author.
NewBee said...

//ஓவியா said...
முதல் படம் அழகு... கைக்கடிகார ஜோடிகளும் அழகு. நல்ல கற்பனை வளம் உங்களுக்கு! வாழ்த்துகள்.
//

வாங்க ஓவியா,

தங்கள் பெயர் அழகாக உள்ளது.

வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஓவியா.

nathas said...

முதல் படத்தின் உரையாடல் நல்லா இருக்குங்க... வாழ்த்துக்கள் !!!

Noddykanna said...

Dear RNV,

Jodi padam, JODI No 1!
Kai vasam thozhil irukku! solla vandhadha padam yedukka location yelaam thaevai illa-nnu nalla puriyudhu ... cienma kaaranga paatha informative-aa irukum!

Gr8. Keep it up!

Anbudan,
Udanpirappu

NewBee said...

அன்பு நாடிக்கண்ணா,

நலமா? வருகைக்கு நன்றி :-).

// cienma kaaranga paatha informative-aa irukum!//

:D :D :D
ஹி..ஹி..ஹி..

NewBee said...

வாங்க நாதஸ்,

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :))

நட்டு said...

விளம்பரக் கம்பெனி ஆரம்பீங்க.படங்கள் நல்லாயிருக்கு.

NewBee said...

//நட்டு said...
விளம்பரக் கம்பெனி ஆரம்பீங்க.படங்கள் நல்லாயிருக்கு.
//

வாங்க நட்டு,

தங்கள் வருகைக்கும் (ஜில்லென்ற) வாழ்த்திற்கும் நன்றி! நன்றி! :) :) :D

ராமலக்ஷ்மி said...

ஓடிப் போகத் திட்டம் போட்ட ஜோடி பின்னர் ஊருக்கும் உறவுக்கும் பயந்து மேலேறிப் பதுங்கி விட்ட மாதிரி கதையை முடித்து விட்டீர்களே, ஏன் வண்டு?

எல்லாப் படங்களும் அருமை. படத்துக்கு கதை சொல்லியிருக்கும் விதமும் புதுமை. நட்டு நல்ல யோசனைதான் சொல்லியிருக்கிறார்.

NewBee said...

//ராமலக்ஷ்மி said... //

வாங்க ராம்லக்ஷ்மி :))).வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//ஓடிப் போகத் திட்டம் போட்ட ஜோடி பின்னர் ஊருக்கும் உறவுக்கும் பயந்து மேலேறிப் பதுங்கி விட்ட மாதிரி கதையை முடித்து விட்டீர்களே, ஏன் வண்டு?
//

ஹி..ஹி..ஹி..கதையைத் தெளிவாச் சொல்லாம விட்டுட்டேன்.இது கல்யாணம் ஆன ஜோடி.அவுங்க வீட்டிக்குள்ளேயே அவுங்களை,'படம் எடுக்கும் வரை, வெளியேப் போகக்கூடதுன்னு',புதுவண்டு அராஜகம் பண்ணிடுச்சு.

அதான், ஜஸ்ட் ஒரு, ஒரு மணி நேரம் பீச் வரைக்கும் ஓடிப்போக, லைசென்ஸ் இல்லாமக் கார்ல எப்படித் தப்பிக்கிறதுன்னு, வலையுல நல்லுள்ளங்கள்கிட்ட கேக்குறாங்க.:D :D :D

பி.கு.:யப்ப்பாஆஆஆஆஆஅ! என்னமா லாஜிக் யோசிக்க வேண்டியிருக்கு.இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டா,5 பாட்டு 3 சண்டை சேர்த்து ஒரு படம் எடுத்துறலாமோ?

:))))).இது ச்சும்மாஆஆஆஅ :)))))).

ஹை இந்தப் படம் பேரு கூட நல்லா இருக்கே.'இது ச்சும்மாஆஆஆஆஅ' :D

ராமலக்ஷ்மி said...

ஹா.. ஹாஹா! நல்லாவே சமாளிச்சிட்டீங்க! இந்த ஜோடியைப் போலவே pose கொடுக்கும் பொடிசுகளைப் பார்க்கணும்னா என் வலைப் பதிவில் "காலத்தின் கட்டாயம்" என்ற இடுகையைக் காண்க. என் தங்கை தன் மகன்களை எடுத்த அந்தப் படத்துக்காகவே நான் எழுதிய நகைச் சுவை கவிதை. படம் என்னிதில்லாததால் போட்டிக்குள் அது போக முடியவில்லை!
http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_9078.html

NewBee said...

//ராமலக்ஷ்மி said...
ஹா.. ஹாஹா! நல்லாவே சமாளிச்சிட்டீங்க! இந்த ஜோடியைப் போலவே pose கொடுக்கும் பொடிசுகளைப் பார்க்கணும்னா என் வலைப் பதிவில் "காலத்தின் கட்டாயம்" என்ற இடுகையைக் காண்க
//

ஹி..ஹி..ஹி..ஒண்ணு பண்ணுவோமா? நாம ரெண்டு பேரும் சேர்ந்து, இந்த இரண்டு, கதைகளையும் டெவலப் பண்ணி ஒரு படம் எடுப்போமா?

யாரு பாக்குறதா? நல்ல கேள்வி.நான் எஸ்....:D :D :D

ராமலக்ஷ்மி said...

நான் ரெடி. ஏன்னா பள்ளிப் பருவத்தில் தமிழ் வகுப்பில் போடும் நாடகங்களுக்கும், வீட்டில் தங்கைகளைச் சேர்த்துக் கொண்டு நடத்தும் கல்சுரல் நிகழ்ச்சிகளுக்கும் கதை,வசனம்,இயக்கம்,கொரியோகிராஃபி எல்லாம் எல்லாம் நானே..! பார்த்து ரசிக்கவும் ஆடியன்ஸ் இருந்தாங்க!

ஆனா இப்போ,
"யாரு பாக்குறதா? நல்ல கேள்வி."
நல்ல கேள்வியேதான் NewBee!

Priya said...

நாலு படங்களுமே சூப்பர் எனக்கு ரொம்ப பிடிச்சது இலைகள்தான்

NewBee said...

வாங்க ப்ரியா,

வருகைக்கும் சூப்பருக்கும் ரொம்ப நன்றி :-))))

blogger templates 3 columns | Make Money Online