குழந்தைகளுக்கானப் படக்கதை - 'வண்டு-சிண்டு கதைகள்'

Thursday, April 17, 2008

காதலிக்கு வாழ்த்து! காதலனுக்கு வாழ்த்து! பெற்றோர்க்கு வாழ்த்து! கவிஞனின் ஆப்பு!

காதலிக்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~
ஒற்றை ரோஜா அழகு!
கொடுப்பவர் கொடுத்தால்
இன்னும் அழகு...



அற்றைத் திங்கள் அழகு!
இருப்பவர் இருந்தால்
இன்னும் அழகு...

பற்றைத் துறப்பது அழகு!
பற்றாமல் (தீ) பற்றுவது
இன்னும் அழகு...

வெட்டை வெளித் தனிமை;
மொட்டை மாடி இனிமை;
சுட்டுவிட்ட நிலவு;
சுடும் கனவு;

யாவும் பெற்று கசிந்துருக வாழ்த்துகள்!
யாவும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!



காதலுனுக்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~~~
காதல் அழகு!
காதலி கிடைத்தால்
இன்னும் அழகு...


யமஹா அழகு!
பில்லியன் உயர்த்தினால்
இன்னும் அழகு...

பீட்சா அழகு!
க்ரெடிட்கார்ட் இருந்தால்
இன்னும் அழகு...

விட்டு விட்ட சிகரெட்;
கட்டி விட்ட ஃபோன்பில்;
சுட்டுவிட்ட நிலவு;
சுடும் கனவு;

யாவும் பெற்று கசிந்துருக வாழ்த்துகள்!
யாவும் கொடுத்து பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!


பெற்றோர்க்கு வாழ்த்து!
~~~~~~~~~~~~~~~~~~~~

பெற்ற பிள்ளைகள் அழகு!
பட்டம் பெற்றால்
இன்னும் அழகு...

கட்டிய வீடு அழகு!
படுத்ததும் வரும் தூக்கம்
இன்னும் அழகு...

கடமைகள் அழகு!
இனிதே முடிந்தால்
இன்னும் அழகு...



நீண்ட ஆயுள்;
நீடிக்கும் மகிழ்ச்சி;
நிறைய பேரப்பிள்ளைகள்;
நிம்மதியான உறக்கம்;

யாவும் பெற்று மகிழ்ந்திருக்க வாழ்த்துகள்!
யாவும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!


கவிஞனின் ஆப்பு!
~~~~~~~~~~~~~~~~

காதல் அழகு!
திருமணத்தில் முடிந்தால்
இன்னும் அழகு...

காதலன் அழகு!
(மாலையிட்ட பிறகும்)
மாறாமல் இருந்தால்
இன்னும் அழகு...




காதலி அழகு!
(மாலையிட்ட பிறகும்)
பேசாமல் இருந்தால்
இன்னும் அழகு...

தாய்தந்தை கனவு அழகு!
சற்று வளைந்து கொடுத்தால்
இன்னும் அழகு...

கவிதை அழகு!
பொய் கலந்தால்
இன்னும் அழகு...

கற்பனை அழகு!
தொடர்பில்லாமல் இருந்தால்
இன்னும் அழகு...

அழகோ அழகு!
அழகோ அழகு!
அழகோ அழகு!

பி.கு.: ‘இந்தச் சுட்டியில் உள்ள 5 தவறுகளைச் சொல்லவும்’- போட்டியின் விடைகள் வெள்ளி இரவு 12:00 மணிக்கு அறிவிக்கப் படும். இன்னமும் யாரும் விடை சொல்லவில்லை என்றாலும். ;-)

Wednesday, April 2, 2008

இன்று ஏன் புதிதாய்?


நீ கடிகாரம் தொலைத்த பொழுது
நிமிடத்திற்கு நான்கு முறை
என் பேர் சொல்லி அழைத்து,
நேரம் கேட்டதால்...

புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட கடிகாரத்தை
‘இருக்கட்டும் இது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ பசியாய் வந்த பொழுது
தண்ணீர்க்குவளையும் உப்புத்தூவியும்
என் பேர் சொல்லி அழைத்து,
வேண்டும் என்றதால்...

புதிதாய் வாங்கிய உன் பெயர் போட்ட இரண்டையும்
‘காணோமே அது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ பிரச்சனையோடு வந்த பொழுது
முழுதாய் ஒரு நிமிடம் பார்ப்பாய்
என் பேர் சொல்லி அழைத்து,
என்முகம் என்பதனால்...

புதிதாய் வந்த இழப்பையும் கண்ணீரையும்
‘சரி போகட்டும் அது!’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

நீ (உன்) தாய் தந்தையோடு வந்த பொழுது
பேச்சுவார்த்தை முற்றிய பிறகும்
என் பேர் சொல்லி அழைத்து,
என்னைத் திட்டாமல் விட்டதனால்...

புதிது புதிதாய், உன் பெயர் போட்டு வந்த சண்டைகளையும்
‘சாவி போட்டே இருக்கட்டும்’ என்று ஒளித்து வைத்தேன்.

உனக்காக;

இப்படி ஒளித்துவைத்து ஒளித்துவைத்து
உன்னைக் காதலித்ததால் தான்
அப்படி என்ன செய்துவிட்டாய் ‘எனக்காக?’, என்று
என் பேர் சொல்லி அழைத்து...

புதிதாய் ஒருவலி தந்தாயே இன்று;
‘அதுவும் இருக்கட்டும்’ என்று ஒளித்து வைக்கவா?

உனக்காக.

ஒலிக்கும்... ...

blogger templates 3 columns | Make Money Online